இது ரொம்ப புதுசு.. ஒரே சார்ஜிங் கேஸில் 4 பட்ஸ்.. ரூ.2,499 போதும்.. கப்பிள் சீரிஸ் இயர்பட்ஸ் கையில!
வெறும் ரூ.2,499 பட்ஜெட்டில் 2 பேர் பயன்படுத்தும் வகையில் யு அண்ட் ஐ கப்பிள் சீரிஸ் இயர்பட்ஸ் (U&i Couple Series Earbuds) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, ஃபாஸ்ட் சார்ஜிங், 400 மணி நேர ஸ்டாண்ட்பை பேக்கப் என்று பட்டையை கிளப்புகிறது.
இப்போதெல்லாம், நம்மிடையே இயர்பட்ஸ் பயன்பாடு அதிகரித்துவிட்டது. ஒருவர் பேருந்தில் சென்றாலும் சரி, பைக்கில் சென்றாலும் சரி, அவ்வளவு ஏன்? நடந்து சென்றாலும் கூட காதில் இயர்பட்ஸ் இல்லாமல் பார்க்க முடிவதில்லை. இவ்வளவு, வரவேற்பை இயர்பட்ஸ்கள் பெற்று வருவதால், அதுதொடர்பான வியாபாரமும் இங்கு பெருகிவிட்டது.

இதனால், இயர்பட்ஸ் தயாரிப்பு நிறுவனங்கள் புதுப்புது டிசைன்களிலும், அம்சங்களிலும் இயர்பட்ஸ்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால், பலருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லாத, யு அண்ட் ஐ (U&i) என்னும் நிறுவனம், முற்றிலும் புது முயற்சியாக ஒரே சார்ஜிங் கேஸிஸ் 4 பட்ஸ்களை கொடுத்து அசத்தியிருக்கிறது. அதோடு பிரீமியம் டிசைனில் டெனிம் சீரிஸ் இயர்பட்ஸையும் அறிமுகம் செய்துள்ளது.
யு அண்ட் ஐ கப்பிள் சீரிஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் (U&i Couple Series Earbuds Specifications): இந்த இயர்பட்ஸ் மொத்தமாக 4 பட்ஸ் கொண்டிருக்கிறது. அதாவது, ஒரே சார்ஜிங் கேஸில் 4 இயர்பட்ஸ் இருக்கும். ஆகவே, இரண்டு பேர் ஒரே பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் வி5.0 பிளஸ் இடிஆர் (Bluetooth V5.1+EDR ) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.
அதோடு, இன்ஸ்டன்ட் பேரிங் (Instant Pairing) வசதி இருக்கிறது. இந்த இயர்பட்ஸின் சார்ஜிங் கேஸில் 450mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது. ஒரு மணி நேரம் சார்ஜ் செய்தால், நான்கு பட்ஸ்களையும் தொடர்ந்து 5 மணி நேரம் பயன்படுத்தலாம். இந்த பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 100 மணி நேரம் பிளே பேக் டைம் கிடைக்கும்.
அதேபோல ஸ்டாண்ட்பை டைம் 400 மணி நேரத்தை எட்டும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த பட்ஸ் டச் கன்ட்ரோல் கொண்டுள்ளது. அதோடு பிரீமியம் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. காதுக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிலிகான் இயர்பட்ஸ் டிப்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாசிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Passive Noise Cancellation) டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த இயர்பட்ஸ் பிளாக் (Black) மற்றும் கிரே (Grey) கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த இயர்பட்ஸின் விலை ரூ.2,499ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 4) முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. யுஅண்ட்ஐ அவுட்லெட்ஸ் (U&i outlets) தளத்திலும், முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் வாங்கக் கொள்ள முடியும். ஒரே கேஸில் இரண்டு இயர்பட்ஸ் வருவதால், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற அதிக வாய்ப்புள்ளது.
யு அண்ட் ஐ டெனிம் சீரிஸ் இயர்பட்ஸ் அம்சங்கள் (U&i Denim Series TWS Earbuds): இந்த இயர்பட்ஸ் தொடர்ந்து 500 மணி நேரங்களுக்கு ஸ்டாண்ட்பை டைம் கொடுக்கக்கூடியது. ப்ளூடூத் வி5.1 பிளஸ் இடிஆர் கனெக்டிவிட்டி வருகிறது. இஎன்சி நாய்ஸ் ரெடக்ஷன் (ENC Noise Reduction) அம்சம் இருக்கிறது. அதோடு டீப் பேஸ் சவுண்டிங் (Deep Bass) அம்சமும் வருகிறது.
இந்த டெனிம் இயர்பட்ஸின் சார்ஜிங் கேஸில் 300mAh பேட்டரி இருக்கிறது. அதோடு எல்இடி டிஸ்பிளே கொண்டிருக்கிறது. அதேபோல பட்ஸ்களில் தலா 35mAh பேட்டரி வருகிறது. ஒரு முறை ஃபுல்சார்ஜ் செய்துவிட்டு தொடர்ந்து பயன்படுத்தினால், 40 மணி நேரம் பிளே டைம் கிடைக்கும்.
இந்த இயர்பட்ஸ், பிளாக் (Black) மற்றும் வைட் (White) கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டெனிம் இயர்பட்ஸூம் இன்று முதல் விற்பனைக்கு கிடைக்கிறது. யுஅண்ட்ஐ அவுட்லெட்ஸ் தளத்திலும், முன்னணி ரீடெயில் ஸ்டோர்களிலும் விற்பனைக்கு செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








