ட்ரூவிஷன் நிறுவனத்தின் 32-இன்ச் எப்எச்டி ஸ்மார்ட் டிவி அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?
இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் சற்று உயர்வாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி ரூ.13,990-விலையில் இந்த ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.
ட்ரூவிஷன் நிறுவனம் இந்தியாவில் 32-இன்ச் எப்எச்டி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் சியோமி நிறுவனத்திற்கு போட்டியாக வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடல் ஆன்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இப்போது வெளிவந்துள்ள ட்ரூவிஷன் 32-இன்ச் எப்எச்டி ஸ்மார்ட் டிவி மாடலில் என்இஎஸ் கேம்ஸ் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ட்ரூவிஷன் நிறுவனம்.

கார்னி டெக்னாலஜி
ட்ரூவிஷன் 32-இன்ச் எப்எச்டி ஸ்மார்ட் டிவி மாடல் கார்னி டெக்னாலஜியைப் பயன்படுத்துகிறது, இது சிறந்த வண்ணங்களை கொடுக்கும் வகையில் இருக்கிறது, அதே சமயம் கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கிறது.

பேக்லைட்
இந்த சாதனத்தில் பேக்லைட், பிரைட்நஸ், பவர் சேமிப்பு மோட், போன்ற அம்சங்கள் மற்றும் ஹை டிரான்ஸ்மிட்டன்ஸ் குறைவான மின் நுகர்வு கொண்ட உயர் தீர்மானம் உதவுகிறது. பின்பு இந்த ஸ்மார்ட்டிவியின் மாடல் எண் ட்ரூவிசன் TW3262
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேனல்:
புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி ஏ-பிளஸ் கிரேடு பேனல் மற்றும் 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது, பின்பு இவற்றுள் ஐபிஎஸ் டிஸ்பிளே இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.

ஸ்பீக்கர் மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
ட்ரூவிஷன் 32-இன்ச் எப்எச்டி ஸ்மார்ட் டிவியில் 16வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 2எச்டிஎம்ஐ போர்ட், 2யுஎஸ்பி போர்ட், மடிக்கணினி, கேமிங் கன்சோல் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை:
இந்த ஸ்மார்ட் டிவியின் விலை மற்றும் சற்று உயர்வாக இருக்கிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி ரூ.13,990-விலையில் இந்த ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications