ரூ.18,999-விலையில் அசத்தலான 40-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல் அறிமுகம்.! முழு விவரம்.!
இந்தியாவில் சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் பட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக பட்ஜெட் விலையில் 40-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது UBON (யூபோன்) நிறுவனம்.

குறிப்பாக UBON நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 40-இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி மாடல் ரூ.18,999-விலையில் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வருகிறது. மேலும் இந்த சாதனத்தின் முழுவிவரங்களைப் பார்ப்போம்.

40-இன்ச் UBON ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது எச்டி ரெடி டிஸ்பிளே, 1920 x 1080 பிக்சல் தீர்மானம், 16:9 என்கிற திரை விகிதம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த சாதனம் மேக் இன் இந்தியா முயற்சியின் கீழ் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும்இந்த ஸ்மார்ட் டிவியில் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம்மற்றும் 50Hz refresh rate ஆதரவு கொண்டு இந்த UBON ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த 40-இன்ச் UBON ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலில் 24வாட் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது, எனவே தெளிவான ஒலி தரம் மற்றும் சிறந்த பார்வை அனுபவத்தை வழங்குகிறது. பின்பு இந்த சாதனத்திற்கு RoHS சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமிங் கன்சோல், ப்ளூ ரே பிளேயர்கள் மற்றும் செட்-டாப் பாக்ஸை இணைக்க இரட்டை எச்.டி.எம்.ஐ போர்ட்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன. மேலும் வைஃபை, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த 40-இன்ச் UBON ஸ்மார்ட் டிவி.

பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறும். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications