சூப்பர் பட்ஜெட்டில் வாங்க கிடைக்கும் டாப் 7 BIG SCREEN LED ஸ்மார்ட் டிவி.!
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்சமயம் 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுக்படுத்தியுள்ளது.
இந்தியாவில் சியோமி நிறுவனம் தரம் வாய்ந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து, இப்போது பானாசோனிக் எல்ஜி, சாம்சங்,டிசிஎல் போன்ற நிறுவனங்களும் பல்வேறு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக சியோமி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்கள் அனைத்தும் இப்போது உள்ள அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஸ்மார்ட்போன் விற்பனையிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த பெரியத் திரை கொண்ட ஸ்மார்ட் டிவி மாடல்களின் பட்டியலைப் பார்ப்போம்.

பானாசோனிக்
பானாசோனிக் நிறுவனம் தற்சமயம்Viera LED ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் 10வாட் ஸ்பீக்கர் போன்ற அமைப்புகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவி மாடலின் விலை ரூ.29,833-ஆக உள்ளது.

மைக்ரோமேக்ஸ்:
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தற்சமயம் 43-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுக்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி மாடல் எண் 43a9181fhd என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் விலைப் பொறுத்தவரை ரூ.28,000-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

வியூ (VU)
வியூ (VU) டெலிவிஷன்ஸ் நிறுவனம் 43-இன்ச் டிஸ்பிளே கொண்ட எல்இடி டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. AmpliFi ஸ்பீக்கர் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை ரூ.25,799-ஆக உள்ளது.

டிசிஎல் :
டிசிஎல் நிறுவனம் 40-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த சாதனத்தின் மாடல் எண் L40D2900 -என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட், 8வாட் ஸ்பீக்கர் போன்ற அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டிசிஎல் 40-இன்ச் எல்இடி ஸ்மார்ட் டிவியின் விலை மதிப்பு ரூ.23,599-ஆக உள்ளது.

சியோமி :
சியோமி நிறுவனம் 43-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் மி எல்இடி ஸமார்ட் டிவி 4ஏ மாடலை அறிமுகம் செய்துள்ளது, அதன்பின்பு1.5ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் அம்லாஜிக் எல்962-எச்8எக்ஸ் கார்டெக்ஸ்-ஏ53 செயலியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த சியோமி டிவி மாடல். பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் இக்கருவியின் விலை மதிப்ப ரூ.22,999-ஆக உள்ளது.

வீடியோகான்
வீடியோகான் நிறுவனம் 43-இன்ச் முழு எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் மாடல் எண் VNN43FH24CAFM என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் மற்றும் 5வாட் ஸ்பீக்கர்
போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.


இன்டெக்ஸ்
இன்டெக்ஸ் நிறுவனம் 40-இன்ச் முழு எச்டி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக எச்டிஎம்ஐ மற்றும் யுஸ்பி, விஜிஏ போன்ற இணைப்ப ஆதரவுகள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மதிப்பு ரூ.25,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications