ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்: இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் தான் பெஸ்ட்.! இதோ பட்டியல்.!

|

இந்தியாவில் தற்போது 55-இன்ச், 43-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை விட 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு தான் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக பல நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அருமையான 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன.

32-இன்ச் ஸ்மார்ட் டிவிகள்

அதேபோல் இப்போது வரும் 32-இன்ச் ஸ்மார்ட்டிவிகள் தனித்துவமான வடிவமைப்பு, சிறந்த டிஸ்பிளே,தரமான ஆடியோ வசதி, அருமையான மென்பொருள் வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவருகின்றன என்றுதான் கூறவேண்டும். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவதுஇந்தியாவில் வாங்கச் சிறந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளின் பட்டியலைப் பார்ப்போம்.

இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!இந்த லிஸ்ட்ல உங்க போன் இருந்தா நீங்க லக்கி.! இல்லனா 5G யூஸ் பண்ண வாய்ப்பே இல்லை.!

32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி

32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி

அமேசான் தளத்தில் 32-இன்ச் கொண்ட சாம்சங் Wondertainment Series HD Ready LED ஸ்மார்ட் டிவியை ரூ.13,490-விலையில் வாங்க முடியும். இதுதவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட் டிவியை இன்னும் கம்மி விலையில் வாங்க முடியும்.

இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது 1366x768 பிக்சல்ஸ் மற்றும் 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவி ஆனது பர்சனல் கம்ப்யூட்டர், ஸ்கிரீன் ஷேர், மியூசிக் சிஸ்டம், கனெக்ட் ஷேர் மூவி போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?150 ஆண்டுக்கு முன் வரையப்பட்ட ஓவியம்.. பெண்ணின் கையில் இருந்த iPhone! டைம் டிராவலர் உண்மையா?

 32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

32-இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவி அம்சங்கள்

டால்பி டிஜிட்டல் பிளஸ் ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் ஸ்மார்ட் டிவி. மேலும் இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவி ஆனது ஆண்ட்ராய்டு டிவி இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக யூடியூப், நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!ரூ.22990-க்கு விற்பனை செய்யப்பட்ட டிவி இப்போ இவ்வளவு கம்மி விலையில் கிடைக்குதா? சாம்சங் சரவெடி.!

சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

சியோமி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

அமேசான் தளத்தில் சியோமி 32-இன்ச்(5A Series HD Ready Smart Android LED TV) டிவி மாடலை ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

அதேபோல் ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், PatchWall, 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், குவாட்-கோர்ட் கார்டெக்ஸ் ஏ35 பிராசஸர், வைஃபை,புளூடூத் 5.0, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சியோமி ஸ்மார்ட் டிவிமாடல்.

Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?Samsung, Xiaomi, Nokia-வை ஓரங்கட்டிய Infinix Zero Ultra.! 200MP கேமரா போனே இனி கம்மி விலையிலா?

ஒன்பிளஸ் Y Series HD Ready LED ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் Y Series HD Ready LED ஸ்மார்ட் டிவி

அமேசான் தளத்தில் 32-இன்ச் கொண்ட Y Series HD Ready LED ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி மாடலை ரூ.11,999-க்கு வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர் வசதியுடன் இந்த 32-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன், க்ரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அதிநவீன ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

Amazon தசரா டீல்ஸ்: பக்கா தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்.. உடனே முந்துங்கள்!Amazon தசரா டீல்ஸ்: பக்கா தள்ளுபடியுடன் ஸ்மார்ட்டிவி, ஸ்மார்ட்போன்கள்.. உடனே முந்துங்கள்!

32-இன்ச் ரெட்மி Android 11 Series HD Ready  ஸ்மார்ட் டிவி3

32-இன்ச் ரெட்மி Android 11 Series HD Ready ஸ்மார்ட் டிவி3

அமேசான் தளத்தில் 32-இன்ச் ரெட்மி Android 11 Series HD ஸ்மார்ட் டிவி மாடலை ரூ.10,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,ஆண்ட்ராய்டு டிவி 11 இயங்குதளம், க்ரோம்காஸ்ட் ஆதரவு, குவாட்-கோட் பிராசஸர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

அதேபோல் Vivid Picture Engine, 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற அசத்தலான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்.

5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கிடலாமா?5G போன்கள் மீது இவ்வளவு தள்ளுபடியா? நம்பவே முடியலையே.! உடனே வாங்கிடலாமா?

 எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி  (32LM563BPTC)

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி (32LM563BPTC)

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,980 விலையில் வாங்க முடியும். இந்த எல்ஜி டிவி ஆனது Web OS மூலம் இயங்குகிறது. மேலும் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி டிவி.

குறிப்பாக குவாட்-கோர்ட் பிராசஸர், வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Top 5 Best 32-inch Smart TVs to Buy in India: Here's the List!: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X