வெறும் ரூ11,990க்கு ட்ரூவிஷன் 32 இன்ச் முழு எச்.டி டிவி.!
இந்நாட்களில் வெளியாகும் அனைத்துவித எல்.இ.டி டிவிக்களும், எல்.சி.டி அல்லது ப்ளாஸ்மா தொலைக்காட்சிகளை விட சிறந்த கான்ட்ராஸ்ட், நிற மறுஉருவாக்கம் மற்றும் ஆற்றல் திறனுடையதாகவும் உள்ளன.
ஐரோப்பாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நுகர்வோர் மின்னணு சாதனப்பொருட்கள் நிறுவனமான ட்ரூவிஷன்(Truvision) , 32 இன்ச் முழு எச்.டி திரை கொண்ட புதிய 'TW3261' எல்.ஈ.டி டிவியை வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. ஓராண்டு கால உத்திரவாதத்துடன் வெளியாகும் இந்த புதிய டிவி, இந்தியா முழுவதும் உள்ள முன்னணி சில்லறை வர்த்தக கடைகளில் ரூ11,990 என்ற விலையில் கிடைக்கும்.

அந்நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி இந்த TW3261 டிவியானது, 1080 பிக்சல் மற்றும் 300000:1 விகித டைனமிக் கான்ட்ராஸ்ட் அம்சத்துடன் பிரகாசமான மற்றும் இருள் திறனுடன் மேம்படுத்தப்பட்ட பட செயல்பாடுகளை பயனர்கள் அனுபவிக்க அனுமதிக்கிறது.
இந்நாட்களில் வெளியாகும் அனைத்துவித எல்.இ.டி டிவிக்களும், எல்.சி.டி அல்லது ப்ளாஸ்மா தொலைக்காட்சிகளை விட சிறந்த கான்ட்ராஸ்ட், நிற மறுஉருவாக்கம் மற்றும் ஆற்றல் திறனுடையதாகவும் உள்ளன. மேலும் இந்த எல்.ஈ.டி டிவிக்களின் வாழ்நாள் மிகவும் நீளமானது. கார்னியா தொழில்நுட்பத்துடன் வெளிவரும் இந்த TW3261 டிவி கண் அழுத்தத்தை குறைப்பதாகவும், மேலும் அதன் திரை பல்வேறு நிற அம்சங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்ளும் திறனுடையது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 32இன்ச் எல்.ஈ.டி டிவியில் கிளியர் வாய்ஸ் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆடியோவிற்கான எச்.டி சவுண்ட் மற்றும் எஸ்.ஆர். எஸ் தொழில்நுட்பம் சரியாக பகிர்ந்தளிக்கப்படும் என்கிறது ட்ரூவிஷன் நிறுவனம். மேலும் இதில் ஆற்றலை சேமிக்கும் வசதியும் உள்ளது . இந்த டிவியில் உள்ள 2 யூ.எஸ்.பி போர்ட்கள் மூலம், ஒரு யூ.எஸ்.பி கருவியில் இருந்து மற்றொன்றுக்கு நகலெடுக்கும் வசதியும்(Copy), பென்டிரைவ் அல்லது ஹார்டிஸ்க் மூலம் திரைப்படம் அல்லது பாடல்கள் திரையிடும் வசதியும் வழங்கப்படுகிறது.

இந்த தொலைகாட்சியின் அறிமுக விழாவில் பேசிய ட்ரூவிஷன் நிறுவன இயக்குனர் சவுரவ் கப்ரா, தரமான பொருட்களை மலிவான விலையில், எளிதில் மக்கள் அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்ற எங்கள் நோக்கத்தின் ஒரு தொடர்ச்சியாக,எங்களின் புதிய தொலைக்காட்சிகள் மலிவான விலையில் நுகர்வோருக்கு கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications








