Home
Gadgets

ஆளுக்கு 2.. சைனீஸ் மாடல்களை சிதறவிடும் விலை.. 70 மணிநேர பேட்டரி.. LAVA-வின் புது பட்ஸ், நெக்பேண்ட் அறிமுகம்!

இந்திய நிறுவனமான லாவா (Lava), ஒரு புதிய இயர்பட்ஸ் மற்றும் ஒரு புதிய நெக்பேண்ட் என 2 புதிய ஆடியோ தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. இயர்பட்ஸ் மாடல் - லாவா ப்ரோபட்ஸ் டி51 ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்போன்ஸ் (Lava Probuds T51 true wireless stereo earphones) ஆகும். நெக்பேண்ட் மாடல் - லாவா எஸ்கேப் 13டிகிரி நெக்பேண்ட் (Lava Xscape 13° Neckband) ஆகும்.

இந்த புதிய ஆடியோ டிவைஸ்கள் லாவா நிறுவனத்தின் ப்ரோ சீரீஸை (Lava Pro Series) விரிவுபடுத்துவதுடன், வெவ்வேறு வகையான பயனர்களையும் குறிவைக்கின்றன. ப்ரோபட்ஸ் டி51 ஆனது 50dB வரையிலான 'ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' (Hybrid Active Noise Cancellation) வசதியை வழங்குகிறது.

70 மணிநேர பேட்டரி.. LAVA-வின் புது பட்ஸ், நெக்பேண்ட் அறிமுகம்!

அதே சமயம் எஸ்கேப் 13° நெக்பேண்ட் ஆனது மூன்று பிரத்யேக இக்யூ மோட்களுடன் (EQ modes) வருகிறது. இவ்விரு டிவைஸ்களும் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4), ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்கும் வசதி (dual-device connectivity), பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் (voice assistant) ஆதரவு ஆகிய அம்சங்களையயும் கொண்டுள்ளன.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்: லாவா ப்ரோபட்ஸ் டி51 மாடலின் விலை ரூ.1,999 ஆகும். இது Mocha Cream, Blue Frost மற்றும் Espresso Black ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. லாவா எஸ்கேப் 13° நெக்பேண்டின் விலை ரூ.699 ஆகும்; இது Black, Blue மற்றும் Grey ஆகிய 3 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இவ்விரு மாடல்களுமே தற்போது ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கின்றன. அமேசானில் (Amazon) எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்து லாவா நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இருபின்னும் ப்ரோபட்ஸ் டி51 மற்றும் எஸ்கேப் 13° நெக்பேண்ட் ஆகிய இரண்டிற்கும் ஓராண்டு உத்தரவாதம் (warranty), இரண்டு மாத கூடுதல் உத்தரவாதம் மற்றும் கடைகளிலேயே மாற்றிக்கொள்ளும் வசதி (over-the-counter replacement) ஆதரவு ஆகியவைகளை லாவா அறிவித்துள்ளது.

லாவா ப்ரோபட்ஸ் டி51 இயர்பட்ஸ் சிறப்பம்சங்கள்:
- மேட் ஃபினிஷ் (matte finish) லுக்
- 12.4 மிமீ டைனமிக் டிரைவர்கள் (dynamic drivers)
- அடாப்டிவ் நாய்ஸ் டிடெக்ஷன் (adaptive noise detection) வசதி
- 50dB வரையிலான ஹைப்ரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷனை ஆதரவு
- ஆட்டோமேட்டிக் பிளேபேக் கட்டுப்பாட்டிற்கான 'இன்-இயர் டிடெக்ஷன்' (in-ear detection) வசதி
- ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) இணைப்பு

- ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்கும் வசதி
- ப்ரோஸ்பாட் (ProSpot) ஆப் உடன் இணைக்கத்தன்மை
- வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவு
- மொத்தம் 60 மணிநேரம் வரை இயங்கும் திறன்
- 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணிநேரம் வரை பயன்படுத்தலாம்
- நீர் தெறிப்பிலிருந்து பாதுகாக்கும் IPX4 தரச்சான்றிதழ்

லாவா எஸ்கேப் 13° நெக்பேண்ட் சிறப்பம்சங்கள்:
- 10 மிமீ டைனமிக் டிரைவர்கள்
- Pro Bass, Pro Rock மற்றும் Pro Balance ஆகிய மூன்று EQ மோட்களுக்கான ஆதரவு
- கேமிங்கிற்கான 40எம்எஸ் 'லோ-லேட்டன்சி' (low-latency) வசதி
- ப்ளூடூத்5.4
- ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களுடன் இணைக்கும் வசதி (dual-device pairing)

- இன்-லைன் கட்டுப்பாடுகள், பில்ட்-இன் மைக்ரோஃபோன் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் (voice assistant) ஆதரவு
- 70 மணிநேரம் வரை பேட்டரி திறன்
- 10 நிமிட சார்ஜிங் மூலம் 2.5 மணிநேரம் வரை பிளேடைம்
- 30 கிராம் எடை
- நீர் தெறிப்பால் பாதிப்பு ஏற்படாத வகையிலான IPX4 தரச்சான்றிதழ்
- வெவ்வேறு காது அளவுகளுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளக்கூடிய சிலிகான் இயர் டிப்ஸ் (ear tips)

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X