தீபாவளிக்கு ஆஃபரை அள்ளி வீசிட்டாங்க.. பெசல்-லெஸ் டிசைன்.. கம்மி விலையில் TOSHIBA ஃபுல் எச்டி டிவி..
ஜப்பான் நிறுவனமான தோஷிபா (TOSHIBA) இந்தியாவில் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட் டிவி மாடலுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தோஷிபா நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலுக்கு (TOSHIBA Full HD LED Smart Android TV 2023) பிளிப்கார்ட் தளத்தில் 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தற்போது ரூ.18,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் ரூ.750 தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடல் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (60 Hz Refresh Rate) ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்பிளே 250 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டிவியின் டிஸ்பிளே தனித்துவமான திரை அனுபவத்தைக் கொடுக்கும்.
தனித்துவமான ரெக்ஸா பிக்சர் எஞ்சின் (Regza picture Engine),பெசல்-லெஸ் டிசைன், ஏ பிளஸ் கிரேடு 10 பிட் எல்இடி பேனல் (A+ Grade 10 bit LED panel) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்புக்கு மற்றும் மென்பொருள் அமைப்புக்குக் கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.
இந்த 43-இன்ச் தோஷிபா ஸ்மார்ட் டிவியில் டிடிஎச் எச்டி மற்றும் டால்பி ஆடியோ ஆதரவைக் கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் உள்ளது. குறிப்பாக இந்த டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். குறிப்பாக தோஷிபா டிவியில் ஸ்ட்ரீம் செய்யும் போது உயர்தர ஆடியோவை நீங்கள் அனுபவிக்க முடியும். இதுதவிர பல்வேறு ஆடியோ அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
இந்த 43-இன்ச் தோஷிபா மாடல் ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக வாய்ஸ் கண்ட்ரோல் ஆதரவு கொண்ட ஸ்மார்ட் ரிமோட் ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது. இதுதவிர இந்த ஸ்மார்ட் டிவியின் ரிமோட் ஆனது நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஆப்ஸ்களின் ஷார்ட்கட் கீ கொண்டுள்ளது.
அதேபோல் 43-இன்ச் தோஷிபா ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி 2023 மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் பில்ட்-இன் (Chromecast built-in), மிராகாஸ்ட், வாய்ஸ் அசிஸ்டண்ட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவி.

எச்டிஎம்ஐ (HDMI) போர்ட், யுஎஸ்பி(USB)போர்ட், புளூடூத், ஹெட்போன ஜாக், டூயல் பேண்ட் வைஃபை உள்ளிட்ட பல்வேறு கணெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.
அதேபோல் தோஷிபா நிறுவனம் விரைவில் பல அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications