நம்ப முடியாத அடுத்த தலைமுறையின் தாறுமாறான தொழில்நுட்பங்கள் இதுதான்.!
இப்போது வரும் புதிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் நமது வேலைகளை மிகவும் எளிதாக்குகிறது என்றுதான் கூறுவேண்டும். குறிப்பாக வரும் ஆண்டுகளில் இதைவிட நவீன தொழில்நுட்பம் வரும், அதை நம் பிள்ளைகள் மிகவும் எளிதாகவும், முன்னேற்றப் பாதையில் செல்லவும் பயன்படுத்துவார்கள்.

தொழில்நுட்பத்தின் தேவை மிகமிக அதிகரிக்கும்
இனிவரும் ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையை எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் கேட்ஜெட்களை அதிக அளவில் கண்டுபிடிப்பதால் காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் தேவை மிகமிக அதிகரிக்கும் என்றுதான் கூறவேண்டும். அதன்படிஎதிர்காலத்தில் நமது பிள்ளைகள் பயன்படுத்தக்கூடிய கேட்ஜெட்களை இப்போது பார்ப்போம்.

இனி காகிதங்களில் வரையவேண்டாம் இந்த 3டி பேனாவை கொண்டு நீங்கள் நினைத்ததை முடிக்கலாம்.

இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரை தொட்டால்போதும் இசையை உணரமுடியும், அதாவது ஸ்பீக்கர் மீது வரும் வேவ்-ஐஉணர முடியும்.

இந்த கேமரா, இன்ஸ்டாகிராம் வலைதளத்திற்கு தகுந்தபடி புகைப்படங்களை எடுக்க கூடிய அம்சத்தைக்கொண்டுள்ளது.

இந்த வட்டவடிவிலான ஷவர் கண்டிப்பாக உங்களுக்கு மழையில் நனையும் அனுபவத்தைக் கொடுக்கும்.

கண்டிப்பாக இந்த தொழில்நுட்பம் மிகப்பெரிய வெற்றியடையும், இது மிதக்கும் சோபா செட் ஊஞ்சல்.

இந்த இயந்திரம் உங்கன் துணிகளை மிகக் கச்சிதமாக மடிக்கும்

நமக்கு முன்பே தெரியும் இது ரோபோ சூட்கேஸ், விரைவில் அனைத்து இடங்களுக்கு விற்பனைக்கு வரும்.

இனி வரும் பேனா எழுதவும் செய்யும், பிரின்ட் எடுக்கவும் செய்யும்.

உங்களுடைய நகைகள் மற்றும் சிறிய சிறிய விலைமதிப்பற்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்கமுடியும்,இந்த சாதனத்தின் உதவியுடன்.

டவல் அல்லது துண்டுகளை உலர்த்தி கிருமி நீக்கம் செய்யும் ஒரு டிஜிட்டல் ஹேங்கர்

ஒரு வெளிப்படையாக தொலைக்காட்சி திரை, அதாவது டிவிக்கு மறுபுறம் இருக்கும் காட்சிகளையும் பார்க்கமுடியும்.

இப்போது கைகளில் தான் கடிகாரம் அணிகிறோம், ஆனால் கூடிய விரைவில் விரல் நகங்களுக்கும் கடிகாரங்கள்வரும்.

இரைச்சல் செய்யாத அட்டகாசமான கரோக்கி மைக்ரோஃபோன்.

உணவை குளிர்விக்க பயோபாலிமர் ஜெல்லைப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி

இதுவும் கடந்துபோகும்...செல்பீ போட்டோ எடுக்க உதவும் காலணிகள்

ஸ்மார்ட் ஃபிங்கர் சாதனம், இது தூரத்தை அளவிடும் சாதனம்.

எப்போதும் ஆன்லைனில் இருப்பவர்களுக்கு ஒரு அருமைய ஸ்டேன்ட்.

லைட்டர் ஆதரவுடன் வெளிவரும் ஸ்மார்ட் வாட்ச்.

வலியைக் குறைக்கும் அணியக்கூடிய தரமான சாதனம், கண்டிப்பாக இந்த சாதனம் அருமையாக செயல்படும்.

இந்த தொழில்நுட்பம் வரும் என்பது சந்தேகம், விலங்கு எண்ணங்களை மனித மொழியில் மொழிபெயர்க்கும் சாதனம்.

இது கண்டிப்பாக வரும், குளிர்ந்த கால்களைக் கொண்டவர்களுக்கு சூடான சாக்ஸ்

உங்கள் பாடலை மதிப்பெண்ணாக மாற்றும் பேனா


Click it and Unblock the Notifications








