இந்தியா : ஜூலை 2017-ல் வெளிவரும் அட்டகாசமான டாப் 5 டிவிகள்.!
சோனி எக்ஸ்70இ எல்இடி 4கே அல்டரா எச்டி ஸ்மார்ட் டிவி பொதுவாக 49-இன்ச் 4கே எச்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளது.!
இந்தியாவில் உள்ள டிவி சந்தையில் பல நவீன தொழில்நுட்பம் கொண்ட டிவிகள் வந்துகொண்டே தான் இருக்கிறது, மேலும் இவற்றில் அதிநவீன மென்பொருள் சேர்க்கைகள் பொருத்து விலைகள் மாறுபடும் என சில தகவல்கள் வெளியாகி உள்ளன.
சில நிறுவனங்கள் மக்களுக்கு தகுந்தபடி அனைத்து வசதிகளையும் கொண்ட டிவிகளை தயாரிக்கிறது, இன்டர்நெட், வைஃபை, ப்ளூடூத், யுஎஸ்பி போர்ட், போன்ற பல சிறப்பம்சங்கள் இப்போது வரும் டிவிகளில் இடம்பெற்றுள்ளது. இவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது,பின்வரும் ஸ்லைடர்களில் டாப் 5 டவிகளின் வரிசைகளைப் பார்ப்போம்.

சாம்சங் (55) எஸ்யுஎச்டி 4கே ஸ்மார்ட் டிவி கேஸ்9000 தொடர் 9:
இந்த சாம்சங் (55) எஸ்யுஎச்டி 4கே ஸ்மார்ட் டிவி பொதுவாக 55-இன் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. மேலும் 4கே திறமை இவற்றுள் அடக்கம், குவாண்டம் டாட் டெக்னாலஜி மற்றும் (3840-2140)பிக்சல் இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் இதனுடைய விலை ரூ.2,84,900எனக் கூறப்படுகிறது. ஆடியோ 20வாட்ஸ், 2சிஎச் ஸ்பீக்கர், டிடிஎஸ் டிகோடர் போன்றவை இவற்றுள் சேர்க்கப்பட்டுள்ளது.

எல்ஜி 49எஸ்ஜே800டி 4கே அல்ட்ரா எச்டி எல்இடி டிவி:
இதனுடைய டிஸ்பிளே பொருத்தவரை 49-இன்ச் 4கே யுஎச்டி டிஸ்பிளே, மேலும் (3840-2160)வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.இவற்றின் ஆடியோ 20வாட்ஸ், 2சிஎஸ் ஸ்பீக்கர் மற்றும் டிடிஎஸ் டிகோடர் கொண்டுள்ளது. மேலும் 4எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி, 1லேன்,1தலையணி, இதனுடை விலைப் பொருத்தவரை ரூ.1,60,990ஆக உள்ளது.

சோனி எக்ஸ்70இ எல்இடி 4கே அல்டரா எச்டி ஸ்மார்ட் டிவி:
சோனி எக்ஸ்70இ எல்இடி 4கே அல்டரா எச்டி ஸ்மார்ட் டிவி பொதுவாக 49-இன்ச் 4கே எச்டிஆர் டிஸ்பிளே கொண்டுள்ளது, (3840-2160)வீடியோ பிக்சல் கொண்டுள்ளது இந்த டிவி. இதன் ஆடியோ பொறுத்தமட்டில் 10வாட்ஸ்-10வாட்ஸ் ஸ்பீக்கர், மேலும் 3எச்டிஎம்ஐ போர்ட்,3யுஎஸ்பி போர்ட், 1லேன் போர்ட், 1 தலையணி, 1ஆர்எப் இன்,1. இதனுடைய விலைப் பொருத்தவரை 94,900ஆக உள்ளது.

பேனாசோனிக் டிஎச்-58டி300டிஎக்ஸ்:
58-இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது இந்த டிவி,(1920-1080)வீடியோ பிக்சல் இவற்றுள் அடக்கம்,ஆடியோ பொருத்தவரை 20வாட்ஸ் டிஜிடல் ஸ்பீக்கர், மேலும் 3எச்டிஎம்ஐ போர்ட், 3யுஎஸ்பி, போன்றவை இவற்றில்இடம்பெற்றுள்ளது. இதன் விலை ரூ.66,990ஆக உள்ளது.

வியு 50-இன்ச் எல்இடி50கே160ஜிபி முழு எச்டி எல்இடி டிவி:
இந்த வியு 50-இன்ச் எல்இடி50கே160ஜிபி முழு எச்டி எல்இடி டிவி பொருத்தவரை 50-இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்பிளேவைக்கொண்டுள்ளது.(1920-1080) வீடியோ பிக்சல் இவற்றுள் அடக்கம். ஆடியோ பொதுவாக 10வாட்ஸ்-10வாட்ஸ் ஸ்பீக்கர்,மேலும் 2எச்டிஎம்ஐ போர்ட், 1யுஎஸ்பி, 1வஜிஏ, போன்றவை இவற்றுள் இடம்பெற்றள்ளன. இதன் விலை ரூ.34,999ஆகும்.


Click it and Unblock the Notifications