Home
Gadgets

70 மணி நேரம் பேக்கப்.. அதும் ரூ. 1,099-க்கு.. ENC குவாட் மைக்.. IPX5 ரேட்டிங்.. டூயல் பேரிங்.. எந்த மாடல்?

ட்ரூக் (Truke) நிறுவனத்தின் புதிய பட்ஜெட் விலை மாடலாக ட்ரூக் மெகா 8 (Truke Mega 8) இயர்பட்ஸ் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ரூ.1,000 பட்ஜெட்டில் 70 மணி நேரங்களுக்கு டோட்டல் பிளேபேக் கொடுப்பதால் மார்கெட்டில் தனி வரவேற்பு பெற்றுள்ளது. இதுபோக ஸ்பாஷியல் ஆடியோ, என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன், IPX5 ரேட்டிங் ரெசிஸ்டன்ட் போன்ற பட்ஜெட்டில் நம்ப முடியாக பீச்சர்களை பேக் செய்துள்ளது. இந்த ட்ரூக் மெகா 8 மாடலின் முழு பீச்சர்களை பார்த்துவிட்டு விற்பனை விவரங்களுக்கு செல்லலாம்.

இந்தியாவில் இருக்கும் மியூசிக் பிரியர்கள் மத்தியில் அதிக பேஸ் மற்றும் அதிக பிளேபேக் கொடுக்கும் இயர்பட்ஸ் மாடல்களே வரவேற்பு பெறுகின்றன. ஆனால், பிரீமியம் குவாலிட்டி ஆடியோ பீச்சர்கள் மற்றும் 50 மணி நேரங்களுக்கு மேல் பிளேபேக் கிடைக்க வேண்டுமானால், ரூ.2,000 விலைக்கும் மேல் கொண்ட மாடல்களிலேயே அதை எதிர்பார்க்க முடியும்.

70 மணி நேரம் பேக்கப்.. அதும் ரூ. 1,099-க்கு.. ENC குவாட் மைக் மாடல்!

இருப்பினும், சில நிறுவனங்கள் வெறும் பேட்டரியில் மட்டும் கவனம் செலுத்தி ரூ.1,500 பட்ஜெட்டில் மாடல்களிலேயே 50 மணி நேரங்களுக்கும் மேல் பேக்கப் கொடுக்கின்றன. ஆனால், ட்ரூக் நிறுவனம் அதே ரூ.1,000 பட்ஜெட்டில் யாருமே எதிர்பார்க்க முடியாதபடி 70 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுத்தது மட்டுமல்லாமல், ஈஎன்சி (ENC), லோவ்லேட்டன்சி (Low Latency) கொடுத்துள்ளது.

இதுபோக வாய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் குவாட் மைக்குகள் போன்ற மற்ற பீச்சர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறது. இதுபோக பிரீமியம் லுக் கொடுக்கும்படி பெப்பெல்டு லெதர் பினிஷிடு கேஸ் (Pebbled Leather Finished Case) கொடுக்கிறது. இதில் மெட்டாலிக் பினிஷிங் கொண்ட லோகோவும் இடம்பெற்றுள்ளது. ஆகவே, லுக் பட்ஜெட் மாடல்களை போல் இருக்காது.

ட்ரூக் மெகா 8 அம்சங்கள் (Truke Mega 8 Specifications): இந்த ட்ரூக் மாடலில் 13 எம்எம் டைட்டானியம் டிரைவர்கள் (Titanium Drivers) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஆடியோ விரும்பும் பிரியர்களுக்காக ஸ்பாஷியல் ஆடியோ (Spatial Audio) சப்போர்ட் கிடைக்கிறது. லோவ் பவர் கன்சம்ஷன் கொடுக்கும்படி ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது.

70 மணி நேரம் பேக்கப்.. அதும் ரூ. 1,099-க்கு.. ENC குவாட் மைக் மாடல்!

இதில் 40ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு ஆடியோ, வீடியோ சின்க் பக்காவாக இருக்கும். இந்த பட்ஜெட்டிலும் லேக்-ப்ரீ சின்க் எதிர்பார்க்கலாம். கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக குவாட் மைக் (Quad Mic) கிடைக்கிறது. இதில் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation) வருகிறது.

இதுபோக ப்யூர்வாய்ஸ் (PureVoice) டெக்னாலஜி கொடுக்கிறது. ட்ரூக் மெகா 8 மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட லாங்-லாஸ்டிங் பேட்டரி கிடைக்கிறது. இதில் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து 180 நிமிடங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம். ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்துவிட்டால், மொத்தமாக 70 மணி நேரங்களுக்கு பிளேபேக் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு இதில் பிளேபேக் கிடைக்கிறது. டிராவல் மற்றும் கேமிங் பிரியர்களுக்கு இந்த ட்ரூக் மெகா 8 மாடல் பக்காவாக இருக்கும். இதில் IPX5 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற டிவைஸ்களில் ஒரே நேரத்தில் கனெக்ட் செய்யும்படி டூயல் டிவைஸ் பேரிங் கிடைக்கிறது.

இந்த ட்ரூக் மெகா 8 மாடலின் மார்கெட் விலை ரூ.1,299ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் ரூ.1,099 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். வால்நட் பிரவுன் (Walnut Brown) மற்றும் ஓனிக்ஸ் பிளாக் (Onyx Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truke Mega 8 With 70 Hours Total Playback Launched At Rs 1099 Check Specifications Sale Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X