Toshiba அறிமுகம் செய்த 100 இன்ச் 4கே ஸ்மார்ட் டிவி.. 16ஜிபி மெமரி.. டால்பி அட்மாஸ்.. என்ன விலை?
தோஷிபா நிறுவனம் இன்று இந்தியாவில் தோஷிபா இசட்570ஆர்பி (Toshiba Z570RP) ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் என ஐந்து அளவுகளில் இந்த டிவி வாங்க கிடைக்கும். இப்போது இந்த புதிய டிவிகளின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.
தோஷிபா இசட்570ஆர்பி அம்சங்கள் (Toshiba Z570RP TV Specifications): தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 55 இன்ச், 65 இன்ச், 75 இன்ச், 85 இன்ச் மற்றும் 100 இன்ச் டிவிகள் 4கே QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன. மேலும் 3840×2160 பிக்சல்ஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

அதேபோல் தோஷிபா இசட்570ஆர்பி டிவிகளில் குவாண்டம் டாட் (Quantum Dot), ஃபிலிம்மேக்கர் மோட் (Filmmaker Mode), டைனமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping)போன்ற தனித்துவமான டிஸ்பிளே அம்சங்களும் உள்ளன. குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
டால்பி விஷன்ஐ.க்யூ (Dolby Vision IQ), எச்டிஆர் 10 பிளஸ் அடாப்டிவ் (HDR10+ Adaptive), எச்டிஆர் 10 (HDR10), எச்டிஆர், எச்எல்ஜி (HLG) போன்ற தரமான அம்சங்கள் இந்த டிவிகளில் உள்ளதால் சிறந்த திரை அனுபவம் கிடைக்கும். மேலும் REGZA Engine ZRi பிராசஸர் உடன் இந்த புதிய டிவிகள் வெளிவந்துள்ளன. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
தோஷிபா இசட்570ஆர்பி 55 இன்ச், 65 இன்ச் ஆகிய இரண்டு மாடல்கள் 20W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளன. மேலும் 75 இன்ச் மாடல் 30W ஸ்பீக்கர்கள் உடன் வெளிவந்துள்ளது. கடைசியாக உள்ள 85 இன்ச் மற்றும் 100 இன்ச் மாடல்கள் 50W ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. அதேபோல் இந்த ஐந்து டிவிகளில் டால்பி அட்மாஸ் (Dolby Atmos) ஆதரவும் உள்ளது. எனவே இந்த புதிய தோஷிபா டிவிகள் சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும்.
குறிப்பாக புதிய தோஷிபா டிவிகளில் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளது. மேலும் ஃபார் பீல்ட் வாய்ஸ் (Far Field Voice), ரிமோட் வாய்ஸ் கண்ட்ரோல் (remote voice control), ஆப்பிள் ஹோம்கிட் (Apple HomeKit), மிராகேஸ்ட் (Miracast), ஏர்பிளே (AirPlay) போன்ற சிறப்பான வசதிகள் இந்த டிவிகளில் உள்ளன.
ஆட்டோ லோ லேட்டன்சி மோட், கேம் மோட் ப்ரோ (Game Mode Pro), ஏஎம்டி ப்ரீசின்க் பிரீமியம் (AMD FreeSync Premium) உள்ளிட்ட பல சிறப்பான கேமிங அம்சங்களும் இந்த புதிய தோஷிபா இசட்570ஆர்பி டிவிகளில் உள்ளன. VIDAA இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் வெளிவந்துள்ளன.
எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, டிஜிட்டல் ஆடியோ அவுட், ஹெட்ஃபோன்/இயர்போன் ஜாக், ஆர்எப் இன்புட், ஏவி இன் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய தோஷிபா டிவிகளில் உள்ளன. இன்று முதல் பிளிப்கார்ட்டில் தோஷிபா இசட்570ஆர்பி சீரிஸ் டிவிகள் வாங்கக் கிடைக்கின்றன.
விலை:
தோஷிபா இசட்570ஆர்பி 55 இன்ச் மாடலின் விலை ரூ.43,999
தோஷிபா இசட்570ஆர்பி 65 இன்ச் மாடலின் விலை ரூ.63,999
தோஷிபா இசட்570ஆர்பி 75 இன்ச் மாடலின் விலை ரூ.89,999
தோஷிபா இசட்570ஆர்பி 85 இன்ச் மாடலின் விலை ரூ.1,59,999
தோஷிபா இசட்570ஆர்பி 100 இன்ச் மாடலின் விலை ரூ.2,69,999


Click it and Unblock the Notifications








