கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா? இதோ டோஷிபாவின் கிளாசஸ்.!

இந்த ஏஆர்100 வியூவர் பல வித்தியாசமான பிரேம்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று லென்ஸ் பிரேம் அல்லது பாதுகாப்பு பிரேம் என்று கூறப்படுகிறது.

|

கண்களில் மாட்டி கொண்டு கனவுலகில் மிதக்கும் சாதனமான ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள், ஜப்பான் டோஷிபா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த மாடல்தான் ஏஆர்100. வலிமையான பேட்டரி பவருடன் டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடல் ஒரு மினி கம்ப்யூட்டர் போல, பாக்கெட்டில் வைத்து கொண்டு செல்லும் வகையில் உருவாக்கி வாடிக்கையாளர்களை புதுவித அனுபவத்தில் மிதக்க வைத்தது. இந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடலின் மிகப்பெரிய சிறப்பு அம்சம் என்னவெனில் இது விண்டோஸ் 10 ஓஎஸ் மற்றும் இண்டல் கோர் M7 பிராஸசரை கொண்டது என்பது தான்.

கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா?

இந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடல் ஏஆர், உங்கள் தொழிலாளர்களுக்கு தேவைப்படும் போது, உங்கள் பணியாளர்களுக்கு தேவைப்படும் பணிக்கு முக்கியமான தகவல்களை மட்டுமே வழங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களது நிலைமையை ஒரு தொலைநோக்கு நிபுணர் அல்லது பயன்பாட்டிற்கு பதிவு செய்யும் வகையிலும் உதவுகிறது. இதனால் அவர்கள் உதவி, ஆலோசனை மற்றும் உண்மையான நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று ஏஆர்100 பார்வையாளர் பக்கம் விளக்கமளித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் பணியாளர்களுடன் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைப்பதிலும் உதவுகிறது.

கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா?

டோஷிபாவின் டைனாஎட்ஜ் மொபைல் மினி கம்ப்யூடார் மற்றும் ஏஆர்100 கண்ணாடி ஆகியவை இணைந்துதான் டைனாஎட்ஜ் ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டும் இணைந்து இவ்வருட இறுதியில் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.123,000 என்பதும் குறிப்பிடத்தக்கது.

கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா?

இந்த ஏஆர்100 வியூவர் பல வித்தியாசமான பிரேம்களை கொண்டுள்ளது. அவற்றில் ஒன்று லென்ஸ் பிரேம் அல்லது பாதுகாப்பு பிரேம் என்று கூறப்படுகிறது. இந்த பிரேம் இடது மற்றும் வலது புறங்களில் கண்ணாடி சேதமடையாமல் பாதுகாக்கின்றது. மேலும் இந்த இந்த டைனாஎட்ஜ் DE-10 என்ற மாடலின் இன்னொரு சிறப்பம்சம் இண்டல்கோர் M5-6Y57, மற்றும் 8ஜிபி ரேம், மேலும் 256ஜிபி M.2 SSD ஆகும். இது இது விண்டோஸ் 10 ஓஎஸ்-இ இயங்குவது மட்டுமின்றி விண்டோஸ் 7 ஓஎஸ் கூட சப்போர்ட் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மாடலில் செக்யூரிட்டி லாக் போர்ட், பயோஸ், பிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் டிரெஸ்ட் பிளாட்பார்ம் மாடுல்2.0 ஆகிய டெக்னாலஜிகள் பாதுகாப்பு அம்சங்களாக உள்ளது. மேலும் இதில் கண்ட்ரோல் பேனலும் உள்ளது.

கண்களில் மாட்டிக் கொண்டு கனவுலகில் மிதக்க வேண்டுமா?
Instagram Simple Tips and Tricks (TAMIL)

இந்த ஏஆர் ஸ்மார்ட் கண்ணாடிகள் வைபை மற்றும் புளூடூத் மூலம் கனெக்ட் செய்வதிலும் வல்லமை பெற்றது. அதுமட்டுமின்றி இதன் இன்னொரு அம்சமாக டச்பேட் வசதியும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Toshibas DynaEdge AR Smart Glasses Are Powered by Windows 10 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X