இந்தியா: ரூ.34,490/-விலையில் புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட் டிவியின் இணைப்பு ஆதரவுகள் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட், வைஃபை, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் டிவி தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ட்ரூவிஷன் நிறுவனம் தற்சமயம் வியக்கவைக்கும் விலையில் புதிய ஸ்மார்ட் எல்இடி(டிஎக்ஸ்408இசெட்) ஸ்மார்ட் டிவி மாடல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த டிவி மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப்,அமேசாக் பிரைம், கூகுள் பிளே போன்ற பல்வேறு ஆண்ட்ராய்டு ஆப் பயன்பாடுகளை கொண்டுள்ளது புதிய ட்ரூவிஷன் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடல். இந்த ஸ்மார்ட் டிவியின் விலை சற்று உயர்வாக இருந்தாலும், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது.

ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி:
புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி (டிஎக்ஸ்408இசெட்) 40-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1920 x 1080 பிக்சல் தீர்மானம் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைனமிக் ரேஞ்ச்:
இந்த டிவி மாடலில் இடம்பெற்றுள்ள ஹை டைனமிக் ரேஞ்ச் (எச்டிஆர்) ஆனது சிறந்த காட்சி அனுபவத்திற்கும் மற்றும் தெளிவான வண்ணங்களை வழங்கவும் உதவுகிறது. மேலும் ஹாட்ஸ்டார், நெட்ஃபிளிக்ஸ், யூடியூப் போன்ற பல்வேறு சேவைகளை பயன்படுத்த முடியம்.

இணைப்பு ஆதரவுகள்:
இந்த ஸ்மார்ட் டிவியின் இணைப்பு ஆதரவுகள் பொறுத்தவரை எச்டிஎம்ஐ போர்ட், யூஎஸ்பி போர்ட், வைஃபை, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விளையாட்டு போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி.

காண்ட்ராஸ்ட் :
வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் உருவாக்ப்பட்டுள்ளது. மேலும் டைனமிக் விசுவல்ஸ் மற்றும் 300000: 1 என்ற விகிதத்தில் காண்ட்ராஸ்ட் திறன் இருக்கிறது. இந்த விகிதத்தில் டிவி-ன் காண்ட்ராஸ்ட் திறன் இருப்பதால் அனைத்து வண்ணங்களும் மிகத் தெளிவாக தெரியும் என்று நிறுவனம் கூறியுள்ளது.


விலை:
புதிய ட்ரூவிஷன் ஸ்மார்ட் டிவி (டிஎக்ஸ்408இசெட்) விலைப் பொறுத்தவரை ரூ.34,490-ஆக உள்ளது. மேலும் இந்த டிவியின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications








