Home
Gadgets

மலிவு விலை.. 43" இன்ச் QLED டிஸ்பிளே.. சூப்பர் Smart TV-யை வழங்கிய Toshiba.. இதைவிட கம்மி விலைக்கு கிடைக்காது

ஸ்மார்ட் டிவி (Smart TV) வாங்குகிற ஐடியா உங்களுக்கு இருக்கிறதா? LED ஸ்மார்ட் டிவி வாங்க ஆசைப்பட்ட மக்களுக்கு, இப்போது மிகவும் குறைந்த விலையில் பெரிய டிஸ்பிளேவுடன் QLED ஸ்மார்ட் டிவியே வாங்க கிடைக்கப்போகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே.!

அட நிஜமா தான் சொல்றோம். நம்புங்க மக்களே. குறைந்த விலையில் ஏதோவொரு எல்இடி ஸ்மார்ட் டிவியை (LED Smart TV) வாங்க ஐடியா செய்த உங்களுக்கு, மிகவும் குறைந்த விலையில் 43" இன்ச் டிஸ்பிளே, 50" இன்ச் டிஸ்பிளே மற்றும் 55" இன்ச் டிஸ்பிளே என்று மூன்று வகையில், கியூஎல்இடி (QLED) ஸ்மார்ட் டிவிகளை டோஷிபா நிறுவனம் இந்தியாவில் வழங்க துவங்கியுள்ளது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறோம்.

மலிவு விலை.. 43

தோஷிபா QLED ஸ்மார்ட் டிவி (Toshiba QLED Smart TV):

தோஷிபா (Toshiba) நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் C450ME என்ற மாடல் எண்ணுடன் மூன்று வித்தியாசமான பெரிய சைஸ் டிஸ்பிளே அளவுடன் கூடிய 43" இன்ச் டிஸ்பிளே, 50" இன்ச் டிஸ்பிளே மற்றும் 55" இன்ச் டிஸ்பிளே மாடல் QLED டிவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய தோஷிபா QLED ஸ்மார்ட் டிவி அல்ட்ரா-தின் பேசல் (ultra-thin bezel) உடன் மிகவும் ஸ்லிம் ஆன டிவியாக வந்துள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவிகள் டால்பி விஷன் அட்மோஸ் (Dolby Vision-Atmos), ஏஐ பவர் 4கே அப்ஸ்கேலிங் தொழில்நுட்பம் (AI-powered 4K upscaling technology), குவாண்டம் டாட் கலர் (Quantum Dot Color), போன்ற தொழில்நுட்பங்களை இந்த ஸ்மார்ட் டிவி ஆதரிக்கிறது என்று தோஷிபா விளம்பரம் செய்துள்ளது. இதன் விலை பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

தோஷிபா அறிமுகம் செய்துள்ள இந்த QLED TV மாடலின் 43" இன்ச் டிஸ்பிளே மாடல் இந்தியாவில் வெறும் ரூ. 26,999 என்ற விலையுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் 50" இன்ச் டிஸ்பிளே மாடல் மற்றும் 55" இன்ச் QLED டிஸ்பிளே மாடல் ஸ்மார்ட் டிவிகள் முறையே ரூ. 32,999 மற்றும் ரூ. 37,999 என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது.

இத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகள் என்ன?

மற்ற QLED ஸ்மார்ட் டிவி பிராண்டுகளுடன் ஒப்பிடுகையில், தோஷிபா QLED ஸ்மார்ட் டிவிகள் மிகவும் மலிவான விலையில் விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய தோஷிபா கியூஎல்இடி ஸ்மார்ட் டிவிகள் (Toshiba QLED Smart TV) அமேசான் இந்தியா மற்றும் பிளிப்கார்ட் தளம் வழியாக விற்பனைக்கு வாங்க கிடைக்கின்றன.

அதேபோல், மே 31,2024 ஆம் தேதி வரை இந்த ஸ்மார்ட் டிவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நன்மை கிடைக்கிறது. இந்த நாட்களுக்கும் தோஷிபா QLED ஸ்மார்ட் டிவியை வாங்கும் நபர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் பிரீமியம் சந்தா (Disney+ Hotstar premium subscription) மற்றும் ஜியோ சினிமா பேமிலி பிரீமியம் சந்தா (Jio Cinema family premium subscription) போன்றவை உங்களுக்கு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Toshiba 43 inch 50 inch 55 inch QLED Smart TV launched In India Price and Offer Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X