ரொம்ப சத்தமா கேட்குது.. பவர்புல் ப்ளூடூத் Speaker-னா இதனா? 20 மணிநேர பிளேடைம்மா? அசத்துது போங்க.. என்ன விலை?
ப்ளூடூத் ஸ்பீக்கர் (Bluetooth Speaker) வாங்க போறீங்களா? இல்லை புதிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க பிளான் செய்து வருகிறீர்களா? அப்போ இந்த பதிவு முழுக்க முழுக்க உங்களுக்கானது தான் மக்களே. சூப்பர் பவர்புல்லா ஒரு ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க சரியான நேரம் இதோ வந்துவிட்டது. சார்ஜ் பற்றி கவலையே இல்லாமல், ஒரே சார்ஜில் ஏறக்குறைய ஒரு நாள் வரை நீடித்து பிளேபேக் நேரத்தை வழங்கும் ப்ளூடூத் ஸ்பீக்கர் இப்போது சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. 20 மணி நேர பிளே நேரத்துடன் இயங்கும் ஸ்பீக்கரை U&i பிராண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
முன்னொரு காலத்தில் வீட்டுக்கு வீடு ரேடியோ பெட்டிகள் இருந்தது. காலை சுப்ரபாதம் துவங்கி, நள்ளிரவு மசாலா பாடல்கள் வரை எல்லா வீடுகளிலும் ஒரே பாடல் இசைத்துக்கொண்டிருந்தது. நாளடைவில் ஒவ்வொரு ரேடியோ ஸ்டேஷன்களாக பெருகி, ஒவ்வொரு வீட்டிலும் வெவ்வேறு விதமான பாடல்கள் கேட்க துவங்கியது. இதுவும் நாளடைவில் மாறி, இப்போது அவர்களுக்கு பிடித்தமான பாடலக்ளை மட்டும் செலக்ட் செய்து, கேட்டு மகிழ வீட்டுக்கு வீடு ப்ளூடூத் ஸ்பீக்கர்களை வாங்க துவங்கிவிட்டனர்.

U&i கார்னிவல் சீரிஸ் வயர்லெஸ் போர்ட்டபிள் TWS ஸ்பீக்கர் (U&i Carnival Series Wireless Portable TWS Speaker):
ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்கினாலும், அதனை நாள் முழுக்க பயன்படுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. காரணம், இவை நீண்ட நேர பேட்டரி ஆயுளை வழங்குவதில்லை. இதுவொரு பெரிய குறைபாடாகவே இருந்து வந்தது. இதற்கு இப்பொது U&i பிராண்ட் ஒரு தீர்வை கொண்டுவந்துள்ளது. அது தான் புதிய U&i கார்னிவல் சீரிஸ் வயர்லெஸ் போர்ட்டபிள் TWS ஸ்பீக்கர் (U&i Carnival Series Wireless Portable TWS Speaker) சாதனம்.
இந்த புதிய U&i கார்னிவல் சீரிஸ் வயர்லெஸ் போர்ட்டபிள் TWS ஸ்பீக்கர் சாதனம், மிகவும் சக்தி வாய்ந்த ப்ளூடூத் ஸ்பீக்கர் சாதனமாக வெளிவந்துள்ளது. இது 40W வரையிலான பவர்புல் சவுண்ட் ஆடியோவை வழங்குகிறது. இது ஸ்லீக் டிஸைனுடன் ரக்டு ஆல் பேக் டிசைன் வடிவமைப்புடன் எளிதாக போர்ட்டபிள் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் வீட்டின் அறையை அலறவிட உங்களிடம் இந்த ஒரு ஸ்பீக்கர் இருந்தால் போதும்.
இந்த புதிய U&i Carnival Series Wireless Portable TWS Speaker சாதனத்தை நீங்கள் உங்கள் ஸ்மார்ட் டிவியுடன் இணைத்து, இதை ஒரு சவுண்ட் பார் போலவும் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அவுட்டோர் செல்லும் போதும், இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கார்னிவல் சீரிஸ் ப்ளூடூத் v5.3 உடன் வருகிறது. இது வேகமாக பாஸ்ட் பேரிங் மற்றும் சார்ஜிங் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
U&i கார்னிவல் சீரிஸ் வயர்லெஸ் போர்ட்டபிள் TWS ஸ்பீக்கர் விலை (U&i Carnival Series Wireless Portable TWS Speaker Price):
இந்த ஸ்பீக்கர் சாதனம் மல்டி ரூம் ஆடியோ செட் அப் ஆதரவை கொண்டுள்ளது. இதில் TF கார்டு, USB டிரைவ், AUX இன்புட், ஸ்மார்ட்போன் கனெக்ட், டேப்லெட் மற்றும் லேப்டாப் கனெக்ட் போன்ற அம்சங்களும் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கர் 105mm கொண்ட டிவின் ஸ்பீக்கர் மற்றும் டூயல் ஹார்ன் 10W பவர் உடன் வருகிறது. இதன் மேற்புறத்தில் மல்டி டிரெக்ஷனல் கண்ட்ரோல் நாப் வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய U&i கார்னிவல் சீரிஸ் வயர்லெஸ் போர்ட்டபிள் TWS ஸ்பீக்கர் (U&i Carnival Series Wireless Portable TWS Speaker) டிவைஸ் 20 மணி நேரம் பிளே செய்யும் பிளேபேக் நேரத்தை கொண்டுள்ளது. இது 3000mAh பேட்டரியை வழங்குகிறது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணி நேரம் எடுத்துக்கொள்கிறது. இது இந்தியாவில் ரூ. 5999 என்ற விலையுடன் விற்பனைக்கு வருகிறது. விருப்பமுள்ளவர்கள் வாங்கி பயன்பெறலாம்.


Click it and Unblock the Notifications








