ஜூலை 2017 : இந்தியாவில் விற்கப்படும் டாப் 5 ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்.!

போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் முக்கிய சிறப்பம்சமானது ஆம்னி திசைஒலி வெளியீடு மற்றும் புதிய ஒலி வடிவமைப்பை கொடுக்கின்றது.

By Prakash
|

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் விரும்புவது ஸ்பீக்கர்கள். தற்போது வரும் அருமையான இசைகளுக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் சிறந்த ஸ்பீக்கர்களை வாங்குவது நல்லது. மேலும் தற்போது வரும் ப்ளூடூத் வயர்லெஸ் ஸ்பீக்கர்கள் பொறுத்தவரை அனைவரையும் கவரும்படி சிறந்த தோற்றத்தில் வருகிறது.

இந்த ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் முக்கிய சிறப்பம்சங்கள் என்னவென்றால் அனைத்து இடங்களுக்கும் எடுத்து சென்று பயன்படுத்த முடியும். மேலும் தற்போது இந்தியாவில் வந்துள்ள தலைசிறந்த டாப் 5 ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் வரிசைகளைப் பார்ப்போம்.

போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ்:

போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ்:

போஸ் சவுண்ட்லிங்க் ரிவால்வ் ப்ளூடூத் ஸ்பீக்கர்களின் முக்கிய சிறப்பம்சமானது ஆம்னி திசைஒலி வெளியீடு மற்றும் புதிய ஒலி வடிவமைப்பை கொடுக்கின்றது. மேலும் இது 360 டிகிரி ஒலிக்கு ஆதரவளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் பிரீமியம் மியூசிக் அனுபவங்களை சிறப்பாக கொடுக்கு தன்மையைக் கொண்டவை. இதன்விலைப் பொறுத்தவரை ரூ.19,990ஆக இருக்கிறது. சவுண்ட்லிங்க் ரிவால்வ் 12 மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டவை, அதன்பின் 680கிராம் எடை கொண்டிருக்கிறது.

ஜேபிஎல் பிளிப் 4:

ஜேபிஎல் பிளிப் 4:

ஜேபிஎல் பிளிப் 4 ஸ்பீக்கர் ப்ளூடூத் பதிப்பு 4.2 உடன் வருகிறது, 2 ஸ்மார்ட்போன்கள் அல்லது 2 டேப்லட் வரை இதில் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் 3000எம்ஏச் பேட்டரி மூலம் செயல்படுகிறது. அதன்பின் 12மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது. இதன்விலைப் பொறுத்தவரை ரூ.15,699ஆக உள்ளது.

அல்டிமேட் இயர்ஸ் வார்பூம்:

அல்டிமேட் இயர்ஸ் வார்பூம்:

இந்த ஸ்பீக்கர் விலைப் பொறுத்தவரை ரூ.7,995ஆக உள்ளது. மேலும் சிறந்த ஒலி ஆற்றலைப் பெற்றது இந்த அருமையான
ஸ்பீக்கர்கள். இந்த ஸ்பீக்கர் கருப்பு, சிவப்பு, நீலம், சாம்பல் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.10மணி நேரம் பேட்டரி ஆயுள் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்பீக்கர்.

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி10:

சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி10:

இந்த ஸ்பீக்கர் ப்ளூடூத் பதிப்பு 4.2 உடன் வருகிறது, அதன்பின் வயர்லெஸ் வரம்பில் 10 மீட்டர் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி10 பொறுத்தவரை 16மணி நேரம் வரை பேட்டரி ஆயுள் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விலைப் பொறுத்தவரை ரூ.3,849ஆக உள்ளது.

 கிரியேட்டிவ் சவுண்ட் பிளாஸ்டர் ரோர் 2:

கிரியேட்டிவ் சவுண்ட் பிளாஸ்டர் ரோர் 2:

இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் முன்னனி பெற்றுள்ளது இந்த கிரியேட்டிவ் சவுண்ட் பிளாஸ்டர் ரோர் 2 ஸ்பீக்கர்,பல்வேறு செயல்திறன்களை கொண்டுள்ளது. மேலும் 6000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது இந்த ஸ்பீக்கர், இதன்விலைப் பொறுத்தவரை ரூ.16,990ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Top 5 Bluetooth Speakers in India July 2017 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X