ஜெஸ்ட் புரோ வயர்லெஸ் பவர்பேங்க் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்த ஜெஸ்ட் புரோ பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி இருப்பது பயனாளிகளின் எதிர்பார்ப்பை விட அதிகம் பூர்த்தி செய்யும்.
டொரெட்டோ என்ற நிறுவனம் ஒரு போர்ட்டபிள் டிஜிட்டல் பொருளான ஜெஸ்ட் புரோ (Zest Pro) என்ற வயர்லெஸ் சார்ஜர் பவர் பேங்க்கை அறிமுகம் செய்துள்ளது. இந்தத வயர்லெஸ் பவர்பேங்க் பயனாளிகளுக்கு சார்ஜ் பிரச்சனை இல்லாத ஒரு நிம்மதியை அளிக்கின்றது. இந்த பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி இருந்தாலும் இதன் எடை மிகவும் குறைவாக இருப்பதால் எளிதில் வெளியே கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய வரவான ஜெஸ்ட் புரோ என்ற வயர்லெஸ் சார்ஜர் பவர் பேங்க் பயனாளிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் சந்தேகமே இல்லை. ஜெஸ்ட் புரோ என்ற அதிநவீன லேட்டஸ்ட் டெக்னாலஜி கொண்டு இந்த புதிய பவர்பேங்க்கை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் தங்கள் மொபைல் போன் உள்ளிட்ட பொருட்கலை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் வயர்லெஸ் மூலம் சார்ஜ் செய்து கொள்ளலாம். மேலும் இதில் உள்ள 2 யூஎஸ்பி போர்ட்டுக்கள் மூலம் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களுக்கும் யூஎஸ்பி கேபிள் மூலம் சார்ஜ் ஏற்றி கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெஸ்ட் புரோ பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி உள்ளது. இதனால் நீங்கள் எத்தனை மணி நேரமானாலும் சார்ஜ் போட்டு கொண்டே இருக்கலாம். இதுவொரு அல்ட்ரா போர்ட்டபிள் எடை குறைந்த வகையில் டிசைன் செய்யப்படுள்ளதால் இதனை உங்களுடைய லேப்டாப் பேக்கில் அல்லது கார் குளோவில், கேரி பேக்கில் அல்லது உங்களது பேண்ட் பாக்கெட்டில் கூட வைத்து கொள்ளலாம்
எளிதில் எடுத்து செல்வது மட்டுமின்றி பவர்புல் ஆனது:
இந்த ஜெஸ்ட் புரோ பவர் பேங்க்கில் 10000mAh லித்தியம் பாலிமர் பேட்டரி இருப்பது பயனாளிகளின் எதிர்பார்ப்பை விட அதிகம் பூர்த்தி செய்யும். இந்த பவர்பேங்க்கை எளிதில் எடுத்து செல்லும் வகையில் எடை குறைவாக இருப்பது ஒரு சிறப்பம்சம்

லித்தியம் பாலிமர் பேட்டரி:
இந்த பவர்பேங்க் மூலம் சார்ஜ் ஏற்றுவதால் உங்களுடை பொருட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் இதில் உள்ள லித்தியம் பாலிமர் உதவி செய்கிறது. மற்ற ரெகுலர் லித்தியம் பேட்டரிகளை விட இதில் உள்ள லித்தியம் மிகவும் மெல்லியதாக இருக்கும். இதனால் தான் இந்த பொருள் மிகவும் எடை குறைவாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.
2 யூஎஸ்பி போர்ட்டுக்கள்
இந்த வயர்லெஸ் பவர்பேங்க்கின் இன்னொரு சிறப்பு அம்சம் என்னவெனில் இதில் இரண்டு யூஎஸ்பி போர்ட்டுக்கள் இருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு போன்களுக்கு சார்ஜ் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த யூஎஸ்பி போர்ட் உங்களுக்கு ஒரு நண்பரை போல் உதவுகிறது என்று கூறினால் அது மிகையாகாது.

அல்ட்ரா ஸ்லிம் டிசைன்
லித்தியம் பாலிமர் பேட்டரி மிகவும் மெல்லியதாக இருப்பதால் இதன் டிசைன் மிக மெல்லியதாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் தான் இதனை மிக எளிதாக வெளியே எடுத்து செல்ல முடிகிறது என்பது இன்னொரு சிறப்பம்சம்

விலை என்ன? எங்கு கிடைக்கும்?
டொரெட்டோ நிறுனத்தின் ஜெஸ்ட் புரோ வயர்லெஸ் பவர்பேங்க் அனைத்து முன்னணி ஆன்லைன் இகாமர்ஸ் நிறுவனங்களிலும் கிடைக்கும். இதன் விலை, இந்திய ரூபாயில் ரூ.2999 மற்றும் 2099 ஆகிய இரண்டு விலைகளில் கருப்பு மற்றும் வெள்ளை என இரண்டு வண்ணங்களில் சிறப்பு வாய்ந்த மாடல்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications