Home
Gadgets

இது புதுசா இருக்குண்ணே.. தூங்குறதுக்கு வசதியான டிசைன்.. ரூ.499 க்கு ஸ்லீப் இயர்போன்ஸ்!

ட்ரூக் (Truke) நிறுவனம் இந்தியாவில் ட்ரூக் பாஸ் எஸ்2 ஸ்லீப்பிங் இயர்போன்ஸை அறிமுகம் செய்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது தூக்கத்தை மையமாக கம்போர்ட் மற்றும் ரிலாக்சேஷனை வழங்குவதை நோக்கமாக கொண்ட ஒரு ஆடியோ ப்ராடெக்ட் ஆகும்

இந்த புதிய இயர்போன்ஸ் மூலம் - அதாவது காதுகளில் சரியாக பொருந்தும் சிறிய வடிவமைப்பு, மென்மையான சிலிகான் கட்டுமானம், சீரான ஒலி வெளியீடு மூலம் - ட்ரூக் நிறுவனம் ஆனது ஸ்லீப் ஆடியோ பிரிவில் (sleep audio category) மலிவு விலையில் நுழைந்துள்ளது. இந்த இயர்போன்ஸ் மாடலின் விலை, விற்பனை சலுகை மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் இதோ:

தூங்குறதுக்கு வசதியான டிசைன்.. ரூ.499 க்கு ஸ்லீப் இயர்போன்ஸ்!

ட்ரூக் பாஸ் எஸ்2 இயர்போன்ஸ் அம்சங்கள்: ட்ரூக் பாஸ் எஸ்2 ஆனது இரவு நேர பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, நீட்டிக்கப்பட்ட லிசனிங் சேஷன்களின் போது இது கம்போர்ட்டில் கவனம் செலுத்துகிறது. இது படுத்து கொள்ளும்போது அழுத்தத்தை குறைக்கும் நோக்கில் மென்மையான ப்ரொபைல் உடன் கூடிய அல்ட்ரா-காம்பாக்ட் இன்-இயர் பார்ம் பேக்டரை கொண்டுள்ளது, குறிப்பாக பக்கவாட்டில் தூங்குபவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும்

மேலும் இந்த இயர்போன்ஸ் ஆனது சருமத்திற்கு ஏற்ற சிலிகான் பொருட்களை பயன்படுத்தி உருவாக்கப்படுகின்றன, அவை தூக்கத்தின் போது பாதுகாப்பான, ஆனால் மென்மையான பொருத்தத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. கூடவே இதன் லைட் வெயிட் கட்டுமானம் மற்றும் நெகிழ்வான கேபிள் வடிவமைப்பு - இரவு முழுவதுமான இயக்கத்தின் போதும் கூட வசதியை பராமரிக்க உதவுகின்றன.

ஆடியோ செயல்திறனை பொறுத்தவரை, ட்ரூக் பாஸ் எஸ்2 மாடல் ஆனது அமைதியான மியூசிக், ஒயிட் நாய்ஸ், பாட்காஸ்ட்கள் மற்றும் வழிகாட்டப்பட்ட தியானம் அல்லது ஸ்லீப் கன்டென்ட்டிற்கு ஏற்ற தெளிவான மற்றும் சீரான ஒலியை வழங்க வடிவமைக்கப்பட்ட 13 மிமீ ட்ரைவரை கொண்டுள்ளது. இரவு நேர பயன்பாடு மற்றும் வெவ்வேறு தூக்க நிலைகளின் போது நீடித்து உழைக்க வடிவமைக்கப்பட்ட ஹை-பிளேக்சிபில் TPE கேபிளையும் கொண்டுள்ளது.

இந்த தயாரிப்பு முதன்மையாக ஆக்டிவ் ஆக உள்ள ஸ்மார்ட் அம்சங்களை விட செயலற்ற கேட்கும் அனுபவங்களில் கவனம் செலுத்துகிறது. இது ஓய்வின் போது கவனச்சிதறல் இல்லாத ஆடியோவை தேடும் பயனர்களுக்கு பிளே செய்வதை எளிதாக்குகிறது. இதன் சிறிய வடிவமைப்பு படுக்கையறைக்கு வெளியே பயணம் அல்லது அமைதியான கேட்கும் அமர்வுகளுக்கும் ஏற்றதாக அமைகிறது.

ட்ரூக் பாஸ் எஸ்2 விலை, சலுகை மற்றும் விற்பனை விவரங்கள்: ட்ரூக் பாஸ் எஸ்2 இயர்போன்ஸ் மாடல் ஆனது இந்தியாவில் ரூ.799 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் 2026 பிப்ரவரி 18 ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ ட்ரூக் வலைத்தளம் மூலம் இடைவேறும் ரூ.499 க்கு வாங்கலாம். பிப்ரவரி 18, 2026 முதல் அதே அறிமுக விலையில் இந்த இயர்போன்ஸ் ஆனது அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டிலும் கிடைக்கும். இப்போதைக்கு இது பிளாக் கலர் ஆப்ஷனில் மட்டுமே வருகிறது. ப்ளூ கலர் ஆப்ஷன் பின்னர் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவொருபக்கம் இருக்க ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் தனது பல வகையான ஆடியோ தயாரிப்புகளின் மீது 2026 காதலர் தின சலுகைகளை (2026 Valentines Day Offers) அறிவித்துள்ளது. இந்த சலுகைகள் (விலை குறைப்பு + பேங்க் டிஸ்கவுண்ட்) ஏற்கனவே ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் குவிக் காமர்ஸ் டெலிவரி ஆப்களில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த சலுகைகள் பிப்ரவரி 15 வரை கிடைக்கும்.

என்னென்ன ஒன்பிளஸ் இயர்பட்ஸ் மீது ஆபர்கள் கிடைக்கிறது?
1. ஒன்பிளஸ் புல்லட்ஸ் இஸட்3 (OnePlus Bullets Z3) ரூ.1,699 க்கு பதிலாக ரூ.1,299 க்கு வாங்க கிடைக்கிறது.
2. ஒன்பிளஸ் பட்ஸ் இஸட்2 ஏஎன்சி (OnePlus Buds Z2 ANC) ரூ.2,099 க்கு பதிலாக ரூ.1,899 க்கு வாங்க கிடைக்கிறது

3. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) ரூ.1,799 க்கு பதிலாக ரூ.1,599 க்கு வாங்க கிடைக்கிறது
4. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) ரூ.2,299 க்கு பதிலாக ரூ.1,999 க்கு வாங்க கிடைக்கிறது

5. ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) ரூ.2,999 க்கு பதிலாக ரூ.2,699 க்கு வாங்க கிடைக்கிறது
6. ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ரூ.5,999 க்கு பதிலாக ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கிறது
7. ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) ரூ.11,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Truke Bass S2 sleeping focused earphones launched in India For Just Rs 499 Check Out All Features
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X