உங்க பயணத்தை குதூகளமாக்க அவசியமான ஐந்து கேஜெட்ஸ்

|

பயணத்திற்கு கிளம்பும் முன் அனைவருக்கும் பல்வேறு கேள்விகள் மனதில் எழும். குறிப்பாக பயணத்திற்கு எடுத்து செல்லும் பையில் என்னென்ன இருக்க வேண்டும், என்பதை தேர்வு செய்வதே பெரிய சவாலாய் இருக்கும்.

உங்க பயணத்தை குதூகளமாக்க அவசியமான ஐந்து கேஜெட்ஸ்

பொதுவா புத்திசாலிங்க அவசியம் தேவையான சிலவற்றை மட்டுமே பயணத்திற்கு எடுத்திட்டு போவாங்க. கேஜெட்கள் நம் வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாய் மாறிவிட்டதாலே அவை பயணத்தின் போது நமக்கு உற்ற துணையாய் இருக்கும்.

எனினும், நமக்கு அவசியமான அதிக எடையில்லாத கேஜெட்களை எடுத்துச் செல்வது நம் பயணத்தை சுவாரஸ்யமாக்கும். இங்கு பயணத்தின் போது அவசியம் தேவைப்படும் மிக முக்கிய கேஜெட்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

லாகிடெக் கே375எஸ்

லாகிடெக் கே375எஸ்

ஸ்மார்ட்போன், லேப்டாப் மற்றும் பல்வேறு சாதனங்களை இணைக்க லாகிடெக் கே375எஸ் பயனுள்ள ஒன்றாக இருக்கும். இது பெரிய டாக்குமெண்ட்களை டைப் செய்யும் போதும், செயலிகளை இயக்கும் போது என பல்வேறு பயன்களை எளிமையாக்கும். இத்துடன் இந்த கீபோர்டுடன் ஸ்மார்ட்போன்களை கச்சிதமாக வைத்துக் கொளஅளும் கிட் வழங்க்பப்ட்டுள்ளது.

இதில் ஸ்மார்ட்போன்களை வைத்து டைப்பிங் வேகத்தை அதிகரிக்கலாம். லாகிடெக் கே375எஸ் விண்டோஸ் பிசி, ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இயங்குதளங்களில் வேலை செய்யும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.1995 முதல் துவங்குகிறது.

லாகிடெக் டைப்+

லாகிடெக் டைப்+

லேப்டாப்பில் டைப்பிங் செய்யும் அனுபவத்தை இந்த சாதனம் உங்களது டேப்லெட்டிலேயே வழங்கும். இதை கொண்டு மிகவும் கச்சிதமாகவும், அதிவேகமாகவும் டைப் செய்ய முடியும்.

இதில் ஐஓஎஸ் ஷார்கட் வசதி வழங்கப்பட்டுள்ளதால் செயலிகளிடையே இயக்குவதும் எளிமையாய் இருக்கும். ஐபேட் திரையை தொடாமல் பல்வேறு பயன்களை வழங்கும் லாகிடெக் டைப்+ விலை இந்தியாவில் ரூ.6495 முதல் துவங்குகிறது.

சென்ஹெய்சர் எச்டி 4.50பி.டி.என்.சி

சென்ஹெய்சர் எச்டி 4.50பி.டி.என்.சி

சென்ஹெய்சர் வயர்லெஸ் ஹெட்போன் நீங்கள் எங்கு சென்றாலும் அதிசிறந்த அனுபவத்தை வழங்கும். எச்டி 4.5பி.டி.என்.சி ஆல்வேஸ்-ஆன் மற்றும் ஆல்வேஸ் கணெக்டெட் வசதி கொண்டுள்ளதால் நாள் முழுக்க இசை மழையில் நணையமுடியும்.

அதிநவீன தொழில்நுட்பம், ப்ளூடூத் 4.0 மற்றும் ஆப்ட்-எக்ஸ் இணைந்து வயர்லெஸ் ஹை-ஃபை சவுண்டு வழங்கும். இது என்எப்சி மூலம் சாதனங்களுடன் இணைந்து கொண்டு பயன்படுத்தவும் வசதியாய் இருக்கும். இதை கொண்டு போன் கால்களையும் மேற்கொள்ள முடியும்.

 லாகிடெக் எம்எக்ஸ் அனிவேர் 2

லாகிடெக் எம்எக்ஸ் அனிவேர் 2

பெயருக்கு ஏற்றார்போல் எல்லா சூழலிலும் நமக்கு பயனுள்ள சாதனமாக இது இருக்கும். டார்க்ஃபீல்டு லேசர் டிராக்கிங் கொண்டிருப்பதால் எவ்வித பரப்பிலும் இது சீராக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாகிடெக் ஈசிஸ்விட்ச் தொழில்நுட்பம் கொண்டிருப்பதால் அதிகபட்சம் மூன்று சாதனங்களுடன் இணைந்து, ஒரே பட்டன் மூலம் அவற்றில் எளிதாக மாற்றி வேலை செய்யும்.

எக்ஸ் 300 மொபைல் ஸ்டிரீயோ வயர்லெஸ் ஸ்பீக்கர்

எக்ஸ் 300 மொபைல் ஸ்டிரீயோ வயர்லெஸ் ஸ்பீக்கர்

எக்ஸ் 300 மொபைல் வயர்லெஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர் அதிசிறந்த சத்தத்தை வழங்கும் திறன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் என எவ்வித சாதனமென்றாலும் தியேட்டர் அனுபவத்தை வழங்கும். இதனால் வயர் தொல்லையின்றி பயணங்களின் போது எங்கும் இதை எடுத்து செல்லம முடியும்.

அதிகபட்சம் 30 அடி தூரத்தில் இருக்கும் சாதனத்துடன் இணைந்து துல்லியமாக ஆடியோ அனுபவம் வழங்கும் படி இந்த ஸ்பீக்ககர் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து மணி நேரத்திற்கு ஆடியோ வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

Best Mobiles in India

English summary
It is preferred to carry the light-weight devices which will come to your rescue while going for a long trip. Let us see what are they and how will they be helpful.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X