Home
Gadgets

யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ..கண்ணை கவரும் 4கே டிவிகளை அறிமுகம் செய்த Toshiba.! என்ன விலை?

ஜப்பான் நிறுவனமான தோஷிபா இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக சோனி, எல்ஜி, சியோமி, ஒன்பிளஸ் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல அசத்தலான டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது இந்த தோஷிபா (Toshiba) நிறுவனம்.

குறிப்பாக தோஷிபா நிறுவனம் சற்று உயர்வான விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்தாலும், அதற்கு தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் அந்த டிவிகளில் இருக்கும். இந்நிலையில் தோஷிபா நிறுவனம் இரண்டு அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது தோஷிபா எம்650 (Toshiba M650) 55-இன்ச் மற்றும் 65-இன் ஸ்மார்ட் டிவிகள் தான் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

கண்ணை கவரும் 4கே டிவிகளை அறிமுகம் செய்த Toshiba.! என்ன விலை?

தோஷிபா எம்650 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஆனது தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது இந்த டிவிகளின் சிறப்பு அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் 4கே மினி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளன.

மேலும் 3840 × 2160 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவு, டால்பி விஷன் IQ, எம்இஎம்சி உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இந்த டிவிகளின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.

REGZA ZR Engine பிக்சர் என்ஜின் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட் டிவிகள். பின்பு ஏஆர்எம் மாலி ஜி52 MC1 550MHz ஜிபியு வசதியைக் கொண்டுள்ளன இந்த டிவிகள். குறிப்பாக இந்த டிவிகள் தரமான மென்பொருள் வசதியுடன் வெளிவந்துள்ளன. எனவே இந்த டிவிகளை நம்பி வாங்கலாம்.

அல்ட்ராவிஷன் 120, கேம் மோட், ஏஐ ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளன தோஷிபா எம்650 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் VIDAA ஓஎஸ் வசதியைக் கொண்டுள்ளன இந்த இரண்டு அட்டகாசமான தோஷிபா ஸ்மார்ட் டிவிகள். இந்த டிவிகள் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக கேமிங் பயனர்களுக்குத் தகுந்தபடி இந்த டிவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆப்பிள் ஏர்ப்ளே, அலெக்சா, VIDAA வாய்ஸ் அசிஸ்டண்ட், கூகுள் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டுள்ளன இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவிகள். அதேபோல் REGZAபாஸ் வூஃபருடன் கூடிய 49 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன இந்த தோஷிபா எம்650 55-இன்ச் மற்றும் 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.

கண்ணை கவரும் 4கே டிவிகளை அறிமுகம் செய்த Toshiba.! என்ன விலை?

டால்பி அட்மோஸ், 360 சவுண்ட் அப்ஸ்கேலிங், REGZA பவர் ஆடியோ ப்ரோ போன்ற ஆடியோ அம்சங்களையும் கொண்டுள்ளன இந்த புத்தம் புதிய தோஷிபா ஸ்மார்ட் டிவிகள். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், வைஃபை 802.11 AC, புளூடூத் 5, யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவந்துள்ளன இந்த அசத்தலான டிவிகள்.

இந்த தோஷிபா எம்650 4கே ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் வரும் ஜூலை 15-ம் தேதி விற்பனைக்கு வரும். குறிப்பாக அறிமுக சலுகையுடன் சேர்த்து 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.54,999-விலையிலும், 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.74,999-விலையிலும் வாங்க முடியும். பின்பு இந்த டிவிகளுக்கு நான்கு ஆண்டு வாரண்டி வழங்குகிறது தோஷிபா நிறுவனம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Toshiba M650 55 and 65 4K Mini LED TVs launched in India: Check Specifications, Price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X