Home
Gadgets

இந்தியாவில் விற்பனையாகும் விலைக் குறைந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!

டிசிஎல் தயாரித்துள்ள 32 இன்ச் அளவு கொண்ட ஒரு பேசில் இல்லாத எல்இடி ஸ்லிம் ஹெச்டி ரெடி டிவியான இதில், 1366 x 768 பிக்ஸல் மற்றும் 178 கோணத்திலான பார்வை கோணம் கொண்டுள்ளது.

By Jijo Gilbert

இந்தியாவில் விற்பனையாகும் விலைக் குறைந்த 32 இன்ச் அளவு கொண்ட 5 முக்கிய ஸ்மார்ட் டிவிகளைக் குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம். இவை அனைத்தும் எல்இடி டிவிகள் என்பதோடு, ஆன்ட்ராய்டு டிவி ஒருங்கிணைப்பில் இயங்கி ரூ.15,500-க்கும் குறைவான விலையில் கிடைக்கின்றன.

இந்தியாவில் விற்பனையாகும் விலைக் குறைந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்.!

தைய்வா டி32சி4சி 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி, ரூ.13,490 என்ற விலை நிர்ணயத்தில் தற்போது ஃபிளிப்கார்டில் கிடைக்கப் பெறுகிறது.

கோடாக் 32ஹெச்டிஎக்ஸ் ஸ்மார்ட் 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

கோடாக் 32ஹெச்டிஎக்ஸ் ஸ்மார்ட் 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

கடந்த ஆண்டு மே மாதம் தனது 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவியை, 32ஹெச்டிஎக்ஸ் ஸ்மார்ட் என கோடாக் நிறுவனம் வெளியிட்டது. கண்கூசாத சாம்சங் நிறுவனத்தின் டிஸ்ப்ளே உடன் கூடிய ஒரு டிஎல்இடி டிவி ஆன இது, 1366 x 768 பிக்ஸல் பகுப்பாய்வு மற்றும் 6.5 எம்எஸ் பதிலளிப்பு நேரமாக கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளேயில் 250 நைட்ஸ் ஒளிர்வு என்பது ஒரு சிறப்பான செயல்பாடு அல்ல என்றாலும், இதன் 10000:1 விகிதத்திலான கான்ட்ராஸ்ட் மற்றும் 178 கோணத்திலான பார்வை கோணம் அதிகமாக பேசப்பட்டது.

வைஃபை மற்றும் லேன் மூலம் இணையதளத்தை இணைக்க ஏதுவாக, உள்ளக சேமிப்பாக 8ஜிபி மற்றும் 1 ஜிபி ரேம் உடன் 1.5 ஜிஹெச்இசட் இயக்கக் கூடிய ஒரு ஏஆர்எம் கார்டெக்ஸ்-ஏ7 செயலியை கோடாக் டிவி பெற்றுள்ளது. ஆன்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்கும் இது, டிவி சந்தையில் உள்ள மற்ற எல்லா தயாரிப்புகளையும் விட, விலை நிலவரத்திலாவது முன்னணி வகிக்கிறது. 3 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 3.5மிமீ ஆடியோ ஜெக், 2 யூஎஸ்பி போர்ட்கள், 2 ஏவி உள்ளீடுகள் மற்றும் ஒரு ஆடியோ உள்ளீடு உள்ளிட்ட இணைப்பு தேர்வுகள் உள்ளன.

எல்லா முக்கிய அப்ளிகேஷன்களையும் ஆப்டியோடு ஸ்டோர் மூலம் டிவியில் பதிவிறக்கம் செய்ய முடியும். இது தவிர, டிஜிட்டல் ஒலி குறைப்பு, உள் கட்டமைப்பு கொண்ட டிஜிட்டல் மீடியா, மற்ற ஆடியோ அமைப்புகளை இணைக்கும் வகையில் டிஜிட்டல் ஆடியோ வெளியீடு, குழந்தைகள் காப்பு பூட்டு மற்றும் நள்ளிரவு மோடு உள்ளிட்ட கூடுதல் அம்சங்களும் காணப்படுகின்றன.

இந்த கோடாக் 32 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி, ஒரு வருட கோடாக் இந்தியா உத்தரவாதத்தோடு, ஃபிளிப்கார்ட்டில் ரூ.15,499 என்ற குறைந்த விலை நிர்ணயத்தில் கிடைக்கிறது.

டிசிஎல் ஐஃபால்கான் 32எஃப்2 32 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

டிசிஎல் ஐஃபால்கான் 32எஃப்2 32 இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் எல்இடி டிவி:

டிசிஎல் தயாரித்துள்ள 32 இன்ச் அளவு கொண்ட ஒரு பேசில் இல்லாத எல்இடி ஸ்லிம் ஹெச்டி ரெடி டிவியான இதில், 1366 x 768 பிக்ஸல் மற்றும் 178 கோணத்திலான பார்வை கோணம் கொண்டுள்ளது. இதில் டால்பி-யில் இருந்து ஆடியோ ஆதரவைப் பெற்று, 6000:1 என்ற ஒரு குறைந்த புள்ளிவிவர கான்ட்ராஸ்ட் விகிதத்தில் அளிக்கிறது.

ஐஃபால்கான் 32எஃப்2-யை ஒரு இரட்டை கோர் ஏ9 செயலி இயக்குகிறது. இதனுடன் ஒரு இரட்டை கோர் மாலி ஜிபியூ, 768எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளக நினைவகம் ஆகியவை இணைந்துள்ளன.

இணைப்பை பொறுத்த வரை, 3 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், ஒரு ஹெட்போன் ஜெக் மற்றும் இணையதளத்திற்கான ஒரு இத்தர்நெட் ஆர்ஜெ45 போர்ட் உள்ளிட்டவை உள்ளன. இது தவிர, திரை பிரதிபலிப்பு, இன்டர்நெட் பிரவுஸிங், டி-கேஸ்ட் உள்ளிட்ட கூடுதல் அம்சங்கள் மூலம் உங்கள் ஸ்மார்ட்போனைப் பயன்படுத்தி டிவியைக் கட்டுப்படுத்த முடியும்.

இந்த மாதம் 7 ஆம் தேதியில் இருந்து இந்த டிவி, இந்தியா முழுவதும் ஃபிளிப்கார்ட் மூலம் ரூ.13,499 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்க உள்ளது.

தாம்ஸன் 32எம்3277 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

தாம்ஸன் 32எம்3277 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

கடந்த மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிவிக்கப்பட்ட தாம்ஸன் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் டிவிகளின் வரிசையில், 32 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே உடன் 1366 x 768 என்ற சிறப்பான பகுப்பாய்வுடன் 60ஹெச்இசட் புதுப்பிப்பு விகிதம் ஆகியவற்றை கொண்ட தாம்ஸன் 32எம்3277, மிகவும் விலைக் குறைந்ததாக உள்ளது. தனது போட்டியாளர்களைப் பின்னுக்கு தள்ளக் கூடிய 450நைட்ஸ் ஒளிர்வு மற்றும் கிரேடு ஏ+ மூலம் நிற தெரிநிலை உடன் 200000:1 என்ற உயர்ந்த டைனாமிக் கான்ட்ராஸ்ட் விகிதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இந்த டிவி, 64-பிட் 1.4 ஜிஹெச்இசட் ஏஆர்எம் கார்டெக்ஸ் சிஏ53 செயலி உடன் ஜிபியூ ஆக மாலி-டி720எம்பி5, 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளக சேமிப்பகம் ஆகியவற்றால் இயக்கப்படுகிறது. ஆன்ட்ராய்டு 5.1.1 லாலிபாப் மூலம் இயங்கி, யூடியூப், ஜிமெயில் ஆகியவற்றை கொண்டுள்ளது.

தாம்ஸன் டிவியில் 3 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 2 யூஎஸ்பி போர்ட்கள், ஒரு ஹெட்போன் ஜெக், டிஜிட்டல் ஆடியோ வெளியீடு, ஆர்எஃப் இணைப்பிற்கான உள்ளீடு மற்றும் வெளியீடு ஆகியவற்றை கொண்டு, இதில் பெரும்பாலானவை பக்கவாட்டில் இருந்து இயக்கக் கூடியதாக உள்ளது. மேலும் இதில் ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு, பஞ்சாபி, போஞ்பூரி, மராத்தி, பெங்காலி, குஜராத்தி, ஒரியா, சிங்களா, உருது மற்றும் ராஜஸ்தானி ஆகிய மொழிகளில் உள்ளடக்கங்கள் அளிக்கப்படுகிறது. கூடுதல் அம்சங்களாக, தானியங்கி ஒலி கூட்டும் வசதி, டிஜிட்டல் மீடியா பிளேயர் உள்ளடக்கம், ஒலி குறைப்பு 3டி, ஸ்போர்ட்ஸ் மோடு மற்றும் டோட்டல் சர்ரவுண்டு ஆகியவை அளிக்கப்படுகின்றன.

இந்த மாதம் 2 ஆம் தேதியில் இருந்து ஃபிளிப்கார்டில் விற்பனைக்கு வரும் தாம்ஸன் 32எம்3277 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி, ரூ.13,499 என்ற விலையில் விற்கப்பட உள்ளது.

 சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 80 செமீ:

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 80 செமீ:

இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் மூலம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ள சியோமி நிறுவனம், இப்போது சியாமி ஸ்மார்ட் டிவி 4ஏ உடன் டிவி வியாபாரத்தில் களமிறங்கி உள்ளது. துவக்க நிலையைச் சேர்ந்த மி டிவி 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில், 1366 x 768 பிக்ஸல் மற்றும் 60ஹெச்இசட் புதுப்பிப்பு விகிதம் உடன் 6.5எம்எஸ் நேரத்தைப் பதிலளிக்க எடுத்து கொள்கிறது. இதன் மெதுவான 60எஃப்பிஎஸ் பிரேம் விகிதம், இரட்டை 10டபில்யூ ஆடியோ யூனிட் ஆகியவை மூலம் குறைந்த விலையில் தடையில்லாத பொழுதுபோக்கை அளிக்கிறது.

இது ஒரு குவாட்-கோர் ஆம்லாஜிக் செயலி உடன் 8 ஜிபி உள்ளக நினைவகம் மற்றும் 1ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டு செயல்படுகிறது. இதன் வரிசையில் உள்ள மற்ற டிவிகளைப் போலவே, 3 ஹெச்டிஎம்ஐ போர்ட்கள், 3 யூஎஸ்பி போர்ட்கள், ஒரு இத்தர்நெட் போர்ட் மற்றும் வைஃபை 802.11 ஏ/பி/ஜி/என் ஆகியவை காணப்படுகின்றன. டிவியை இயக்க அதை நோக்கி ரிமோட்டை நீட்ட தேவையில்லாத வகையில், 11 -பொத்தான் மீ ரிமோட் மற்றும் பல்வேறு ஏஐ அம்சங்களைக் கொண்டுள்ளது.

சியோமி மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 80செமீ (32-இன்ச்) ரூ.13,999 என்ற விலை நிர்ணயத்தில் ஃபிளிப்கார்ட் அல்லது அந்நிறுவனத்தின் Mi.com இல் விற்பனைக்கு வர உள்ளது.

தைய்வா டி32சி4எஸ் 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

தைய்வா டி32சி4எஸ் 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி:

கடந்தாண்டு இறுதியில் வீடியோடெக்ஸ் இன்டர்நேஷ்னலின் ஒரு துணைப் பிரிவான தைய்வா மூலம் 32-இன்ச் ஹெச்டி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 1366 x 768 பிக்ஸல் பகுப்பாய்வு கொண்ட ஒரு திரை உடன் ஹெச்ஆர்டிபி தொழில்நுட்பமும் சேர்த்து அளிக்கப்படுகிறது. மேலும் 178 கோணத்தில் பார்வை கோணம், ஏ+ கிரேடு பேனல், பதிலளிப்பு நேரம் 6.5எம்எஸ் மற்றும் 250 நைட்ஸ் ஒளிர்வு ஆகியவற்றை கொண்டுள்ளது.

இது, இரட்டை கோர் சிப்செட் உடன் 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளக நினைகத்தைக் கொண்டு செயல்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியில் இணைப்பிற்கு, 2 ஹெச்டிஎம்ஐ, 2 யூஎஸ்பி, கோ-ஏஎக்ஸ் வெளியீடு போர்ட்கள் மற்றும் இணையதளத்தில் பிரவுஸிங் செய்ய ஏதுவாக உள்கட்டமைப்பு கொண்ட வைஃபை ஆதரவு ஆகியவற்றை கொண்டுள்ளது. ஆன்ட்ராய்டு 4.4.4 கிட்கேட் மூலம் இயங்கும் இந்த டிவிக்கான ரிமோட் கன்ட்ரோல் உடன் ஒரு மவுஸூம் அளிக்கப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு அப்ளிகேஷன்கள் மற்றும் குறுக்குவழிகளைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் முடியும்.


இந்த தைய்வா டி32சி4சி 32 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி, ரூ.13,490 என்ற விலை நிர்ணயத்தில் தற்போது ஃபிளிப்கார்டில் கிடைக்கப் பெறுகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 cheapest 32-inch Budget Smart TVs in India ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X