ஜூலை 2018 : பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த டாப் 5 ஸ்மார்ட் டிவிகள்.!

By Sharath
|

நம்ம ஊரு கிளைமேட் அடுப்பில் வேகுற நமக்குத் தான் தெரியும் வீக்கெண்ட்ல வெளியே போவது எவ்வளவு கஷ்டமென்று. வெளியே போகாமல் வீட்டில் இருந்தபடி நெட்பிலிக்ஸ், ஒரு நல்ல திரைப்படத்தை பாக்க அல்லது சூப்பரான கேம் விஆர்(VR) ஹெட்செட்டுடன் விளையாடி நம்ம நேரத்தைக் கழிக்க ஒரு சூப்பர் ஸ்மார்ட் டிவி இருந்த நல்ல இருக்கும்ல.

என்ன யோசிக்கிறீங்கனு எனக்குத் தெரியும், அதுலாம் விலை அதிகமென்று தானே. கவலையா விடுங்க உங்களுக்காகவே 5 பெஸ்ட் பட்ஜெட் ஸ்மார்ட் டிவி பட்டியலை ரெடி பனி இருக்கிறோம்.

1. சியோமி மி ஸ்மார்ட் டிவி 4எ

1. சியோமி மி ஸ்மார்ட் டிவி 4எ

சியோமி நிறுவனம் போன மார்ச் மாதம் தன்னுடைய சியோமி மி ஸ்மார்ட் டிவி 4எ மாடல் டிவி-யை அறிமுகம் செய்துள்ளார்கள். இதோட பட்ஜெட் விளைய சொன்னா கண்டிப்பா நம்ப மாட்டீங்க.

சியோமி மி ஸ்மார்ட் டிவி 4எ விவரக்குறிப்பு:

- 1366 x 768 பிக்சல்கள் தீர்மானம், 60Hz புதுப்பித்தல்

வீதம், 60fps பிரேம் வீதத்துடன்.

- இரட்டை 10W ஆடியோ ஸ்பீக்கருடன் டிடிஎஸ் (DTS)

- 1.5GHz குவாட் கோர் அமோலஜிக் ப்ரோஸஸ்ஸர், மாலி

- 450 MP5 ஜி.பீ.யூ உடன்

- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்பு

- மூன்று HDMI போர்ட்

- மூன்று USB போர்ட்

- ஒரு எட்த்தர்னல் போர்ட், வைஃபை 802.11, ப்ளூடூத்

இத்துடன் 11 பட்டன் கொண்ட ஸ்மார்ட் ரிமோட் தரப்படுகிறது, பேட்ச்வால் (Patch Wall)செயலி மூலம் செய்கை கட்டலையும் இதில் உள்ளது. இதில் ஸ்கிரீன் மிரரிங் சேவையும் உள்ளது.

விலை: ரூ 13,999

2.தாம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி பி9 புரோ

2.தாம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி பி9 புரோ

தொம்சன் நிறுவனம் போன ஏப்ரல்-ல தொம்சன் எல்இடி ஸ்மார்ட் டிவி பி9 புரோ மாடலை அறிமுகம் செஞ்சிருக்காங்க.

விவரக்குறிப்பு:

- 32 இன்ச் 1366x768 பிக்சல்கள் மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதம்

- 200000: 1 கான்ட்ராஸ்ட் மற்றும் பிரைட்னெஸ் 450 விகிதம்

- 5 சவுண்ட் மோட் 20W ஆடியோ ஸ்பீக்கருடன்

- மாலி T720MP5 ஜி.பீ. உடன் இணைந்து 1.4GHz ஏஆர்எம் கார்டெக்ஸ் CA53 செயலி

- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்பு

- ஆன்ட்ராய்டு 5.1.1 இயக்க முறை

- மூன்று HDMI போர்ட்

- இரண்டு USB போர்ட்

- டிஜிட்டல் ஆடியோ வெளியீடு, RF இணைப்பு

கூடுதல் அம்சங்களாக ஆட்டோமேடிக் ஆடியோ நிலை, டிஜிட்டல் மீடியா பிளேயர் உள்ளடக்கம், நாய்ஸ் குறைப்பு 3D, கேம் அடங்கும்.

விலை: ரூ 13,499

3.டிசிஎல் இஃப்பல்கோன் எப்2 ஸ்மார்ட் டிவி

3.டிசிஎல் இஃப்பல்கோன் எப்2 ஸ்மார்ட் டிவி

டிசிஎல் இஃப்பல்கோன் எப்2 ஸ்மார்ட் டிவி மாடல் ஏப்ரல் மாதம் அறிமுகம் ஆகியுள்ளது.

விவரக்குறிப்பு:

- 32 இன்ச் 1366 x 768 பிக்சல்கள் மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதம்

- 6000:1 கான்ட்ராஸ்ட் மற்றும் பிரைட்னெஸ் 450 விகிதம்

- டால்பி சவுண்ட் மோட் ஸ்பீக்கருடன்

- ஒரு இரட்டைக் கோர் மாலி ஜி.பீ.யு இணைந்த டுயல் கோர் A9 செயலி

- 768 எம்பி ரேம் மற்றும் 4 ஜிபி உள் சேமிப்பு

- ஆன்ட்ராய்டு 5.1.1 இயக்க முறை

- மூன்று HDMI போர்ட்

- இரண்டு USB போர்ட்

இத்துடன் லைட்டிங் பாதுகாப்பு, ஹீட் வென்டிலேஷன், மின்சார சேமிப்பு என பல பரிமாணங்களுடன் வருகிறது.

விலை: ரூ19,999

4.வியூ ஐகானியும் அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி

4.வியூ ஐகானியும் அல்ட்ரா எச்டி 4K ஸ்மார்ட் டிவி

வியூ நிறுவனத்தின் இந்த அட்டகாசமான 4K ஸ்மார்ட் டிவி-ஐ விற்பனைக்கு ஐஆர் ரிமோட்டுடன் ப்ளூடூத் இணைப்புடன் கொண்டுவந்துள்ளது. அதன் ரிமோட் கண்ட்ரோல் யூடூப்,ஹாட்ஸ்டார் , ஆப் ஸ்டார் மற்றும் மீடியாவின் குறுக்குவழி பட்டன்களை கொண்டுள்ளது, இது உங்கள் உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது.

விவரக்குறிப்பு:

- 43 இன்ச் 4K 3840x2160 பிக்சல்கள் மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதம்

- டால்பி சவுண்ட் மோட் 10W இரண்டு ஸ்பீக்கருடன்

- உள் சேமிப்பு கிடையாது

- ஆன்ட்ராய்டு 7.0 நௌகாட் இயக்க முறை

- மூன்று HDMI போர்ட்

- இரண்டு USB போர்ட்

இத்துடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக், ARC / CEC, வைஃபை, ஈத்தர்நெட் போர்ட்.

விலை: ரூ 29,999

5.கோடாக் முழு எச்டி ஸ்மார்ட் டிவி

5.கோடாக் முழு எச்டி ஸ்மார்ட் டிவி

கோடாக் நிறுவனத்தின் இந்த 50 இன்ச் பெரிய திரை ஸ்மார்ட் டிவி பிலிப்கார்ட்-இல் கிடைக்கிறது.

விவரக்குறிப்பு:

- 50 இன்ச் முழு எச்டி 1920 x 1080 பிக்சல்கள் மற்றும் 60Hz புதுப்பிப்பு விகிதம்

- டைனமிக் பட விரிவாக்கம் தொழில்நுட்பம்

- 10W இரண்டு ஆடியோ ஸ்பீக்கருடன்

- 1.3GHz டூயல் கோர் செயலி

- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள் சேமிப்பு

- ஆன்ட்ராய்டு இயக்க முறை

- இரண்டு HDMI போர்ட்

- இரண்டு USB போர்ட்

இதர அம்சங்களாக லான் வசதி மற்றும் ஸ்கிரீன் ஷாட் வசதியும் வருகிறது. இந்த பட்ஜெட் விலையில் 50 இன்ச் பெரிய திரை கொண்ட ஒரே ஸ்மார்ட் டிவி இது மட்டுமே.

விலை: ரூ 29,999

இனிமேல் வீக்கெண்ட் பிளான் பற்றிய கவலை வேண்டாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Top 5 Budget Smart TVs in India, July 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X