வாங்குனா இந்த 3 Smart TV-ல ஒன்னு வாங்குங்க.. ஏன்னா இந்த 2022-ல் அதிகம் பேர் இதை தான் வாங்கி இருக்காங்க!

|

நீங்கள் ஏற்கனவே ஒரு ஸ்மார்ட் டிவியை (Smart TV) வாங்கி விட்டாலும் சரி அல்லது ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை வாங்க வேண்டும் என்கிற தேடலில் இருந்தாலும் சரி.. இந்த கட்டுரை முழுக்க முழுக்க உங்களுக்கானது தான்!

ஏனென்றால் இந்த 2022 ஆம் ஆண்டில், எந்தெந்த நிறுவனங்களின் கீழ், எந்தெந்த ஸ்மார்ட் டிவிகள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற பட்டியலையே நாம் இங்கே பார்க்க உள்ளோம்:

ஏற்கனவே வாங்கிட்டாலும் சரி.. இனிமேல் தான் வாங்க போகிறீர்கள் என்றாலும் சரி!

ஏற்கனவே வாங்கிட்டாலும் சரி.. இனிமேல் தான் வாங்க போகிறீர்கள் என்றாலும் சரி!

நாம் இங்கே காணப்பப்போகும் பட்டியலில், நீங்கள் ஏற்கனவே வாங்கிவிட்ட ஒரு ஸ்மார்ட் டிவி இருந்தால்.. நீங்கள் சரியான டிவியை தான் தேர்வு செய்து உள்ளீர்கள் என்று அர்த்தம்.

ஒருவேளை, நீங்கள் இன்னமும் ஒரு நல்ல ஸ்மார்ட் டிவியை கண்டுபிடிக்கவில்லை என்றால் இந்த பட்டியல் உங்களுக்கு நிச்சயம் உதவும்; சந்தேகமே வேண்டாம்!

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

தொடர்ந்து முதலிடம்!

தொடர்ந்து முதலிடம்!

சமீபத்திய கவுன்டர்பாயின்ட் (Counterpoint) அறிக்கையின்படி, இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிப்பது - சீன நிறுவனமான சியோமி (Xiaomi) தான்!

வெளியான அறிக்கையின்படி, இந்த 2022 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் சியோமி நிறுவனத்தின் ஏற்றுமதிகள் ஆண்டுக்கு ஆண்டு (YoY) என்கிற அடிப்படையில் 38% அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நடந்துமுடிந்த பண்டிகை கால விற்பனைகள், அதன் கீழ் அறிவிக்கப்பட்ட தள்ளுபடிகள் மற்றும் மக்கள் மத்தியில் இருந்த ஸ்மார்ட் டிவிகளுக்கான வலுவான தேவையே - சியோமி நிறுவனத்தின் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சியோமியின் எந்தெந்த மாடல்கள் விற்பனையில் பட்டையை கிளப்பி உள்ளன?

சியோமியின் எந்தெந்த மாடல்கள் விற்பனையில் பட்டையை கிளப்பி உள்ளன?

கவுன்டர்பாயின்ட் அறிக்கையின்படி - இந்த 2022 ஆம் ஆண்டில் - சியோமி நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் எம்ஐ 4ஏ ஹாரிஸன் எடிஷன் (Mi 4A Horizon Edition), சியோமி 5ஏ சீரீஸ் (Xiaomi 5A Series) மற்றும் ரெட்மி ஸ்மார்ட் டிவி சீரீஸ் (Redmi Smart Series) மாடல்கள் ஆனது அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன!

ஒருவேளை இந்தக் 3 டிவிகளில் ஒன்றைத்தான் நீங்கள் வாங்கி உள்ளீர்கள் என்றால், பலரும் நம்பி வாங்கியுள்ள ஒரு டிவியைத்தான் நீங்களும் வாங்கி உள்ளீர்கள் என்று அர்த்தம்!

அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!அவஸ்தை படாதீங்க! வீட்டில் இருந்தபடியே மின் இணைப்பு (EB) எண்ணை ஆதார் உடன் இணைக்க ஒரு ஈஸியான வழி இருக்கு!

இந்த பட்டியலில் சாம்சங் டிவிகளும் உள்ளன!

இந்த பட்டியலில் சாம்சங் டிவிகளும் உள்ளன!

இந்த 2022 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது ஸ்மார்ட் டிவி பிரான்ட் - சாம்சங் (Samsung) ஆகும்! இந்நிறுவனம் இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் 10% பங்குடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் T4000 மற்றும் T5000 சீரீஸ் மாடல்களைத்தான் அதிகம் பேர் தேர்வு செய்துள்ளனர். எனவே உங்களுக்கு சியோமி நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளை வாங்க விருப்பம் இல்லை என்றால், சாம்சங் நிறுவனத்தின் (மேற்கண்ட) டிவி மாடல்களில் ஒன்றை தேர்வு செய்யலாம்!

எல்ஜி மற்றும் ஒன்பிளஸ்-க்கு என்ன இடம்?

எல்ஜி மற்றும் ஒன்பிளஸ்-க்கு என்ன இடம்?

சாம்சங் நிறுவனத்தின் கடும் போட்டியாளரான எல்ஜி (LG) அதன் ஓஎல்இடி டிவிகளுக்கு (OLED TV) கிடைத்த வரவேற்ப்பின் அடிப்படையில், 9% பங்குடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

நான்காவது இடம் - ஒன்பிளஸ் (OnePlus) உள்ளது. இந்நிறுவனத்தின் கீழ் வாங்க கிடைக்கும் Y1, Y1S மற்றும் Y1S Pro சீரீஸ் மாடல்கள் ஆனது அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

5% பங்குடன், இந்த டாப் 5 பட்டியலின் கடைசி இடத்தில் இருப்பது - வு (VU) நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்தின் கீழ், மிட்-ரேன்ஜ் விலைப்பிரிவின் கீழ் வாங்க கிடைக்கும் GloLED சீரீஸ் மாடல்கள் ஆனது அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!சோமாலியாவில் விழுந்த விண்கல்.. இரண்டாக வெட்டி பார்த்த போது உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

போட்டிப் போட்டு வாங்கப்பட்ட டிவி சைஸ் (TV Size) எது?

போட்டிப் போட்டு வாங்கப்பட்ட டிவி சைஸ் (TV Size) எது?

கவுன்டர்பாயின்ட்டின் கூற்றுப்படி, இந்திய மக்கள் சிறிய அளவிலான டிவி மாடல்களையே அதிகம் வாங்கி உள்ளனர். அதாவது 32-இன்ச் முதல் 42-இன்ச் டிஸ்ப்ளேக்களை கொண்ட ஸ்மார்ட் டிவிகள் தான், இந்த காலாண்டில் நடந்த மொத்த ஏற்றுமதியில் கிட்டத்தட்ட பாதி இடத்தை பிடித்துள்ளன.

டிஸ்பிளே தொழில்நுட்பம் (Display technology) என்று வரும்போது, ​​எல்இடி (LED) டிஸ்ப்ளேக்கள் ஆனது இந்தியர்களுக்கான மிகவும் விருப்பமான தேர்வாக அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக OLED மற்றும் QLED மாடல்கள் உள்ளன!

Best Mobiles in India

English summary
Top 5 Best Smart TV Brands in India And Its Top Selling Models According To 2022 Counterpoint Report

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X