சியோமி, சாம்சங், எல்ஜி ஒரம்போ: ரூ.10,990 விலையில் ட்ரூவிஷன் எல்இடி டிவி அறிமுகம்.!
இந்த ட்ரூவிஷன் எல்இடி டிவியில் 20-வாட் ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் டால்பி டிஜிட்டல் ஒலி பின்பு சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் சியோமி, சாம்சங், எல்ஜி, சோனி போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அந்நிறுவனங்களுக்கு போட்டியாக பட்ஜெட் விலையில் அட்டகாசமான
எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது ட்ரூவிஷன் நிறுவனம்.

இந்த ட்ரூவிஷன் எல்இடி டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது, மேலும் இந்திய சந்தையில் இந்த டிவி மாடல் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

24-இன்ச்
ட்ரூவிஷன் (TW246) கேமிங் டிவி மாடல் பொறுத்தவரை 24-இன்ச் ஐபிஎஸ் முழு எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு மேம்பட்ட படத் தரம் மற்றும் பரந்த வண்ண விரிவாக்கத்துடன் இந்த டிவி மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேக்-லைட்:
சியோமி ஸ்மார்ட் டிவியில் இடம்பெற்றுள்ள பேக்-லைட் அம்சஙகளுடன் இந்த ட்ரூவிஷன் எல்இடி டிவி வெளிவந்துள்ளது. பின்பு A + Grade Panel ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

20-வாட் ஸ்பீக்கர்:
இந்த ட்ரூவிஷன் எல்இடி டிவியில் 20-வாட் ஸ்பீக்கர் பொறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் டால்பி டிஜிட்டல் ஒலி பின்பு சிறந்த திரை அனுபவம் கொடுக்கும் தன்மையை கொண்டுள்ளது.

விலை மற்றும் இணைப்பு ஆதரவுகள்:
24-இன்ச் ட்ரூவிஷன் எல்இடி டிவி மாடல் பொறுத்தவரை 1எச்டிஎம்ஐ போர்ட், 2எக்ஸ் யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு
இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த டிவி மாடலின் விலை ரூ.10,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications