வீட்ல பழைய TV-க்கு கும்பிடு.. 40 சதவீத ஆஃபரில் 50 இன்ச் டிவி.. கூகுள் டிவி ஓஎஸ்.. டால்பி அட்மோஸ்.. எந்த மாடல்?
பழைய டிவியை மாற்றிவிட்டு புதிய டிவி வாங்க திட்டமிட்ட கஸ்டமர்களை இதைவிட நல்ல தள்ளுபடி கிடைக்காது என்று சொல்ல வைக்கும்படி தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் கூகுள் டிவி (Toshiba 50 inch E350SP Series Google TV) கிடைக்கிறது. இந்த 50 இன்ச் மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இப்போது, அமேசான் தளத்தில் தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் 4கே அல்ட்சா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி (Toshiba 50 inch E350SP Series 4K Ultra HD Smart LED Google TV) மாடலுக்கு 40 சதவீத தள்ளுபடி கொடுக்கப்பட்டு, ரூ.31,990 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுக்கு ரூ.958 தள்ளுபடி கிடைப்பதால், கூடுதல் கம்மி விலைக்கு வாங்கலாம்.

தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் கூகுள் டிவி அம்சங்கள் (Toshiba 50 inch E350SP Series Google TV Specifications): கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) கொண்டுள்ளது. ஆகவே, கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant), பில்ட்-இன் கூகுள் குரோம்காஸ்ட் (Built-in Google Chromecast), ஸ்கிரீன் ஷேரிங் (Screen Sharing) கிடைக்கிறது. மேலும், கூகுள் மீட் (Google Meet) சப்போர்ட் கிடைக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் (Netflix), யூடியூப் (Youtube), பிரைம் வீடியோ (Prime Video), ஜியோஹாஸ்டார் (JioHotstar), சோனிவில் (SonyLiv), ஜீ5 (Zee5), சன்நெக்ஸ்ட் (SunNXT) உள்ளிட்ட ஓடிடி ஆப்கள் மற்றும் கேமிங் ஆப்கள் கிடைக்கின்றன. கரோக்கி மோட் (Karaoke Mode) சப்போர்ட் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் 4கே அல்ட்சா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொண்டுள்ளது. 4கே அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், சூப்பர் பிரைட் பேனல் (Super Bright Panel) கிடைக்கிறது. 178 டிகிரி வியூ ஆங்கிள் கொண்ட மாடலாக இந்த தோஷிபா டிவி கிடைக்கிறது.
மேலும், 350 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன் (Dolby Vision), எச்டிஆர் 10 (HDR 10), ஏஐ பிகியூ (AI PQ) மற்றும் ஏஐ ஸ்மூத் மேஷன் (AI Smooth Motion) உள்ளிட்ட டிஸ்பிளே பீச்சர்களை இந்த தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் 4கே அல்ட்சா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுத்துள்ளது. நாய்ஸ் ரெடக்சன் (Noise Reduction) மற்றும் மல்டிபிள் பிக்சர் மோட்கள் (Multiple Picture Modes) உள்ளன.
ஸ்டான்டர்டு (Standard), டைனாமிக் (Dynamic), சினிமா (Cinema), லோவ் ப்ளூ (Low Blue), ஃபிலிம்மேக்கர் (Filmmaker) உள்ளிட்ட பல்வேறு மோட்கள் கிடைக்கின்றன. 30W சவுண்ட் அவுட்புட் கொண்ட ஸ்பீக்கர்களை இந்த தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் 4கே அல்ட்சா எச்டி ஸ்மார்ட் கூகுள் டிவி கொடுக்கிறது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கிடைக்கிறது.
இதிலும் ஸ்டான்டர்டு, மியூசிக், சினிமா, நியூஸ் உள்ளிட்ட மோட்கள் கிடைக்கின்றன. எச்டிஎம்ஐ போர்ட்கள், யுஎஸ்பி போர்ட்கள், ஆடியோ ஜாக், எல்ஏஎன் உள்ளிட்ட கனெக்டிவிட்டிகளை இந்த தோஷிபா 50 இன்ச் ஈ350எஸ்பி சீரிஸ் கூகுள் டிவி கொடுக்கிறது. வை-பை மற்றும் ப்ளூடூத் சப்போர்ட் கொண்ட மாடலாகவும் இந்த டிவி இருக்கிறது.


Click it and Unblock the Notifications