இந்தியா: வாங்கச் சிறந்த டாப் 5 பவர் பேங்க் மாடல்கள்.!
சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் பவர் பேங்க் மாடல்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் பவர் பேங்க் மாடல்கள் பட்ஜெட் விலையில் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது. அண்மையில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த ஒரு பவர் பேங்க் மாடல் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

சியோமி பவர் பேங்க்
சியோமி நிறுவனத்தின் 10000 எம்ஏஎச் திறன் கொண்ட மி பவர் பேங்க் 3i சாதனம், மிட்நைட் பிளாக் மற்றும் மெட்டாலிக் ப்ளூ வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை அமேசான் நிறுவனத்தின் Amazon.in மற்றும் சியோமியின் mi.com ஆகிய தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமியின், 20000 எம்ஏஎச் மி பவர் பேங்க் 3i சாதனம், சாண்ட்ஸ்டோன் பிளாக் நிறத்தில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு தளங்களிலும் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த இரண்டு புதிய பவர் பேங்க் சாதனங்களும் 'மேட் இன் இந்தியா' தயாரிப்புகள் என்பது குறிப்பிடத்தக்கது. 20000 எம்ஏஎச் மாடலில் மூன்று போர்ட் வெளியீடு உள்ளது, அதே நேரத்தில் 10000 எம்ஏஎச் மாடலில் டூயல் போர்ட் வசதி உள்ளது.
10000mAh கொண்ட Mi பவர் பேங்க் 3i சாதனம், 18W மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, இவை முறையே 4 மணி நேரம் முதல் 6 மணிநேரம் வரை சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. 20000mAh கொண்ட Mi பவர் பேங்க் 3i சாதனமும் 18W மற்றும் 10W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது.

சியோமி பவர் பேங்க் லோ-பவர் மோடு பட்டன்
இவை முறையே 6.9 மணி நேரம் 6 மணி நேரம் சார்ஜிங் நேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த இரண்டு பவர் பேங்க்களும் மேம்பட்ட அட்வான்ஸ் சர்க்யூட் பாதுகாப்பின் 12 அடுக்குகளைக் கொண்டுள்ளது. மி பேண்ட் மற்றும் மி ப்ளூடூத் ஹெட்செட் போன்ற சாதனங்களை சார்ஜ் செய்ய, லோ-பவர் மோடும் இதில் உள்ளது. சைடில் உள்ள லோ-பவர் மோடு பட்டனை இரண்டு முறை அழுத்தி ஆக்டிவேட் செய்யலாம்.
Mi Power Bank 3i சாதனத்தின், 10000 எம்ஏஎச் பவர் பேங்க் 3i, 251 கிராம் எடையுடன், 20000 எம்ஏஎச் பவர் பேங்க் 3i435 கிராம் எடையுடன் வருகிறது. சியோமியின் 10,000mah பவர் பேங்க் ரூ .899 என்றும் 20,000 mah பவர் பேங்க் ரூ .1,499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி பவர் பேங்க்
ரியல்மி நிறுவனம் இறுதியாக, ரியல்மி பவர் பேங்க் 30W டார்ட் மற்றும் பவர் பேங்க் 2 என்ற இரண்டு சக்தி வாய்ந்த பவர் பேங்க் சாதனங்களை நேற்று அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி 30W டார்ட் பவர் பேங்க் சாதனம், 10,000 எம்ஏஎச் திறன் கொண்டது மற்றும் 30W வயர் சார்ஜிங் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த மாடல் சீன பிரத்தியேகமாகத் தோன்றுகிறது, இதுவரை இந்த சாதனத்திற்கான எந்த விலையும் அறிவிக்கப்படவில்லை.
ரியல்மி பவர் பேங்க் 2 சாதனம், 10,000 எம்ஏஎச் திறன் கொண்டது மற்றும் 18W டூ-வே சார்ஜிங்கை இந்த பவர் பேங்க் சாதனம் ஆதரிக்கிறது. இது ஒரு யூ.எஸ்.பி-ஏ போர்ட் மற்றும் ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட் கொண்டுள்ளது. இந்த புதிய ரியல்மி பவர் பேங்க் 2 இந்தியாவில் ரியல்மின் சொந்த தளம் மற்றும் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகிறது, இதன் விலை ரூ.999 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்
இந்த இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க், 1000 எம்.ஏ.எச் லித்தியம் பேட்டரி மற்றும் சூரிய சக்தியினால் சார்ஜிங் செய்துகொள்ளும் படி உருவாக்கப்பட்டுள்ளது. டூயல் யு.எஸ்.பி சார்ஜர் போர்ட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பவர் பேங்கில், டூயல் சூப்பர் பிரைட் எல்.இ.டி பிளாஷ் லைட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்.இ.டி விளக்குகள் சுமார் 20 முதல் 30 ஆதி தூரம் வரை பிரகாசமான வெளிச்சம் தரும் என்று இன்ஸ்பையரிங் டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த சோலார் பவர் பேங்க்கில், மிக துல்லியமாகத் திசை காட்டும் மேக்னெட்டிக் காம்பஸ் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த பவர் பேங்க் ஷாக் ப்ரூஃப், வெதர் ப்ரூஃப், டஸ்ட் ப்ரூஃப் மற்றும் வாட்டர் ப்ரூஃப் சான்றுதல் பெற்றது.1000 எம்.ஏ.எச் பேட்டரி கொண்ட இந்த இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க், அமேசான் தளத்தில் வெறும் ரூ.1,999 விலையில் தற்பொழுது சலுகையுடன் விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.2,999 என்பது குறிப்பிடத்தக்கது.

ஐபால் 10000 எம்ஏஎச் பவர் பேங்க்
ஐபால் நிறுவனத்தின் 10000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது ரூ.590-விலையில் கிடைக்கும். குறிப்பாக வெள்ளை நிறத்தில் இந்த சாதனம் கிடைக்கும். மேலும் 218 கிராம் எடை மற்றும் லித்தியம் பாலிமர் பேட்டரி, மைக்ரோ, டைப்-சிகனெக்டர் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐபால் 10000 எம்ஏஎச் பவர் பேங்க்.

ஒன்பிளஸ் 10000 எம்ஏஎச் பவர் பேங்க்
ஒன்பிளஸ் 10000 எம்ஏஎச் பவர் பேங்க் ஆனது பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.1,099-விலையில் கிடைக்கிறது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட சிறந்த தொழில்நுட்ப வசதிகளை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். மேலும் இதன் எடை 225.5 கிராம், லித்தியம் பாலிமர் பேட்டரி, டைப்-சி கனெக்டர் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ்பவர் பேங்க் மாடல்.


Click it and Unblock the Notifications