ஒன்பிளஸ் முதல் ரெட்மி வரை: 2022-ல் சிறந்த டாப் 5 ஸ்மார்ட் வாட்ச்கள்.! இதோ பட்டியல்.!

|

இந்த ஆண்டு ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் மாடல்களை விட ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருந்தது. அதிலும் பல முன்னணி நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் போட்டிப் போட்டுக்கொண்டு அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தன என்றுதான் கூறவேண்டும்.

டாப் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடல்

அதேபோல் இந்த மாதம் கூட போட் உள்ளிட்ட பல அசத்தலான நிறுவனங்கள் கம்மி விலையில் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகம் செய்தன. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். 2022-ல் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைத்த சிறந்த டாப் 5 ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை இப்போது பார்ப்போம்.

2023 ஆரம்பத்திலேயே அட்டகாச 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிடும் பிரபல நிறுவனம்!2023 ஆரம்பத்திலேயே அட்டகாச 5G ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் இறக்கிவிடும் பிரபல நிறுவனம்!

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்

ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட்ச்

இந்த ஆண்டு ஒன்பிளஸ் நிறுவனம் அதன் முதல் நோர்ட் சீரிஸ் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. குறிப்பாக ரூ.4999-விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஒன்பிளஸ் நோர்ட் வாட்ச் ஆனது AMOLED பேனல் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்தது. குறிப்பாக இதன் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் நோர்ட் ஸ்மார்ட்வாட் ஆனது multiple watch faces, ஸ்போர்ட்ஸ் மோட், 10-நாள் பேட்டரி, SpO2, இதயத் துடிப்பு சென்சார், மன அழுத்த மானிட்டர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்தது.

ஹாசல்ப்ளாட் கேமரா, அலர்ட் ஸ்லைடர் என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!ஹாசல்ப்ளாட் கேமரா, அலர்ட் ஸ்லைடர் என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!

ரியல்மி வாட்ச் 3

ரியல்மி வாட்ச் 3

ஆப்பிள் வாட்சைப் போலவே தெரியும் இந்த ரியல்மி வாட்ச் 3 மாடலுக்கு இந்த ஆண்டு நல்ல வரவேற்பு இருந்தது. குறிப்பாக பயனர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் மற்றும் ஐபோனை புளூடூத் மூலம் இணைத்த பிறகு நேரடியாக அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.3,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த ரியல்மி வாட்ச் 3 மாடல்.

அமேஸ்ஃபிட் Bip 3

அமேஸ்ஃபிட் Bip 3

அமேஸ்ஃபிட் Bip 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.3,499-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டில் அதிக வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்கியுள்ளனர். அதாவது சிறந்த வடிவமைப்புடன் கிட்டத்தட்ட அனைத்து சிறப்பு அம்சங்களையும் வழங்குகிறது இந்த அமேஸ்ஃபிட் Bip 3 மாடல்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் 10 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது. மேலும் ஸ்லீப் டிராக்கர், இதய துடிப்பு சென்சார், SpO2 மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை வழங்குகிறது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

ஹாசல்ப்ளாட் கேமரா, அலர்ட் ஸ்லைடர் என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!ஹாசல்ப்ளாட் கேமரா, அலர்ட் ஸ்லைடர் என ரசிகர்களுக்கு பிடித்த அம்சங்களுடன் மீண்டும் வரும் ஒன்பிளஸ்!

ஃபயர் போல்ட் ரிங் 3

ஃபயர் போல்ட் ரிங் 3

ரியல்மி வாட்ச் 3 போலவே ஃபயர் போல்ட் ரிங் 3 ஆனது புளூடூத் அழைப்பு மற்றும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பின்பு டயலை சுழற்றுவதன் மூலம் பயனர்கள் வால்பேப்பர் அல்லது வாட்ச் ஃபேஸ்களை மாற்றலாம். குறிப்பாகச் சிறந்த வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்வாட்ச்.

இதுதவிர கால்குலேட்டர் மற்றும் கேம்கள், SpO2 மற்றும் இதய துடிப்பு சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.

ரூ.8700க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? மொத்த போனையும் தூக்கி சாப்பிடும் புதிய Honor போன்!ரூ.8700க்கு இப்படி ஒரு ஸ்மார்ட்போனா? மொத்த போனையும் தூக்கி சாப்பிடும் புதிய Honor போன்!

ரெட்மி வாட்ச் 2 லைட்

ரெட்மி வாட்ச் 2 லைட்

ரெட்மி நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் இந்நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்த ரெட்மி வாட்ச் 2 லைட் மாடலுக்கு அதிக வரவேற்பு இருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி வாட்ச் 2 லைட் ஆனது pO2 டிராக்கர், ஸ்ட்ரெஸ் மற்றும் ஸ்லீப் கண்காணிப்பு, 5ATM வாட்டர் ரெசிஸ்டண்ட் பில்ட், 120+ வாட்ச் ஃபேஸ்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த ரெட்மி ஸ்மார்ட்வாட்ச் மாடலின் விலை ரூ.3,499-ஆக உள்ளது.

ஓ... இதுக்கு பேரு தான் ஆப்பு ? ஏர்டெல்லின் பிரபலமான திட்டத்திற்கு செக் வைத்த Jio-வின் புதிய திட்டம்!ஓ... இதுக்கு பேரு தான் ஆப்பு ? ஏர்டெல்லின் பிரபலமான திட்டத்திற்கு செக் வைத்த Jio-வின் புதிய திட்டம்!

ஒன்பிளஸ்

அதேபோல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரெட்மி, ஒன்பிளஸ் நிறுவனங்கள் பல அசத்தலான ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன. இதுதவிர பல முன்னணி நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளன.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Top 5 Best Cheap Smartwatches in 2022 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X