Home
Gadgets

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மாஸ்.. ஆஃபரில் 50 இன்ச் 4கே டிவி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் தோஷிபா 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (TOSHIBA 50 inch Ultra HD 4K Smart Google TV) மாடல் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது இந்த தோஷிபா டிவிக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் தோஷிபா 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி (50E350SP) மாடலுக்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.30,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளன. ஆகவே இந்த டிவியை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

தோஷிபா 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி அம்சங்கள் (TOSHIBA 50 inch Ultra HD 4K Smart Google TV Specifications): அல்ட்ரா எச்டி 4கே டிஸ்பிளே வசதியுடன் இந்த தோஷிபா டிவி வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 350 நிட்ஸ் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள் (178-degree viewing angle), 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர் 10, 3840 ஒ 2160 பிக்சல்ஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சூப்பர் பிரைட் பேனல், டால்பி விஷன், உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த டிவியில் உள்ளன. அதேபோல் மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த அசத்தலான தோஷிபா 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடல். அதேபோல் இந்த டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது தோஷிபா நிறுவனம்.

கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) மூலம் இந்த தோஷிபா டிவி இயங்குகிறது. எனவே கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் இந்த டிவியில் கிடைக்கும். மேலும் யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ( Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த டிவியில் பயன்படுத்தலாம்.

டால்பி அட்மாஸ் ஆதரவு கொண்ட 30W ஸ்பீக்கர்கள் இந்த தோஷிபா 50 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே ஸ்மார்ட் கூகுள் டிவி மாடலில் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும். அதேபோல் இந்த தோஷிபா ஸ்மார்ட் டிவியில் பல ஆடியோ அம்சங்கள் உள்ளன.

கூவி, கூவி விற்கும் பிளிப்கார்ட்.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

ரெக்ஸா பிக்சர் எஞ்சின்(Regza picture Engine) கொண்டுள்ளது இந்த தோஷிபா ஸமார்ட் டிவி மாடல். குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட் டிவி மாடல்.

யுஎஸ்பி போர்ட் (USB Port), எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port), ஆடியோ ஜாக், ப்ளூடூத் (Bluetooth) உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஸ்மார்ட் டிவியில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த டிவி வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
TOSHIBA 50 inchUltra HD 4K Smart Google TV available at 44 percent discount on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X