ரூ.200-க்குள் கிடைக்கும் சிறந்த டெக் கெஜட்கள்.!
இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் இந்த யுஎஸ்பி எல்இடி லைட்-ஐ அருமையாக பயன்படுத்த முடியும்.
இப்பொது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பல்வேறு மக்களுக்கு மிகவும் உதிவியாய் இருக்கிறது, குறிப்பாக ஸ்மார்ட்போன், டேப்லேட், லேப்டாப் போன்ற சாதனங்கள் நமது தினசரி வேலைகளை மிகவும் எளிமையாக்குகிறது. இப்போது வரும் சில மொபைல் நிறுவனங்களின் சாதனங்கள் சற்று விலை அதிகமாகத் தான் உள்ளது. ஆனாலும் ஒரு சில பொருட்களின் விலை சற்று குறைவாகவே உள்ளது.
மொபைல் சந்தையில் பல்வேறு கெஜட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது, மேலும் இவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது ரூ.200-க்குள் கிடைக்கும் டாப் 5 சிறந்த டெக் கெஜட் வரிசைகளைப் பாரப்போம்.

மொபைல் ஸ்டாண்டு:
Photron MST500 Aluminium -எனும் மொபைல் ஸ்டாண்டு பொறுத்தவரை ரூ.150-ஆக உள்ளது, அதன்பின்பு இவற்றைபயன்படுத்த மிகவும் எளிமையாக இருக்கும். குறிப்பாக உங்கள் ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொடுக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனில் திரைப்படங்களை பார்க இந்த மொபைல் ஸ்டாண்டு மிக அருமையாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வயர்லெஸ் எல்இடி புளூடூத் ஸ்பீக்கர்கள்:
வயர்லெஸ் எல்இடி புளூடூத் ஸ்பீக்கர் எஸ்10 மாடல்கள் குறிப்பாக ரூ.150 முதல் ரூ.200-க்குள் கிடைக்கும், இந்த வயர்லெஸ் எல்இடி புளூடூத் ஸ்பீக்கர் சிறப்பம்சம் பொறுத்தவரை சிறந்த கலர் அம்சங்களை கொண்டுள்ளது. அதன்பின்பு இதில் யூஎஸ்பி மூலம் பாடல்களை கேட்க முடியும், மேலும் மெமரி கார்டு பயன்படுத்தியும் பாடல்களை கேட்க முடியும். குறிப்பாக இவற்றில் மினி யுஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

போர்ட்டபிள் யூஎஸ்பி எல்இடி லைட்:
Photron 1.2-Watt Portable USB LED Light-சாதனம் பொறுத்தவரை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும், அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த போர்ட்டபிள் யுஎஸ்பி எல்இடி லைட். இரவு நேரங்களில் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் இந்த யுஎஸ்பி எல்இடி லைட்-ஐ அருமையாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

யூஎஸ்பி ஹப்:
Quantum 4 Port USB-எனும் யூஎஸ்பி ஹப் பொறுத்தவரை ரூ.200-க்குள் கிடைக்கும். இந்த யூஎஸ்பி ஹப் பொறுத்தவரை கணினி மற்றும் லேப்டாப் போன்ற சாதனங்களில் மிக எளிமையாக பயன்படுத்த முடியும், அதன்பின்பு இப்போவரும் ஸ்மார்ட் டிவியில் கூட இவற்றை பயன்படுத்த
முடியும்.


எல்இடி பிளாஷ் டைனமோ டார்ச்:
Hand-Pressed LED Flashlight Dynamo Torch (எல்இடி பிளாஷ் டைனமோ டார்ச்) பொறுத்தவரை மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும். அதன்பின்பு எல்இடி பிளாஷ் டைனமோ டார்ச் சாதனத்தில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் இதில் பேட்டரி மற்றும் பல்ப் இடம்பெறவில்லை, அதற்குமாற்றாக எல்இடி மட்டும் தான் இடம்பெற்றுள்ளது. மேலும் சிறந்த வெளிச்சம் கொடுக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த சாதனம்.


Click it and Unblock the Notifications