வெறும் ரூ. 5999 விலையில் U&i அறிமுகம் செய்துள்ள ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன்..
U&i நிறுவனம் இன்று இந்திய சந்தையில் ஒரு புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. U&i நிறுவனம் U&i ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் என்ற புதிய சாதனத்தை நிறுவனம் நம்ப முடியாத விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் விலை மற்றும் இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட "ஹிஸ்டரி" மைக்ரோஃபோன் முற்றிலும் லைட் வெயிட் எடையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது மல்டி சீன் கிளிப்-இன் வயர்டு மைக்ரோஃபோன் சாதனமாகும். இந்த ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் சிறந்த தரமான பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இது எடை குறைவாகவும், நீண்ட நாட்கள் நீடித்து உழைக்கும் படி வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் சாதனம் அனைத்து முன்னணி சில்லறை கடைகள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களில் இருந்து பிளாக் நிறத்தில் வெறும் ரூ. 599 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்த போர்ட்டபிள் மைக்ரோஃபோன் ஓம்னி-டைரக்சனல் மைக்ரோபோன் என்பது குறிப்பிடத்தக்கது. இது அனைத்து விதமான அவுட்டோர் வீடியோ மற்றும் ஆடியோ பதிவுக்குப் பயன்படுத்தலாம்.
இந்த புதிய ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் சாதனம் 1.2 மீட்டர் கேபிள் வயர் உடன் வருகிறது. 1.2 மீட்டர் கேபிள் என்பது ஏறத்தாழ 47 அங்குலங்களம் கொண்ட நீண்ட கேபிள் ஆகும். இந்த ஹிஸ்டரி மல்டி சீன் கிளிப்-இன் மைக்ரோஃபோன் சாதனத்தின் சிறப்பம்சம் பற்றி பார்க்கலாம்.
டிரான்ஸ்டியூசர்: எலக்ட்ரெட்ஸ் கன்டென்சர்
போலார் பேட்டர்ன்: ஆம்னி டைரக்ஷன்
ஃபிரிக்வேன்சி ரேஞ்: 35HZ-18KHz
சிக்னல் / நாய்ஸ்: 74 db SPL
சென்சிட்டிவிட்டி: -30db +/-3db/ 0db=1V/pa,1kHz
கனெக்ட்டர்: 3.5 மிமீ TRRS இணைப்பு
கேபிள் நீளம்: 1.2 மீ (47 ")
எடை: 17 கிராம் (மைக்ரோஃபோன்)
தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ளவர்கள், வீடியோ மற்றும் ஆடியோ பதிவு செய்யும் நபர்கள் பயன்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications