ஏப்ரல் 2019: வாங்கச் சிறந்த 5 லேப்டாப் மாடல்கள்.!

ஏசர் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள ஆஸ்பியர் 5எஸ் என்ற லேப்டாப் மாடல் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-8265யு பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது.

|

அசுஸ் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த புதிய லேப்டாக் மாடல் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்த ஆண்டு டெல், அசுஸ். ஏசர், ஹெச்பி போன்ற நிறுவனங்கள் அதிகளவில் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்று தான் கூறவேண்டும். மேலும் இந்தியாவில் இப்போது வாங்கச் சிறந்த 5 லேப்டாப் மாடல்களைப் பார்ப்போம்.

 ஏசர் ஆஸ்பியர் 5எஸ்:

ஏசர் ஆஸ்பியர் 5எஸ்:

ஏசர் நிறுவனம் விற்பனைக்கு கொண்டுவந்துள்ள ஆஸ்பியர் 5எஸ் என்ற லேப்டாப் மாடல் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ5-8265யு பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 3ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் யுஎச்டி 620 கிராபிக்ஸ் வசதி
இவற்றுள் அடக்கம். 8ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க சேமிப்பு வசதியுடன் இந்த லேப்டாப் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக 15.6-இன்ச் முழு எச்டி எல்இடி பேக்லைட் டிஎப்டி ஸ்கீரின் 1920 x 1080 பிக்சல் திர்மானம் அடிப்படையாக கொண்டுள்ளது இந்த சாதனம். மேலும் 1.8கிலோ எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.42,990-விலையில் விற்பனைக்கு வருகிறது ஏசர் ஆஸ்பியர் 5எஸ்.

 டெல் இன்ஸ்பிரான் 15 5000:

டெல் இன்ஸ்பிரான் 15 5000:

டெல் இன்ஸ்பிரான் 15 5000 சாதனம் ஏஎம்டிRyzen 5 குவாட் கோர் சிபியு மற்றும் 2ஜிகாஹெர்ட் ஆதரவு கொண்டுள்ளது, பின்பு வேக 8 கிராபிக்ஸ் ஆதரவு கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இநத சாதனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் யுஎஸ்பி 2.0, யுஎஸ்பி 3.1, எச்டிஎம்ஐ, கார்டு ரீடர், ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 15.6-இன்ச் முழு எச்டி எல்இடி பேக்லைட் டிஸ்பிளே மற்றும் 1080பிக்சல் திர்மானம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.


பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.48,649-விலையில் இந்த டெல் இன்ஸ்பிரான் 15 5000 சாதனத்தை வாங்க முடியும்.

அசுஸ் TUF FX505DY-BQ002T :

அசுஸ் TUF FX505DY-BQ002T :

அசுஸ் TUF FX505DY-BQ002T லேப்டாப் மாடல் பொதுவாக 15.6-இன்ச் எப்எச்டி எல்இடி பேக்லைட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு AMD Ryzen 5 3550H பிரசாஸர் மற்றும் 8ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக AMD Radeon RX560X GDDR5 கிராபிக்ஸ் ஆதரவு உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இந்த சாதனத்தின் எடை மதிப்பு 2.2கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் TUF FX505DY-BQ002T மாடலின் ஆரம்ப விலை ரூ.49,900-ஆக உள்ளது.

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360:

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360:

ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப் மாடல் பொதுவாக 14-இன்ச் முழு எச்டி எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக்
கொண்டுள்ளது, பின்பு 1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த லேப்டாப்
மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனம் 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ3-8130யு பிராசஸர்
மற்றும் யுஎச்டி620 கிராபிக்ஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியும் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம். மேலும் யுஎஸ்பி 3.1 டைப்-ஏ போர்ட், யுஎஸ்பி 3.1 டைப்-சி
போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஹெட்போன் ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம்
வெளவந்துள்ளது.


பிளிப்கார்ட் வலைதளத்தில் ரூ.50,990-விலையில் ஹெச்பி பெவிலியன் எக்ஸ்360 லேப்டாப் மாடல் கிடைக்கிறது.

லெனோவோ ஐடியாபேட் 330எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 330எஸ்:

லெனோவோ ஐடியாபேட் 330எஸ் சாதனம் பொதுவாக 14-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1920 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக 8-வது ஜென் இன்டெல் கோர் ஐ6-8250யு பிராசஸர் மற்றும் விண்டோஸ் 10 ஹோம் இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 1டிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.


லெனோவோ ஐடியாபேட் 330எஸ் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.49,998-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 laptops that Rs 50,000 can get you, April 2019: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X