Home
Gadgets

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.25,000 பட்ஜெட்ல 43 இன்ச் டிவி.. 4K ரெசொலூஷன்.. டால்பி அட்மோஸ்.. டால்பி விஷன்!

பெசல்-லெஸ் டிசைனில் டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, டைனாமிக் டோன் மேப்பிங், 4K ரெசொலூஷன், எச்டிஆர்10 பிளஸ், 24W அவுட்புட், 16 ஜிபி மெமரி, 2 ஜிபி ரேம் போன்ற பீச்சர்கள் மற்றும் கூகுள் டிவி ஓஎஸ் கொண்ட டோஷிபா சி350என்பி சீரிஸ் டிவிகள் இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கின்றன. 43 இன்ச் முதல் 75 இன்ச் வரையில் மாடல்கள் இருக்கின்றன. ரூ.25,000 பட்ஜெட்டில் ஆரம்ப விலை இருக்கிறது. இந்த டிவிகள் குறித்த விவரம் இதோ.

டோஷிபா சி350என்பி 4K டிவி அம்சங்கள் (Toshiba C350NP 4K TV Specifications): பெசல்-லெஸ் டிசைனில் ஸ்லிம் பாடி மற்றும் பிரீமியம் ஸ்டாண்ட் கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 75 இன்ச் மாடல்களில் வருகிறது. 4K ரெசொலூஷன் (3840 x 2160 பிக்சல்கள்) கொண்ட எல்இடி (LED) டிஸ்பிளே வருகிறது.

பிளிப்கார்ட் பிச்சிக்குது.. ரூ.25,000 பட்ஜெட்ல 43 இன்ச் கூகுள் டிவி!

இந்த டிஸ்பிளேவில் 60Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள், எச்டிஆர்10 (HDR10). எல்எல்ஜி (HLG), டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் டைனாமிக் டோன் மேப்பிங் (Dynamic Tone Mapping) சப்போர்ட் வருகிறது. டைனாமிக் (Dynamic), ஸ்டாண்டர்ட் (Standard), ஸ்போர்ட்ஸ் (Sports) போன்ற பிக்சர் மோட்கள் உள்ளது.

மேலும், பிசி/கேம் (PC/Game), சினிமா (Cinema) மற்றும் எனர்ஜி சேவிங் (Energy Saving) மோட்களும் வருகின்றன. 4K அப்ஸ்கேலிங், பிக்சர் குவாலிட்டி என்ஹான்ஸ்மென்ட் (Picture Quality Enhancement) மற்றும் எச்டிஆர்10பிளஸ் டீகோடிங் (HDR10+ Decoding) சப்போர்ட் கொண்டிருக்கிறது. கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது.

இந்த டோஷிபா டிவியில் ரெக்சா என்ஜின் இசட்ஆர் (REGZA Engine ZR) சிப்செட் வருகிறது. 16 ஜிபி மெமரி மற்றும் 2 ஜிபி ரேம் கொண்டுள்ளது. ரெக்சா பவர் ஆடியோ (REGZA Power Audio), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) சப்போர்ட் கொண்ட 24W ஆடியோ அவுட்புட் உள்ளது.

ஆனால், 75 இன்ச் மாடலில் மட்டும் 36W ஆடியோ அவுட்புட் வருகிறது. ஸ்மார்ட் பீச்சர்களை பார்க்கையில், கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), ஸ்கீன் மிரரிங், வாய்ஸ் கமெண்ட், டிஎல்என்ஏ (DLNA), குரோம்காஸ்ட் (Chromecast), மிராகாஸ்ட் (Miracast), ஏர்பிளே (AirPlay) மற்றும் ரிமோட் வாய்ஸ் கன்ட்ரோல் (Remote Voice Control) வருகிறது.

கூகுள் ஓஎஸ் வருவதால், நெட்ஃபிளிக்ஸ் (Netflix), யூடியூப் (YouTube), பிரைம் வீடியோ (Prime Video), ஹாட்ஸ்டார் (Hotstar), சோனிலிவ் (SonyLiv), ஹங்கமா (Hungama) போன்ற பில்ட்-இன் ஓடிடி ஆப்கள் வருகின்றன. இந்த டோஷிபா டிவியின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், எச்டிஎம்ஐ, யுஎஸ்பி மற்றும் ஹெட்போன் ஜாக் வருகிறது.

மேலும், ஈதர்நெட் போர்ட் சப்போர்ட் உள்ளது. வயர்லெஸ் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை பில்ட்-இன் வை-பை (Built-in Wi-Fi), மற்றும் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) வருகிறது. இந்த டிவிக்கு வால் மவுண்ட் மற்றும் டேபிள் மவுண்ட் சப்போர்ட் உள்ளது. 2 வருடங்களுக்கு வாரண்டி கொடுக்கப்படுகிறது.

43 இன்ச் டிவியின் விலை ரூ.26,999ஆகவும், 50 இன்ச் டிவியின் விலை ரூ.32,999ஆகவும், 55 இன்ச் டிவியின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. 75 இன்ச் டிவியின் விலை ரூ.84,999ஆக இருக்கிறது. ரூ.1,750 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. பேங்க் டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி கிரெடிட் கார்டுக்கு கிடைக்கிறது.

ஆகவே, இந்த டிவியை ரூ.25,000 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அமேசான் (Amazon) மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) தளங்களில் ஆர்டருக்கு கிடைக்கிறது. கம்மியான பட்ஜெட்டில் டால்பி விஷன், டால்பி ஆடியோ மற்றும் பெசல்-லெஸ் டிசைன் கொண்ட 43 இன்ச் டிவி வேண்டுமானல், இந்த மாடலை ஆப்ஷனில் எடுங்கள்.

Best Mobiles in India

English summary
Toshiba C350NP 4K Google TV With Dolby Vision And Atmos Sale From Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X