பட்ஜெட் விலையில் ட்ரூவிஷன் அறிமுகப்படுத்தும் புதிய ஸ்மார்ட் டிவி.!
குறிப்பாக இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் மி டிவி 4ஏ மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய சந்தையில் எல்ஜி, சாம்சங், சோனி போன்ற ஸ்மார்ட் டிவி மாடல்கள் தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டன, ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை, அந்நிறுவனங்களுக்கு போட்டியாக சியோமி, ட்ரூவிஷன், டிசிஎல் போன்ற நிறுவனங்கள் சிறந்த தரம் வாயந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

குறிப்பாக இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் மி டிவி 4ஏ மாடல்கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, பின்பு அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவி மாடல்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்சமயம் ட்ரூவிஷன் நிறுவனம் பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது.

ட்ரூவிஷன்:
ட்ரூவிஷன் நிறுவனம் இப்போது 32-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது,
பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது.

தொழில்நுட்பம்:
இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் Cornea தொழில்நுட்ப ஆதரவுடன் வெளிவந்துள்ளது, இதன் மூலம் சிறந்த
பார்வை அனுபவம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த
ஸ்மார்ட் டிவி மாடல்.

டைனமிக்
ட்ரூவிசன் TW3263 முழு எச்டி டிவி. 300,000: 1 என்ற டைனமிக் மாறுபாட்டு விகிதத்துடன் வருகிறது. இது நல்ல ஆடியோ வெளியீட்டை வழங்கும் தெளிவான
Clear Voice 2 தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. எஸ்ஆர்எஸ் ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை ஒரே மாதிரியான ஒலியை செயல்படுத்த மற்றும் ஆடியோ வெளியீட்டை வழங்க கவனம் செலுத்துகிறது.

இணைப்பு ஆதரவுகள்
இந்த ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி மாடல் பொறுத்தவரை 2 எச்டிஎம்ஐ, யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன்
வெளிவந்துள்ளது, அதன்பின்பு இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.


விலை:
ட்ரூவிஷன் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள 32-இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை 18,490-ஆக உள்ளது, அதன்பின்பு
இந்த ஸ்மார்ட் டிவியின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications