Home
Gadgets

முழுசா ரூ.10,000 PRICE CUT.. புதுசு வந்ததும் பழைய iPad மாடல்கள் மீது.. வாய் பிளக்க வைக்கும் விலை குறைப்பு!

இந்தியாவில் புதிய ஐபாட் ஏர் 2024 (iPad Air 2024) மற்றும் ஐபாட் ப்ரோ 2024 (iPad Pro 2024) மாடல்களை அறிமுகப்படுத்திய கையோடு, ஆப்பிள் நிறுவனம் அதன் "சற்றே பழைய" ஐபாட் 2022 (iPad 2022) மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது.

2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்டாண்டர்ட் ஐபாட் மாடலின் அப்கிரேட்டட் வெர்ஷன் ஆனது இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரக்கூடும் என்றாலும் கூட ஐபாட் 2022 மாடல்கள் மீது அறிவிக்கப்பட்டுள்ள இந்த "முன்கூட்டிய" விலை குறைப்பானது ஆப்பிள் நிறுவனத்தின் சுவாரஸ்யமான வியாபார தந்திரமாக உள்ளது.

புதுசு வந்ததும் பழைய iPad மாடல்கள் மீது விலை குறைப்பு!

அப்படியாக எந்தெந்த ஆப்பிள் ஐபாட் 2022 மாடல்கள் மீது எவ்வளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? அவைகளின் அசல் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இந்திய சந்தையில் புதிதாக அறிமுகமான ஐபாட் ஏர் 2024 மற்றும் ஐபாட் ப்ரோ 2024 மாடல்களின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

பழைய விலை VS புதிய விலை: ஆப்பிளின் ஐபாட் 10த் ஜெனரஷன் (iPad 10th Generation) மாடல் ஆனது ஏ14 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் இது நிறுவனத்திடமிருந்து கஸ்டம் லைட்னிங் போர்ட்டில் இருந்து யூஎஸ்பி டைப்-சி போர்ட்டிற்கு மாறிய கடைசி மாடலாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த ஐபாட் மாடலின், 64ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.34,900 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் அசல் விலை ரூ.39,900 ஆகும். இதேபோல 64ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது தற்போது ரூ.49,900 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னதாக இது ரூ.54,900 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல 256ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.49,900 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த வேரியண்ட்டின் அசல் விலை ரூ.54,900 ஆகும். மேலும் 256 ஜிபி ஸ்டோரேஜ் வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது தற்போது ரூ.64,900 க்கு வாங்க கிடைக்கிறது. முன்னதாக இது ரூ.74,900 ஆக இருந்தது.

இந்த புதிய விலை விவரங்கள், ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோரில் ஏற்கனவே பிரதிபலிக்கிறது மற்றும் இந்த ஐபாட் மாடலானது ப்ளூ, பிங்க், சில்வர் மற்றும் யெல்லோ கலர்களில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. மேலும் குறைக்கப்பட்ட விலையில் ஆப்பிள் பிகேசி (Apple BKC) மற்றும் ஆப்பிள் சாக்கெட் (Apple Saket) ஸ்டோர்களிலும் வாங்கலாம்.

ஐபாட் 2022 மாடலின் முக்கிய அம்சங்கள்: இது 500 நைட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 10.9-இன்ச் (1,640x2,360 பிக்சல்கள்) லிக்விட் ரெடினா டிஸ்பிளே, ஏ14 பயோனிக் சிப், வைஃபை 6, 5ஜி கனெக்டிவிட்டி, 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் செல்பீ கேமரா, 4கே ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்வதற்கான ஆதரவுடன் 12-மெகாபிக்சல் வைட் ஆங்கிள் ரியர் கேமரா போன்ற முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

புதிதாக அறிமுகமான ஐபாட் ஏர் 2024 மற்றும் ஐபாட் ப்ரோ 2024 மாடல்களின் விலை விவரங்கள்: மே 7 நடந்த ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்வில் அறிமுகமான ஆறாவது தலைமுறை ஐபாட் ஏர் மாடல் ஆனது 10.9 இன்ச் மற்றும் 13 இன்ச் டிஸ்பிளே வகைகளில் வாங்க கிடைக்கும். இந்திய விலை நிர்ணயம் ரூ.59,900 முதல் தொடங்கி ரூ.94,900 வரை செல்கிறது.

ஐபாட் ப்ரோ 2024 மாடல்கள் ஆனது 11-இன்ச் மற்றும் 13-இன்ச் டிஸ்பிளே விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விலையை பொறுத்தவரை 11-இன்ச் வைஃபை வேரியண்ட் ஆனது ரூ.99,900க்கும், வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது ரூ.1,19,900க்கும் வாங்க கிடைக்கும். மறுகையில் உள்ள ஐபாட் ப்ரோ 2024 மாடலின் 13-இன்ச் வைஃபை வேரியண்ட் ரூ.1,29,900க்கும் மற்றும் வைஃபை + செல்லுலார் வேரியண்ட் ஆனது ரூ.1,49,900க்கும் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Up to Rs 10000 Price Cut On Apple iPad 2022 10th Generation Models Check New Pricing Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X