உலகத்தில் ஸ்லிம் GaN சார்ஜ்ஜர்.. பிஸ்கட் சைஸில் 65W சூப்பர் பவர் சார்ஜ்ஜர்.. என்ன விலை? என்ன அம்சம்?
யூகிரீன் (UGREEN) நிறுவனம் புதிதாக அல்ட்ரா தின் பிஸ்கட் சைஸ் வெர்ஷன் 65W காலியம் நைட்ரைடு சார்ஜ்ஜர் (ultra-thin biscuit version 65W gallium nitride charger) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மிகவும் ஸ்லிம் ஆன சைசில், மிகவும் மெலிதான சார்ஜர் சாதனமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய யூகிரீன் அல்ட்ரா தின் பிஸ்கட்ஷேப் ஜிஏஎன் சார்ஜர் (UGREEN ultra-thin biscuit-shaped GaN charger) சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டிவைஸ் பற்றிய விபரத்தை நிறுவனம் தற்போது அதன் வலைத்தளம் பக்கத்தில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய சார்ஜ்ஜர் சாதனம் GaN சார்ஜ்ஜர் எனபது குறிப்பிடத்தக்கது. இது மிகவும் லைட் வெயிட் (lightweight charger) உடன் வருகிறது. இதன் எடை (weight) வெறும் 122 கிராம் மட்டுமே இருக்கிறது. இதன் தடிமன் (thickness) 14.5mm மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது தட்டையான ஃபிளாட் பாடியுடன் (flat body) வழக்கமான சார்ஜ்ஜர்களை விட, மிகவும் ஸ்லிம் வடிவத்தில் வருகிறது.

யூகிரீன் அல்ட்ரா தின் பிஸ்கட்ஷேப் ஜிஏஎன் சார்ஜர் (UGREEN ultra-thin biscuit-shaped GaN charger):
இதனுடன் வழங்கப்படும் பிளக் ஃபோல்ட்டிங் டைப் டிஸைனுடன் வருகிறது. இந்த சார்ஜ்ஜர் உங்களை பாக்கெட்டிற்குள் வைத்து கூட எடுத்து செல்லலாம். இந்த புதிய யூகிரீன் 65W காலியம் நைட்ரைடு சார்ஜ்ஜர் மூன்று போர்ட் உடன் வருகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருவதாக UGREEN நிறுவனம் அறிவித்துள்ளது. இது 30 நிமிடங்களில் சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்கிறது.
இந்த சாதனம் 16" இன்ச் மேக்புக் ப்ரோ (MacBook Pro) சாதனத்தை 35% வரை வேகமாக சார்ஜ் செய்கிறது. இது ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) போன்ற சாதனங்களை 60% வேகமாக சார்ஜ் செய்கிறது. சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா (Samsung Galaxy S23 Ultra) சாதனங்கள் 58% வேகமாக சார்ஜ் செய்யப்படுகிறது. இந்த சாதனத்தில் மூன்று போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் USB-C1, USB-C2, மற்றும் USB-A போன்ற போர்ட்கள் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போர்ட்களில் USB-C1 65W பவர் சப்போர்ட் உடன் வருகிறது. இதன் USB-C2 போர்ட் 30W பவர் சப்போர்ட் உடன் வருகிறது. இறுதியாக, USB-A போர்ட் 22.5W பவர் சப்போர்ட் உடன் வருகிறது. இந்த சாதனம் PD 3.0/2.0/QC4.0+/3.0/2.0, SCP, FCP, UFCS, and AFC போன்ற ஆதரவுகளை வழங்குகிறது.
யூகிரீன் அல்ட்ரா தின் பிஸ்கட்ஷேப் ஜிஏஎன் சார்ஜர் விலை (UGREEN ultra-thin biscuit-shaped GaN charger Price):
இது மொபைல், ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா சாதனங்கள் போன்ற சாதனங்களுக்கு இது இணக்கமாகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இந்த புதிய யூகிரீன் அல்ட்ரா தின் பிஸ்கட்ஷேப் ஜிஏஎன் சார்ஜர் (UGREEN ultra-thin biscuit-shaped GaN charger) சாதனத்தை 25 டாலர் விலையில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ. 2000 விலையில் வருகிறது. விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications