U&i ரோபோட் 6 இன் 1 பவர் பேங்க் சாதனம் அறிமுகம்.. விலை இவ்வளவு தானா?
U&i நிறுவனம் புதிதாக ரோபோட் (Robot) என்ற 6 இன் 1 பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. U&i Robot பவர் பேங்க் இப்போது விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் கூடுதல் சிறப்பம்ச தகவல்களை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

U&i ரோபோட் பவர் பேங்க் சாதனம் இப்போது ஆன்லைன் மற்றும் ஆப்லைன் சில்லரை விற்பனையாளர் கடைகள் மூலம் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இந்த புதிய 3வது தலைமுறை பவர் பேங்க் அலாய் பிளாஸ்டிக் ஷெல் மூலம் வடிவமைத்து ஷாக் ப்ரூப் மற்றும் வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் 5 வாட்ஸ் கொண்ட 6 சாதனங்களை சார்ஜ் செய்யலாம்.
ரோபோ பவர் பேங்க் இன் தனித்துவமான அம்சம் என்றால் இதன் 4 உள்ளமைக்கப்பட்ட மைக்ரோ, வி 8 மற்றும் லைட்டனிங் இணைப்புகளுடன் வரும் சார்ஜிங் கேபிள்கள் ஆகும். இது இன்பில்ட் பாதுகாப்பு அம்சத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது, இதனால் ஓவர் ஹீட்டிங் மற்றும் ஷாக் ப்ரூப் பாதுகாப்பு உங்களுக்குக் கிடைக்கிறது. இதன் மொத்த பேட்டரி காபாஸிட்டி 10,000 mAh ஆகும்.
இந்த சாதனம் LED பேட்டரி டிஸ்பிளேவுடன் 2 LED டார்ச் விளக்குடன் வருகிறது. இதில் பாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இருப்பதனால் பயனர்கள் அவர்களின் சாதனங்களை வேகமாக சார்ஜ் செய்துகொள்ளலாம். ரோபோட் 6 இன் 1 பவர் பேங்க் சாதனம் பிளாக் நிறத்தில் ரூ. 2,799 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. விருப்பம் உள்ளவர்கள் ஆன்லைன் அல்லது ஆப்லைன் வழிகளில் பர்ச்சேஸ் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications