Home
Gadgets

விடாதீங்க.. 1.5ஜிபி ரேம்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. சியோமி 40-இன்ச் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.. அதிரடி ஆஃபர்..

அமேசான் தளத்தில் தற்போது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இன்னும் சில நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த சிறப்பு விற்பனையில் பல அசத்தலான சாதனங்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த சிறப்பு விற்பனையில் ஒரு அட்டகாசமான சியோமி (Xiaomi) டிவிக்கும் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தற்போது சியோமியின் எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடலுக்கு 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி ரூ.29,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது அறிவிக்கப்பட்ட தள்ளுபடி மூலம் ரூ.19,990 விலையில் வாங்க முடியும்.

சியோமி 40-இன்ச் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.. அதிரடி ஆஃபர்..

மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கினால் ரூ.1250 வரை உடனடி தள்ளுபடி கிடைக்கும். மேலும் இப்போது சியோமியின் எம்ஐ 5ஏ சீரிஸ் 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவியின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இந்த 40-இன்ச் எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ஃபுல் எச்டி ( Full HD) டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1920 x 1080 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த சியோமி டிவி வெளிவந்துள்ளது. அதேபோல் இதில் ஃபுல் எச்டி டிஸ்பிளே இருப்பதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும்.

Vivid பிக்சர் என்ஜின் (Vivid Picture Engine), ப்ரீமியம் மெட்டல் பெசல்-லெஸ் டிசைன் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சியோமி ஸ்மார்ட் டிவி. எனவே இந்த டிவியை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சியோமி நிறுவனம்.

40-இன்ச் எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலில் கார்டெக்ஸ் ஏ55 64-பிட் குவாட் கோர் பிராசஸர் (Cortex A55 64-bit Quad Core) வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 11 (Android 11) இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. அதேபோல் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது இந்த 40-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல். பின்பு கூகுள் அசிஸ்டண்ட் (Google Assistant), குரோம்காஸ்ட் (Chromecast) ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டிவி. அதேபோல் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த டிவியில் பயன்படுத்த முடியும்.

40-இன்ச் எம்ஐ 5ஏ சீரிஸ் ஸ்மார்ட் டிவி ஆனது ஸ்மார்ட் ரிமோட் கண்ட்ரோல் உடன் வெளிவந்துள்ளது. அதாவது Quick Mute, Quick wake மற்றும் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி+ஹாட்ஸ்டார் போன்ற கீ-களை கொண்டுள்ளது. அதேபோல் டால்பி ஆடியோ (Dolby Audio) ஆதரவுடன் 24W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் எம்ஐ 5ஏ ஸ்மார்ட் டிவி மாடல்.

சியோமி 40-இன்ச் டிவியை வாங்க சரியான நேரம் இதுதான்.. அதிரடி ஆஃபர்..

இந்த 40-இன்ச் ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். இதுதவிர புளூடூத், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த டிவி.குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தரமான அம்சங்களுடன் மலிவு விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

குறிப்பாக ஒன்பிளஸ், சாம்சங் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சற்று உயர்வான விலையில் விற்பனை செய்துவருகின்றன. ஆனால் சியோமி நிறுவனம் மட்டும் தான் 40-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை பட்ஜெட் விலையில் விற்பனை செய்கிறது. அதேபோல் இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் டிவிகள் தான் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Unbelievable Amazon Sale: The 40-inch Xiaomi Smart TV is available at affordable price: check details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X