Home
Gadgets

தர லோக்கலுக்கு இறங்கிய Apple.. பயத்தில் Vivo, Samsung, OnePlus, Oppo, Xiaomi.. வரிசையாக வரும் புது Tablet-கள்!

ஏ16 சிப் உடனான புதிய ஐபேட் 2025 மாடல் ஆனது ரூ.34,900 என்கிற விலைக்கு அறிமுகமாகி இந்திய டேப்லெட் சந்தையை ஒரு உலுக்கு உலுக்கியுள்ளது என்றே கூறலாம். இந்த அளவிற்கு "இறங்கி வந்து" ஆப்பிள் வைத்துள்ளது இந்த விலை நிர்ணயமானது பல ஆண்ட்ராய்டு டேப்லெட் தயாரிப்பாளர்களை தூண்டி விட்டது போல் தெரிகிறது

ஆப்பிள் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை, அதன் பட்ஜெட்-விலை டிவைஸ்களுக்காக ஒதுக்கி விட்டதை போலவே தெரிகிறது. முதலில் ரூ.59,900 க்கு ஐபோன் 16இ மாடலை அறிமுகம் செய்தது. பின்னர் அதே ஐபோன் 16இ விலைக்கு புதிய ஐபேட் ஏர் 2025 மாடல்களையும், கூடவே ஆண்ட்ராய்டு போன் விலைக்கு (ரூ.34,900) ஐபேட் 2025 மாடல்களையும் அறிமுகம் செய்தது.

தர லோக்கலுக்கு இறங்கிய Apple.. வரிசையாக வரும் புது Tablet-கள்!

ஆப்பிள் நிறுவனம் பட்ஜெட் விலைக்குள் இறங்கி வருவது மற்ற ஆண்ட்ராய்டு டேப்லெட் தயாரிப்பாளர்களுக்கு நல்லது அல்ல. "இந்த விலைக்கு ஐபேட் கிடைக்கும் போது நாம் ஏன் ஆண்ட்ராய்டு டேப்லெட் வாங்க வேண்டும்?" என்கிற எண்ணம் பலரையும் ஆப்பிளின் பக்கம் சாய்த்துவிடும். இதை சரிசெய்ய. பல ஆண்ட்ராய்டு டேப்லெட் தயாரிப்பாளர்கள் தத்தம் புதிய டேப்லெட் மாடல்களின் (Upcoming Android Tablets) அறிமுகத்தை உறுதி செய்தவண்ணம் உள்ளன.

01. விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro): 2025 ஏப்ரல் மாதத்தில், விவோ நிறுவனம் ஒரு மெகா வெளியீட்டு நிகழ்வை நடத்தி அதன் பல தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவைகளில் விவோவின் புதிய டேப்லெட் - விவோ பேட் 4 ப்ரோ (Vivo Pad 4 Pro) மாடலும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்?
3.1கே ரெசல்யூஷன் உடனான 12.95-இன்ச் எல்சிடி பேனல், 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா, 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒரிஜின்ஓஎஸ் 5 மூலம் இயக்கப்படலாம்.

மேலும் டைமன்சிட்டி 9400 சிப்செட், 8 ஜிபி, 12 ஜிபி அல்லது 16 ஜிபி ரேம், 512 ஜிபி வரை ஸ்டோரேஜ், 66W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு, 12,000mAh பேட்டரியை பேக் செய்யலாம். விலையை பொறுத்தவரை சீனாவில் விவோ பேட் 4 ப்ரோ டேப்லெட் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.45,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.

02. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ (Samsung Galaxy Tab S10 FE) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் (Samsung Galaxy Tab S10 FE Plus): சாம்சங்கின் இந்த 2 டேப்லெட்களுமே அடுத்த 2 வாரங்களுக்குள் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ, கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டும் ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பை கொண்ட அலுமினிய பாடியை பெறலாம். இரண்டும் எக்ஸினோஸ் 1580 சிப்செட்டால் இயக்கப்படலாம். இரண்டும் எக்ஸ்பேன்டபிள் ஸ்டோரேஜ் உடன் வரலாம் மற்றும் வைஃபை 6இ, என்எப்சி, ப்ளூடூத் 5.3 மற்றும் ஆப்ஷனல் 5ஜி ஆதரவுடன் வரலாம்

எப்இ மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2304 x 1440 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 10.9-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம், 8000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

எப்இ பிளஸ் மாடலில் 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2880 x 1800 பிக்சல்ஸ் மற்றும் எஸ் பென் ஆதரவுடன் 13.1-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே பேக் செய்யப்படலாம். 10.090mAh பேட்டரியை கொண்டிருக்கலாம். 45W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம். 13MP ரியர் கேமரா மற்றும் 12MP செல்பீ கேமராவை கொண்டிருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 எப்இ என்ன விலைக்கு வரும்? வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.54,400. வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700. 5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.63,700. 5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.73,100

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்10 பிளஸ் எப்இ என்ன விலைக்கு வரும்? வைஃபை ஒன்லி 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.70,200. வைஃபை ஒன்லி 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600. 5ஜி சப்போர்ட் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.79,600. 5ஜி சப்போர்ட் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.89,000

03. ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro): இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் - ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 3.4கே ரெசல்யூஷன் உடனான 13.2-இன்ச் எல்சிடி பேனலை கொண்டிருக்கலாம்.

ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 க்கான கலர்ஓஎஸ்ஸில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சுமார் 10,000mAh திறன் கொண்ட பேட்டரியை கொண்டிருக்கலாம்.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம். ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும். பெரும்பாலும் இது ஒப்போ பேட் 4 ப்ரோவை போலவே இருக்கும். விலை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

04. ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro): டிப்ஸ்டர் எக்ஸ்பிரீயன்ஸ் மோர் வழியாக கிடைத்த தகவலின்படி ஒப்போ நிறுவனம் அதன் ஒப்போ பேட் 4 ப்ரோ (Oppo Pad 4 Pro) மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இது 13.2-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் எலைட் சிப்செட் மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 12,000mAh பேட்டரி ஆகியவற்றை கொண்டிருக்கும். விலை விவரங்கள் பற்றிய தகவல் இல்லை.

05. ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ (Xiaomi Pad 7s Pro): இது 2025 ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட பட்டுள்ளது இது 14-இன்ச் ஓஎல்இடி பேனல் மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ பேட் 7எஸ் ப்ரோ டேப்லெட் மாடலின் விலை விவரங்கள் குறித்த தகவல்களும் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Upcoming Android Tablets to Compete With Apple iPad 2025 Models
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X