இந்தியா : அட்டகாசமான பனோராமிக் அல்ட்ரா எச்டி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!

By Prakash
|

ட்ருவிசன், ஒரு ஐரோப்பா சார்ந்த நுகர்வோர் எலெக்ட்ரானிக்ஸ் பனோராமிக் நிறுவனம் தற்சமயம் அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும்பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. மேலும் இவற்றுள் துள்ளியாமான வீடியோவைப் பார்க்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஆதரிக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது. இவற்றில் உயர் செயல்திறன் இயந்திரம், மிரகாஸ்ட் இணைப்பு மற்றும் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி:

அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி:

அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி பொதுவாக ஒரு ஸ்டைலான தோற்றத்தைத் தருகிறது, மேலும் சிறந்த அனுபவம் உறுதி செய்யும் வகையில் இந்த ஸ்மார்ட் டிவி உருவாக்கப்பட்டுள்ளது.

55-இன்ச் ஸ்மார்ட் டிவி:

55-இன்ச் ஸ்மார்ட் டிவி:

இந்த டிவி பொறுத்தவரை 55-இன்ச் திரையைக் கொண்டுள்ளது, மேலும் இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் எனக்
கூறப்படுகிறது. அதே நேரத்தில் படத்தின் தரத்தை முன்னேற்றும் போது இந்த ஸ்மார்ட் டிவி குழு குழு வண்ணங்களில் இணக்கத்தை ஏற்படுத்துகிறது.

 ஆண்ட்ராய்டு 4.4 :

ஆண்ட்ராய்டு 4.4 :

டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி பொதுவாக ஆண்ட்ராய்டு 4.4 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது, அதன்பின் 1ஜிபி ரேம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் எல்லா டிவி சார்ந்த ஆப் பயன்பாடுகள், சேவைகள் போன்றவற்றை கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

பிரீமியம் ஒலி:

பிரீமியம் ஒலி:

டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி பிரீமியம் ஒலி தரத்தை வழங்குகிறது. டால்பி டிஜிட்டல் ஒலி தொழில்நுட்பத்தை கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி
தயாரிக்கப்பட்டுள்ளது.

மிரகாஸ்ட் தொழில்நுட்பம்:

மிரகாஸ்ட் தொழில்நுட்பம்:

இந்த ஸ்மார்ட் டிவியில் மிரகாஸ்ட் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, மேலும் 2எச்டிஎம்ஐ போர்ட், கேமிங் சாதனங்கள், டிவிடி வசதிபோன்ற அனைத்து சிறப்பம்சங்களும் இந்த ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ளது.

4கே டிவி:

4கே டிவி:

இந்த டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி 4கே வசதி கொண்டுள்ளது, மேலும் சிறந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இவை மிகவும் அருமையாக பயன்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

அல்ட்ரா எச்டி டிஎக்ஸ்55101 ஸ்மார்ட் டிவி விலைப் பொறுத்தவரை ரூ.68,990ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Truvison launches 55 inch Smart TV in India for Rs 68990 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X