Ubon CL-60 வயர்லெஸ் இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்!
உபான் (Ubon) நிறுவனம், தனது புதிய உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் அனைத்து முன்னணி ரீடைல் கடைகளிலும் மற்றும் இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது.

உபான் சி எல் 60 நெக் பேண்ட்
தொழில்நுட்ப ஆக்சஸரீஸ் நிறுவனமான உபான் நிறுவனம், இந்த புதிய உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு ரியல்மீ நிறுவனம் அறிமுகம் செய்த பட்ஸ் வயர்லெஸ் இயர்போன் அல்லது ஒன்பிளஸ் நிறுவனத்தின் புல்லட் வயர்லெஸ் 2 ஆகிய மாடல்களை போன்றே, இந்த புதிய உபான் வயர்லெஸ் இயர்போன் சாதனம் நெக் பேண்ட் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

உபான் ஆடியோ தரம்
இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய உபான் வயர்லெஸ் இயர்போன், மிகத்துல்லியமான ஆடியோ அனுபவம் மற்றும் எக்ஸ்பிளோசிவ் பாஸ் அனுபவத்தையும் சிறப்பாகப் பயனர்களுக்கு வழங்கும் என்று உபான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் டிசைன்
இந்த புதிய உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் டிசைன் பற்றிக் கூறவேண்டுமென்றால், இதில் தனிப்பட்ட வால்யூம் பட்டன் மற்றும் டிராக்குகளை ஸ்கிப் செய்வதற்கான ஸ்டிக் பட்டன் மற்றும் டிஜிட்டல் அசிஸ்டன்ட்டிற்கான பிரத்தியேக பட்டன் இதில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதனுடைய இயர் பேட்ஸ் மிகவும் மென்மையான சிலிக்கானால் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

24 மணி நேர பிளேபேக்
உபான் நிறுவனம், மிக வேகமான ப்ளூடூத் பேரிங் அனுபவத்தை வழங்குவதற்காக, இதில் ஃபாஸ்ட் பேரிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. இத்துடன் இந்த புதிய இயர்போன் தொடர்ச்சியாக 24 மணி நேரம் வரை பிளேபேக் அனுபவத்தை வழங்குமென்று உபான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் விலை
இந்தப் புதிய உபான் சி எல் 60 வயர்லெஸ் இயர்போன் இந்தியச் சந்தையில் வெறும் ரூ.2,499 என்ற விலையில் அனைத்து ரீடைல் தளங்களிலும் மற்றும் அனைத்து இ-காமர்ஸ் வலைத்தளங்களிலும் கிடைக்கும் என்று உபான் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications