விரைவில் யூஎஸ்பி 3.2 : 20 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா டிரான்ஸ்பர் நிகழ்த்தும்.!

|

வெவ்வேறு கேஜெட்களுக்கு இடையில் நிறைய தரவுகளை காப்பி செய்யும் அனைவருக்குமே ஒரு குட் நியூஸ். அதாவது அடுத்த யூஎஸ்பி அப்டேட் ஆனது உங்களின் தரவு பரிமாற்ற வேகத்தை மிக இரட்டிப்பாக நிகழ்த்தும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

விரைவில் யூஎஸ்பி 3.2 : 20 ஜிபிபிஎஸ் வேகத்தில் டேட்டா டிரான்ஸ்பர்.!

யூஎஸ்பி போர்ட் என்பது நமது டிஜிட்டல் வாழ்க்கையில் மிகவும் பொதுவானவொரு இணைப்பு போர்ட் ஆகும். இது ஒரு கேஜெட்டை மற்றொரு கேஜெட் உடன் இணைக்க அனுமதிக்கிறது. உங்கள் லேப்டாப்பில் ஒரு மவுஸை இணைபதில் தொடங்கி, உங்கள் ஆண்ட்ராய்டு போன் பேட்டரி சார்ஜ் செய்யப்படுவது, திரைப்படம் அல்லது பிற தரவை கருவி மற்றும் ஹார்ட் ட்ரைவ்விற்கு இடையே பரிமாறுவது என அனைத்து பணிகளையுமே செய்ய ஒரு யூஎஸ்பி போர்ட் மற்றும் கம்படிபிள் கேபிள் இருந்தால் போதும்.

ஒரு விநாடிக்கு 10 கிகாபிட்களில் மட்டுமே

ஒரு விநாடிக்கு 10 கிகாபிட்களில் மட்டுமே

தற்போதைய யூஎஸ்பி தரநிலை - யூஎஸ்பி 3.1 - ஒரு விநாடிக்கு 10 கிகாபிட்களில் மட்டுமே தரவை பரிமாற்றம் செய்யும் வேகம் கொண்டிருக்கிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த தொழில்நுட்பம் உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது ஒரு நல்ல செய்தியாக இருந்த போதிலும், இது சிறிது மெதுவாக செயல்படுவதாக உணரப்பட்டது.

புதிய தற்கால யூஎஸ்பி-சி இணைப்பிகள் மற்றும் கேபிள்கள்

புதிய தற்கால யூஎஸ்பி-சி இணைப்பிகள் மற்றும் கேபிள்கள்

இதனை தொடர்ந்து வெளியாகும் அடுத்த யூஎஸ்பி அப்டேட் அதாவது புதிய யூஎஸ்பி 3.2 தரநிலை ஆனது புதிய தற்கால யூஎஸ்பி-சி இணைப்பிகள் மற்றும் கேபிள்கள் கொண்டு வெளியாகும். அவ்வண்ணம் புதிய உள் கம்பிகளின் காரணமாக, விநாடிக்கு 20 ஜிகாபைட்டுகளுக்கான தரவு பரிமாற்ற வேக வரம்பை இது வழங்கும். அதாவது யூஎஸ்பி 3.1-ஐ விட இரண்டு மடங்கு அதிக வேகம்.

கம்பிகளின் உள்ளே உள்ள தொழில்நுட்பம்

கம்பிகளின் உள்ளே உள்ள தொழில்நுட்பம்

யூஎஸ்பி 3.2 கேபிளை பொறுத்தவரை, கேபிள் கம்பிகளின் உள்ளே உள்ள தொழில்நுட்பம் தான் டிஜிட்டல் மேம்பாட்டை பெறுகிறது. இது வரும் ஆண்டுகளில் வெளியாகும் புதிய சாதனங்களின் விவரக்குறிப்புகளில் இடம்பெறலாம்.

சரி, யூஎஸ்பி 3.2 நன்மைகளை நாம் எப்போது அனுபவிப்போம்.?

சரி, யூஎஸ்பி 3.2 நன்மைகளை நாம் எப்போது அனுபவிப்போம்.?

மிக விரைவில் இல்லை. யூஎஸ்பி ஐஎப் எனப்படும் யூஎஸ்பி தரவுத் தரங்களை நிர்ணயிக்கும் குழுவின் தலைவரின் கருத்துப்படி, முதல் யூஎஸ்பி 3.2 தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 12 முதல் 18 மாதங்கள் வரை எடுக்கும் என்று கூறியுள்ளார். அதுவரை தற்போதைய அனைத்து யூஎஸ்பி டைப்-சி கேபிள்களும் நன்றாக வேலை செய்யும் என்பதில் குழப்பம் வேண்டாம்.

சிறப்பான திறனை வெளிகொணரும்

சிறப்பான திறனை வெளிகொணரும்

யூஎஸ்பி 3.2-வின் பவர் சார்ஜ் செய்யும் திறன்கள் சார்ந்த எந்த செய்தியும் இதுவரை இல்லை. யூஎஸ்பி டைப் சி ஆனது வேக முன்னேற்றங்களைக் கொண்டு, ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகளில் விரைவான பரிமாற்ற வேகத்தை கடைபிடிக்கிறது. அதே கொள்கை எல்லா யூஎஸ்பி 3.2 கேபிளில் பின்பற்றப்பட அது மிகவும் சிறப்பான திறனை வெளிகொணரும் என்பதில் சந்தேகமேயில்லை.

Best Mobiles in India

English summary
USB 3.2 Will Be Twice As Fast While Copying Data From Your Hard Drive, Phone Or PC At 20 Gbps. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X