Home
Gadgets

சுற்றுலாவில் இசை மழை பொழிய UE வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ள பொருளாக இந்த ஸ்பீக்கர்கள் தெரிகிறது.

அல்டிமேட் இயர்ஸ் வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ஸ்பீக்கரை, இந்தியாவில் உள்ள க்ரோமா போன்ற மற்ற முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கிறது. இதற்கு ரூ.6,995 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா: இசை மழை பொழிய UE வண்டர்பூம் ப்ரீஸ்டைல் ப்ளூடூத் ஸ்பீக்கர்.!

இந்தியாவில் இப்போது பல்வேறு வகையான வயர்லெஸ் ஆடியோ ஸ்பீக்கர்கள் விற்பனையில் உள்ளன. இந்நிலையில் லாஜிஸ்டெக் நிறுவனத்தின் துணை தயாரிப்பான அல்டிமேட் இயர்ஸ், இந்தியாவில் சக்தி வாய்ந்த சில ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வெளியிட்டுள்ளது. கடந்தாண்டு வெளியிடப்பட்ட ஸ்பீக்கர்களின் வரிசையை மேம்படுத்தி உள்ளதால், அதன் ஆடியோ செயல்பாடு மற்றும் நிலைப்பு கட்டமைப்பு தரம் ஆகியவை திருப்திகரமாக உள்ளது.

வண்டர்பூம் ஆடியோ

வண்டர்பூம் ஆடியோ

வண்டர்பூம் ஆடியோ ஸ்பீக்கர் 5 நிறங்களில் வெளியாகி உள்ளன. அவையாவன கான்கிரீட், அவோகாடோ, பேட்சஸ், ராஷ்பேரி மற்றும் யூனிகார்ன் ஆகிய ஐந்து நிறங்களில் வெளியிடப்பட்டு உள்ளன. இந்தியாவில் உள்ள க்ரோமா போன்ற மற்ற முன்னணி விற்பனையகங்களில் கிடைக்கிறது. இதற்கு ரூ.6,995 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் Amazon.in இல் ரூ. 6,490 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு, அதனுடன் வரம்பிற்கு உட்பட்ட ஹார்டுவேர் உத்தரவாதம் 2 ஆண்டுகளுக்கு அளிக்கப்படுகிறது.

திறந்தவெளியில் கூட நிலையான ஆடியோ வெளியீடு

திறந்தவெளியில் கூட நிலையான ஆடியோ வெளியீடு

உங்கள் ஃபோன் உடன் ப்ளூடூத் இணைக்கக்கூடிய இந்த ஸ்பீக்கர், இரண்டு 40mm நேரடி டிரைவர்கள் மற்றும் இரண்டு 46.1 mm x 65.2 mm மறைமுக ரேடியேட்டர்களை கொண்டுள்ளன. இதில் இருந்து இந்த ஸ்பீக்கர் உடன் இணைப்பாக எந்த ஒரு சப்வூஃப்பரும் இல்லை என்பது தெளிவாக தெரிந்து கொள்ளலாம். ஒலி அலைகள் மூலம் பாஸ் உற்பத்தியாகி, ஸ்பீக்கரின் பாடி பகுதியில் எதிரொலிக்கிறது. இதனால் பாஸ் நிலைகள் அவ்வளவு சிறப்பாக உள்ளது என்று கூற முடியாது. அதே நேரத்தில் வோகல்ஸ், மீட்ஸ் மற்றும் ஹைஸ் ஆகிய ஆடியோ பண்புகளை, நேரடி டிரைவர்கள் பார்த்து கொள்கிறது.

மலைப் பகுதி

மலைப் பகுதி

மிகவும் திறந்த வெளி மற்றும் மலைப் பகுதிகளாக இருந்தாலும், இந்த ஸ்பீக்கரில் இருந்து சத்தமான மற்றும் தெளிவான ஆடியோவை பெற முடிகிறது. இந்த ஸ்பீக்கர் 360 கோணத்தில் ஒலியை வெளியிடுவதால், சிறிய மற்றும் நடுத்தர அளவுள்ள அறையில் பயன்படுத்துவதற்கு போதுமானதாக உள்ளது.

இந்த ஸ்பீக்கரின் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதியில் மென்மையான பிளாஸ்டி பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தாலும், அது நிலையாக இருப்பதோடு, நீர் துளிகள், தெறிப்புகள் மற்றும் தூசியை கூட மேற்கொள்கிறது. வண்டர்பூம் ஸ்பீக்கருக்கு IPX7 மதிப்பீட்டை பெற்றிருப்பதால், நீருக்குள் 30 நிமிடங்கள் வரை தாக்கும் பிடிப்பதோடு, 5 அடியில் இருந்து தெறிக்கும் நீர் துளிகளாலும் பிரச்சனை ஏற்படுவது இல்லை.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

இதன் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால், 6 முதல் 7 மணிநேரம் வரை தொடர்ந்து உச்ச ஒலி அளவில் இயக்க முடியும். முழுமையாக சார்ஜ் ஆக 2.5 மணிநேரத்திற்கு மேல் எடுத்து கொள்கிறது. இந்த ஸ்பீக்கரில் ஒரு சோலார் பேனலையும் இணைத்திருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, கொடுக்கும் பணத்திற்கு மதிப்புள்ள பொருளாக இந்த ஸ்பீக்கர்கள் தெரிகிறது. வயர்லெஸ் ஸ்பீக்கர் எடுத்து செல்லக் கூடியதாகவும், நீண்டநேர பயன்பாட்டிற்கும் பயன்பட்டு, நிலையான ஆடியோ வழங்குகிறது. இசை விரும்பிகளின் தேவையை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. நாம் பயணத்தில் இருக்கும் போது எப்போது வேண்டுமானாலும் இசை ரசிக்க தோன்றிய உடனே அதை அனுபவிக்க முடியும். தூங்க செல்லும் நேரத்தில் இருந்து அவர்கள் விழித்தெழும் நேரம் வரை, தனது மழையை இந்த ஸ்பீக்கர் அளிக்கிறது.

Best Mobiles in India

English summary
UE Wonderboom Freestyle Bluetooth speaker is perfect for avid travellers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X