டொயோட்டா அறிமுகம் செய்த சூனியக்காரியின் விளக்குமாறு! என்ன இது புதுசா?

|

டொயோட்டா நிறுவனம் வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே, ஆனால் தற்பொழுது டொயோட்டா நிறுவனம் யாரும் எதிர்பார்த்திடாத ஒரு புதிய விஷயத்தைச் செய்துள்ளது. அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் திரைப்படங்களில் வரும் சூனியக்காரியின் விளக்குமாறு போல் ஒரு சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஹார்ரி பாட்டர் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்

ஹார்ரி பாட்டர் ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும்

ஹார்ரி பாட்டர் ரசிகர்களுக்கு இந்த விளக்குமாறு பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். வானில் பறந்து செல்ல மற்றும் ஆகாயத்தை வளம் வரவும் இந்த சூனியக்கார விளக்குமாறை திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பார்கள். தற்பொழுது அதே வடிவத்தில் டொயோட்டா நிறுவனம் இந்த ஈ-ப்ரூம் (e-broom) என்ற விளக்குமாற்றை அறிமுகம் செய்துள்ளது.

பறக்காது ஆனால் நகரும்

பறக்காது ஆனால் நகரும்

படத்தில் வருவது போல் இது பறக்காது, ஆனால் உங்களை வேறு இடத்திற்கு எடுத்து செல்லும். ஒரு சிறிய வாகனம் போல் இதை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம், வேறு இடங்களுக்கும் செல்லலாம். குறிப்பாக இதைப் பயன்படுத்த நீங்கள் உங்கள் கால்களில் ரோலர் ஸ்கெட்டர்களை பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயம்.

வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!வாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது!

ரோலர் ஸ்கெட்டர்கள் அவசியம்

இது எப்படிச் செயல்படுகிறது என்று பார்க்கலாம். ஈ-ப்ரூம் இன் பின்பகுதியில் ஒரு சக்கரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஒரு சக்திவாய்ந்த மோட்டார் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. ரோலர் ஸ்கெட்டர்களை அணிந்துகொண்டு இந்த ஈ-ப்ரூம் விளக்குமாறை தரையில் அழுத்தி அழுத்தம் கொடுத்தாள் போதும் தானாக நகர ஆரம்பித்துவிடும்.

425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!425நாட்கள் வேலிடிட்டி: சூப்பர் சலுகையை அறிவித்தது பிஎஸ்என்எல்.!

டொயோட்டா நிறுவனம் செய்த புதிய அறிமுகம்

டொயோட்டா நிறுவனம் செய்த புதிய அறிமுகம்

இந்த ஈ-ப்ரூம் விளக்குமாறை டொயோட்டாவின் ஊழியர் ஒருவர் பயன்படுத்திக் காட்டியுள்ளார். இந்த ஈ-ப்ரூம் பற்றிய முழு விபரங்களை இன்னும் டொயோட்டா நிறுவனம் வெளியிடவில்லை. இதில் உள்ள பேட்டரி விபரம், மோட்டார் விபரம் மற்றும் கண்ட்ரோல் விபரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் டொயோட்டா நிறுவனம் அறிமுகம் மட்டும் செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Toyota's e-broom Has Been Designed To Be Ridden, Similar To A Witch’s Broom : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X