இந்தியாவில் ரூ.20,000/-க்குள் கிடைக்கும் டாப் 5 ரெஃப்ரிஜிரேட்டர்கள்.!
சாம்சங் குளிர்சாதன பெட்டி டிஜிட்டல் இன்வெர்டர் டெக்னாலஜி உடன் வருகிறது. குறிப்பாக அதன் வேகத்தை தானாகவே சரிசெய்கிறது.
வீட்டு உபயோக அத்தியாவசிய சாதனங்களில் ஒன்றாக மாறிவிட்டது இந்த ரெஃப்ரிஜிரேட்டர், பொதுவாக உணவு பொருட்களைமின்சாரம் மூலம் கெட்டு போகாமல் பார்த்து கொள்ளும் இந்த ரெஃப்ரிஜிரேட்டர், இப்போது தினசரி வாழ்கையில் இந்த சாதனம் கண்டிப்பாக தேவைப்படுகிறது.

குளிர்சாதன பெட்டி தேர்வு செய்யும் போது அதிக கவனம் தேவை, பொதுவாக குளிர்சாதன பெட்டியின் திறன், அம்சங்கள், ஸ்மார்ட் இன்வெர்டர் கம்ப்ரசர் மற்றும் ஸ்டார் மதிப்பீடு குறிப்பாக நீங்கள் வரம்பிற்குட்பட்ட பட்ஜெட்டில் வாங்க வேண்டும்.

சாம்சங் இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி (RT28M3022S8-HL):
இந்த சாம்சங் குளிர்சாதன பெட்டி டிஜிட்டல் இன்வெர்டர் டெக்னாலஜி உடன் வருகிறது. குறிப்பாக அதன் வேகத்தை தானாகவே சரிசெய்கிறது, சிக்கல் இல்லாத, நீடித்திருக்கும் தன்மையை உறுதி செய்கிறது. ஸ்மார்ட் இணைப்பு இன்வெர்டர் தொழில்நுட்பம் இவற்றில் உள்ளது, மேலும் சாம்சங் குளிர்சாதன பெட்டி 2-ஸ்டார் மதிப்பீடு கொண்டவையாக உள்ளது. பின்பு இந்த சாதனத்தின் விலை மதிப்பு பொறுத்தவரை ரூ.19,839-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேர்ல்பூல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி:
வேர்ல்பூல் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டியின் மாடல் எண்-(Neo FR258 CLS/ROY PLUS WINE GLORIA 2S) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனத்தில் எல்லா பிரிவுகளிலும் ஏர் டவர் கொண்ட சீரான கூலிங் உள்ளது. 6-வது சென்ஸ் டீப் ஃப்ரீஸ் டெக்னாலஜி மூலம் இந்த சாதனம் இயங்குகிறது, இந்த குளிர்சாதனப்பெட்டியின் மற்ற அம்சங்கள் ஐஸ் டிவிஸ்டர், டீயோவின் நறுமணச் செயல்திறன், ஐஸ் க்ரீம் டிரே மற்றும் டக்ஹென்ட் கிளாஸ் ஷெல்ஃப் போன்றவை இடம்பெற்றுள்ளது. இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.18,799-ஆக உள்ளது.

எல்ஜி ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி:
இந்த எல்ஜி குளிர்சாதன பெட்டி பொறுத்தவரை ஸ்மார்ட் இன்வெர்டர் உடன் வெளிவந்துள்ளது, மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு அதிநவீனதொழில்நுட்பங்கள் இடம்பெற்றுளது, அதன்பின் பயன்பாட்டிற்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி ஃப்ரோஸ்ட் ஃப்ரீ குளிர்சாதன பெட்டி.மேலும் இந்த சாதனத்தின் விலைப் பொறுத்தவரை ரூ.19,998-ஆக உள்ளது.

கோத்ரேஜ் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி:
கோத்ரேஜ் குளிர்சாதனப்பெட்டி அதன் பாரம்பரியத்தை பின்பற்றுகிறது, மேலும் இவற்றில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த சாதனம் ஒரு ZOP தொழில்நுட்பம் உட்பட சில சுவாரஸ்யமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. கோத்ரேஜ் குளிர்சாதன பெட்டிசாதனம் 120மப வரை சுமை தாங்கும் திறன் கொண்டவை. 10ஆண்டு கம்ப்ரசர் உத்தரவாதமும் மற்றும் இவற்றில் உள்ள இயந்திரம் ஒரு வருட உத்தரவாதமும் கொண்டது. இந்த கோத்ரேஜ் சாதனத்தின் விலை பொறுத்தவரை ரூ.17,498-ஆக உள்ளது.

ஹையர் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டி:
ஹையர் ஃப்ரோஸ்ட் ஃப்ரீ இரட்டை கதவு குளிர்சாதன பெட்டியின் மாடல் எண்-(HRF-2674BS-R / E) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சாதனம் நேரடி குளிர் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது . 3-ஸ்டார் மதிப்பீடு கொண்டவையாக உள்ளது ஹையர் ஃப்ரோஸ்ட் குளிர்சாதன பெட்டி. இவற்றின் விலைப் பொறுத்தவரை ரூ.17,998-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications