Home
Gadgets

போட்றா ஆளுக்கு 1 ஆர்டரை.. இவ்ளோ கம்மி விலைக்கு 40Hrs பிளேபேக், 400Hrs ஸ்டேண்ட்பை மோட்-ஆ! என்ன மாடல்?

ரூ.2500 முதல் ரூ.3000 க்குள் என்கிற பட்ஜெட்டில்.. நீடித்த பேட்டரி லைஃப்பை (Long Battery Life) வழங்கும் ஒரு நல்ல ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸை (TWS Earbuds) வாங்க வேண்டுமென்கிற தேடலில் உள்ளீர்களா? ஆமென்றால் இதுவே அதற்கான சரியான நேரம்!

ஏனென்றால் 400 மணிநேரம் வரையிலான ஸ்டேண்ட்பை மோட் (400Hrs Standby Mode) மற்றும் 40 மணிநேரம் வரையிலான பிளேபேக் டைம் (40Hrs Playback Time) உடன் யு அண்ட் ஐ (U&i) நிறுவனத்தின் மூன்று புதிய TWS இயர்பட்ஸ் சீரீஸ் இந்தியாவில் அறிமுகம் வெளியிடப்பட்டுள்ளன.

40Hrs பிளேபேக் டைம் உடன் U&i Jump சீரிஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

அவைகள் யு அண்ட் ஐ ஜம்ப் சீரீஸ் (Jump Series), யு அண்ட் ஐ வேர்ல்ட் கப் சீரீஸ் ( World Cup Series) மற்றும் யு அண்ட் ஐ இஎன்சி ஏர் 07 டிடபுள்யூஎஸ் சீரீஸ் (ENC AIR 07 TWS Series) ஆகும். இவைகளின் விலை நிர்ணயம் என்ன? என்னென்ன அம்சங்களை வழங்குகின்றன? இதோ விவரங்கள்:

யு அண்ட் ஐ ஜம்ப் சீரீஸ் இயர்பட்ஸ் மாடல்கள் ஆனது ஆக்டிவ் யூஸ் டிசைனை பெற்றுள்ளது. அதாவது இது உடற்பயிற்சிகள் தொடர்பான செயல்பாடுகளுக்கு ஏற்றாற்போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நீர்-எதிர்ப்பு திறனையும் கொண்டுள்ளது; கூடவே லைட் வெயிட் ஆகவும் உள்ளது.

40Hrs பிளேபேக் டைம் உடன் U&i Jump சீரிஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

மேலும் இந்த சீரீஸில் நாய்ஸ் ரிடெக்ஷன் மற்றும் ப்ளூடூத் 5.3 இடிஆர் கனெக்டிவிட்டியை ஆதரிக்கின்றன. இந்த இயர்பட்ஸ் 26mAh பேட்டரியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி இது 20 மணிநேரம் வரை பிளேபேக் மற்றும் 200 மணிநேரம் ஸ்டேண்ட்பை மோட்-ஐ வழங்கும்.

கடைசியாக இந்த சீரிஸில் டைப்-சி போர்ட் உடனான சார்ஜிங் கேஸும் உள்ளது. இந்த சார்ஜிங் கேஸ் ஆனது நான்கு முறை இயர்பட்களை முழுமையாக ரீசார்ஜ் செய்யும் திறனை கொண்டுள்ளது. இந்த ஜம்ப் சீரிஸில் உள்ள இன்னொரு மாடல் 150எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது.

40Hrs பிளேபேக் டைம் உடன் U&i Jump சீரிஸ் இயர்பட்ஸ் அறிமுகம்!

யு அண்ட் ஐ வேர்ல்ட் கேப் சீரிஸ் இயர்பட்ஸ்கள் அந்த 35mAh இயர்பட்ஸ் பேட்டரி மற்றும் 300mAh சார்ஜிங் கேஸ் உடன் வருகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது 40 மணிநேர டால்க் டைம் மற்றும் 400 மணிநேர ஸ்டேண்ட்பை டைம்-ஐ வழங்கும். இதன் கேஸில் டிஸ்பிளே பேட்டரி இண்டிகேட்டரும் உள்ளது மற்றும் இயர்பட்களை சார்ஜிங் கேஸ் மூலம் 8 முறை முழுமையாக ரீசார்ஜ் செய்ய முடியும்.

மேலும் வேர்ல்ட் கப் சீரிஸ் இயர்பட்ஸ் மாடல்களில் டச் சென்சிடிவ் கண்ட்ரோல்ஸ் மற்றும் 10 மிமீ ட்ரைவர்கள் உள்ளன. இது ப்ளூடூத் 5.1 இடிஆர் கனெக்டிவிட்டியை ஆதரிக்கிறது, இது மியூசிக் மற்றும் கால்களின் போது மிகவும் தெளிவான ஆடியோவை உறுதி செய்கிறது.

யு அண்ட் ஐ இஎன்சி ஏர் 07 சீரிஸ் இயர்பட்ஸ்கள் ஆனது லோ லேடன்சி டிசைன் உடன் சிறந்த சவுண்ட் குவாலிட்டியை வழங்குகின்றன. இவைகள் காம்போசைட் டயாபிராம் ஸ்பீக்கர் டிரைவர்ஸ் மற்றும் சரவுண்ட் சவுண்ட் ஆகியவற்றை கொண்டுள்ளன.

இந்த இயர்பட்ஸ்கள் 25 மணிநேர பிளேபேக் அல்லது 300 மணிநேர ஸ்டேண்ட்பை டைம்-ஐ வழங்கும். இஎன்சி ஏர் 07 சீரிஸ் ஆனது 320mAh சார்ஜிங் கேஸைக் கொண்டுள்ளது. இது இயர்பட்களை முழுமையாக ரீசார்ஜ் செய்ய 1.5 மணிநேரம் எடுத்துகொள்கிறது.

விலை விவரங்கள்: யு அண்ட் ஐ ஜம்ப் சீரீஸ் இயர்பட்ஸ்கள் ஆனது ரூ.2,499 க்கும், வேர்ல்ட் கப் சீரீஸ் இயர்பட்ஸ்கள் ஆனது ரூ.2,999 க்கும் மற்றும் இஎன்சி ஏர் 07 சீரிஸ் இயர்பட்ஸ்கள் ஆனது ரூ.2,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இவைகள் அனைத்துமே இந்தியா முழுவதும் உள்ள ரீடெயில் விற்பனை நிலையங்களிலும், யு அண்ட் ஐ விற்பனை நிலையங்களிலும் வாங்க கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
TWS Earbuds Under 3000 U and i Jump World Cup ENC Air series Launched in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X