Home
Gadgets

அள்ளுவிடும் சவுண்ட்.. ரூ.999 விலையில் 60 மணிநேர பிளேடைம்.. தூள் கிளப்பும் TWS இயர்பட்ஸ்..

பட்ஜெட் விலையில் TWS இயர்பட்ஸை வழங்கி தனக்கென தனி இடத்தை பிடித்திருக்கும் ட்ரூக் (Truke) 2022ஆம் ஆண்டு பட்ஸ் எஃப்1-ஐ (Buds F1) அறிமுகம் செய்தது. இப்பொது இதன் அடுத்த ட்ரூக் மாடல் இந்த மாதம் காதலர் தினத்தையொட்டி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

மலிவான விலையில் சிறப்பான செயல்பாட்டை வழங்கி மக்களை கவர்ந்த ட்ரூக் பட்ஸ் எஃப்1-ஐ தொடர்ந்து அதன் மேம்பட்ட வெர்ஷனான ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ராவை (Truke Buds F1 Ultra) இப்போது அறிமுகம் செய்துள்ளது. இன்-இயர் (In-Ear) மாடலில் வரும் இந்த இயர்பட்ஸில் 13 mm க்ரஃபீன் ட்ரைவர் (Graphene Driver), என்விராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (Environmental Noise Cancellation, ENC) தொழில்நுட்பம் கொண்ட குவாட்-மைக் (Quad-mic) ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ரூ.999 விலையில் 60 மணிநேர பிளேடைம்.. தூள் கிளப்பும் TWS இயர்பட்ஸ்..

இந்த அம்சங்களின் மூலம் சிறந்த தெளிவான கால் அனுபவத்தை பெற முடியும். மேலும், 60 மணிநேர ப்ளேடைமும் (Playtime) கொண்டுள்ளதால் இந்த ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸ் அதிகமாக வீடியோ கால் செய்பவர்களுக்கும், கேமர்களுக்கும் (Gamer) ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இவற்றுடன் சேர்த்து மேலும் சிறப்பான பல அம்சங்கள் இந்த புதிய பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸில் இடம்பெற்றுள்ளது.

ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸில் (Truke Buds F1 Ultra Earbuds) உங்களது ஆடியோ அனுபவத்தை பெர்ஸ்னலைஸ் (Personalise) செய்ய வசதியாக மூன்று ப்ரீசெட் ஈகுவலைசர் மோட்கள் (Preset Equalizer Modes) இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த இயர்பட்ஸில் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging), டச் கன்ட்ரோல் (Touch Control) மற்றும் கேமர்களுக்காக பிரத்தியேகமாக 40ms லோ-லேடன்ஸி மோட் ஆகிய அம்சங்களும் இடம்பெற்றுள்ளது.

ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்ப்ட்ஸ் சிறப்பம்சம் (Truke Buds F1 Ultra Earbuds Specifications):
- ட்ரூ வயர்லெஸ் இன்-இயர்
- 13mm க்ரஃபீன் டிரைவர்கள்
- 40ms அல்ட்ரா லோ லேடன்ஸி; கேம் மோட்
-என்விராண்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் கொண்ட குவாட் மைக்
- டைனமிக், மூவி மற்றும் பாஸ் பூஸ்ட் என்று மூன்று ப்ரீசெட் EQ மோட்கள்
- டுயல் கனெக்டிவிட்டி
- இன்ஸ்டட் பேரிங் திறன் கொண்ட ப்ளூடூத் v5.3
- SBC, AAC கோடெக் சப்போர்ட்
- 60 மணிநேரம் ப்ளேபாக் டைம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 மணிநேரம் ப்ளே டைம் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜுங், டைப் சி சார்ஜிங் போர்ட். இது டச் கன்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் உடன் வருகிறது. இது ஒரு வருட வாரண்டி உடன் வருகிறது. கருப்பு நிறத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் இந்த ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸ் பிப்ரவரி 13 ஆம் தேதி 2024ல் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ரூ. 1099 மதிப்புள்ள இந்த பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸை அறிமுக சலுகையாக ரூ. 999 விலைக்கு கிடைக்கிறது. இது அமேசான் (Amazon), ஃப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் பிரத்தியேக ட்ரூக் (Truke) இணையதளத்தில் வாங்கிக்கொள்ளலாம். இந்த இயர்பட்ஸை அறிமுகம் செய்யப்பட்டு சில மணிநேரங்களுக்கு மேலும் சிறந்த சலுகை ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, இந்த ட்ரூக் பட்ஸ் எஃப்1 அல்ட்ரா இயர்பட்ஸ் (Truke Buds F1 Ultra Earbuds) அறிமுகம் செய்யப்பட்ட 2 மணிநேரத்திற்குள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகை அளிக்கப்பட்டு ரூ. 799 விலைக்கு விற்கப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Truke Buds F1 Ultra with up to 60h total playback launched in India Under Rs 999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X