2018: இந்தியாவில் வாங்கச் சிறந்த டாப் 5 ஏர் கண்டிஷனர்கள்.!

குறைந்த ஒலியில் செயல்படும் இந்த ஏசி, ஒரு நுண்ணறிவுள்ள அம்சம் மூலம் அறையில் உள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அறிந்து, அதற்கேற்ப அமைப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறது.

|

கோடைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், குளிர்ந்த காற்றை தரும் ஏர் கண்டிஷனர்களுக்கான தேடல் மக்கள் இடையே அதிகரித்து உள்ளது. இந்நிலையில், தற்போது சந்தையில் உள்ள பல்வேறு பிராண்டுகளில், வேறுபட்ட அளவுகள், அம்சங்கள் மற்றும் விலை நிலவரங்களில் உள்ள 5 முன்னணி ஏர் கண்டிஷனர்களைக் குறித்து இந்தக் கட்டுரையில் பட்டியலிட்டு உள்ளோம்.

டாய்கின் இன்வெர்டர் ஏசி (ஜெடிகேஜி60)

டாய்கின் இன்வெர்டர் ஏசி (ஜெடிகேஜி60)

மிகவும் நம்பகமான வாய்ந்த பிராண்டுகளில் ஒன்றாக கருதப்படும் டாய்கின் வழங்கும் இந்த ஏசி, 1.8 டிஆர் என்பதோடு, ஒரு ஆர்32 குளிரூட்டும் வகையைச் சேர்ந்தது ஆகும். இதில் உள்ள கோயன்டா காற்றோட்டம் மூலம் ஏசியின் காற்று உங்கள் தலையில் நேரடியாக வந்து அடிப்பது தவிர்க்கப்பட்டு, அது மேல் நோக்கி அனுப்பப்படுகிறது.

குறைந்த ஒலியில் செயல்படும் இந்த ஏசி, ஒரு நுண்ணறிவுள்ள அம்சம் மூலம் அறையில் உள்ள மனிதர்களின் நடமாட்டத்தை அறிந்து, அதற்கேற்ப அமைப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்து கொள்கிறது. அறையில் யாரும் இல்லாத நிலையில், மின்சார பயன்பாட்டை குறைக்கும் வகையில், 2 டிகிரி வரை தட்பவெப்பநிலையை குறைத்து கொள்கிறது. மேலும் அறையில் உள்ள விரும்பத்தகாத நாற்றம் மற்றும் வைரஸ்களை நீக்கும் ஸ்ட்ரீமர் காணப்படுகிறது. இது ஒரு இன்வெர்டர் மூலம் செயல்படும் வகையில், 5 ஸ்டார்களைப் பெற்றிருந்தாலும், சந்தையில் உள்ள ஒரு சிறந்த தேர்வாக அமையும் வகையில், ரூ.66,900 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசி (ஜெஎஸ்-க்யூ18இசட்யூஇசட்டி)

எல்ஜி இன்வெர்டர் ஸ்பிலிட் ஏசி (ஜெஎஸ்-க்யூ18இசட்யூஇசட்டி)

இந்த ஏசியில் இரட்டை இன்வெர்டர் கம்பிரஸ்சர் இருப்பதோடு, பல்வேறு வேகத்தில் இயங்கும் மோட்டாரை கொண்டுள்ளதால் ஆற்றல் சேமிக்கப்படுவது மட்டுமின்றி, விரைவான குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் 100 சதவீதம் செம்பு மூலம் உருவாக்கப்பட்டு, அதன்மீது சிறப்பான கருப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளதால், மணல், உப்பு, தொழிற்சாலை புகை மற்றும் மாசுகள் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.

இதில் உள்ள எல்ஜி ஸ்மார்ட் திங்க் தளம் மூலம் ஏசியின் செயல்பாட்டை எளிதாக கட்டுப்படுத்த முடியும். மேலும் ஆப்டிமல் அல்ட்ராசோனிக் வேவ் மூலம் கொசுக்களின் வருகை தடுக்கப்படுகிறது. இந்த 1.5டிஆர் ஏசி ஒரு ஆர்-401ஏ குளிரூட்டி வாயுவைக் கொண்டு, 5 நட்சத்திர மதிப்பீட்டையும் 4.73 என்ற அளவிலான ஐஎஸ்இஇஆர் வால்வையும் பெற்றுள்ளது. ஆன்டி பாக்டீரியல் மற்றும் 3எம் நுண்ணுயிரி பாதுகாப்பு வடிகட்டி உடன் ஹிமலையா கூல் தொழில்நுட்பம் மற்றும் காலநிலை இதம் ஆகியவை உள்ளன. இந்தச் சிறப்புகளுடன் ரூ.63,490 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கும் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

 சாம்சங் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏசி (ஏஆர்18என்வி5ஹெச்எல்டிஆர்)

சாம்சங் இன்வெர்டர் ஸ்ப்லிட் ஏசி (ஏஆர்18என்வி5ஹெச்எல்டிஆர்)

ஏர் கண்டிஷனர் பிரிவில் சில நல்ல கண்டுபிடிப்புகளை வெளியிட்டு பிரபலம் அடைந்துள்ள சாம்சங் நிறுவனம், இதிலும் அதை நிரூபித்துள்ளது. இந்த ஏசியில் உள்ள ஒரு தானியங்கி சுத்தமாக்கும் முறை, கிருமிகள் பரவுவதை தடுத்து நாற்றம் இல்லாமல் வைத்து கொள்வதோடு, எல்லா பகுதிகளையும் காய்ந்த நிலையில் வைத்திருக்க உதவுகிறது. இந்த ஏசி குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி, அதிக அளவிலான குளிர்ச்சியை வெளியிடுகிறது. மேலும் டர்போ குளிரூட்டி முறை, ஆன்டி பாக்டீரியல் கோட்டிங், பிஇஇ மதிப்பீட்டில் 5 நட்சத்திரங்கள் மற்றும் ஆர்401-ஏ குளிரூட்டி முறை ஆகிய அம்சங்களைக் கொண்ட இது, ரூ.42,999 விலை நிர்ணயத்தில் விற்கப்படுகிறது.

வோல்டாஸ் விண்டோஸ் ஏசி (185டிஇசட்ஏ)

வோல்டாஸ் விண்டோஸ் ஏசி (185டிஇசட்ஏ)

இந்த விண்டோஸ் ஏசி 1.5 டன் கொள்ளளவை பெற்றுள்ளதால், ஒரு சாதாரண அறைக்கு போதுமானதாக உள்ளது. 5100 டபில்யூ குளிரூட்டும் திறன் இருப்பதோடு, ஆர்22 குளிரூட்டி வகையைச் சேர்ந்துள்ளதால், 50 டிகிரி செல்சியஸ் வரை குளிரூட்டும் தன்மையைப் பெற்றுள்ளது. மேலும் டர்போ முறை, ஆட்டோ ஸ்விங், டைமர் மற்றும் ஸ்லீப் முறை ஆகிய தேர்வுகளைக் கொண்டுள்ளது. இதில் ஒரு பெரிய அளவிலான எல்இடி டிஸ்ப்ளேயும் காணப்படுகிறது. 5 நட்சத்திர மதிப்பீடு பெற்று குறைந்த அளவு ஆற்றலை பயன்படுத்தி, 54டிபி(ஏ) என்ற மிகக் குறைந்த ஒலி அளவே வெளியிடுகிறது. இந்தச் சாதனம் 660 x 430 x 750 மிமீ அளவுகளைப் பெற்றுள்ளது. இதற்கு ரூ.27,850 விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
ஹிட்டாச்சி விண்டோஸ் ஏசி (ஆர்ஏடபில்யூ511கேயூடி)

ஹிட்டாச்சி விண்டோஸ் ஏசி (ஆர்ஏடபில்யூ511கேயூடி)

1 டிஆர் கொள்ளளவு திறன் கொண்ட இந்தச் சாதனம், ஒரு சிறிய அறைக்கு போதுமானதாக உள்ளது. 3500 டபிள்யூ குளிரூட்டும் திறன் இருப்பதோடு, வறண்ட முறை, சக்திவாய்ந்த முறை, ஆட்டோ பவர் சேவ் முறை போன்ற பல்வேறு முறைகள் காணப்படுகின்றன. ஏசியின் உள்ளே பாக்டீரிய வளர்ச்சியை தடுக்கும் கெளவ்கின் ஃபில்டர் காணப்படுவதோடு, அதை எப்போது சுத்தம் செய்ய வேண்டும் என்பதை சுட்டி காட்டப்படுகிறது.

மேலும் ஆன்/ஆஃப் டைமர் உடன் ஸ்மார்ட்-அப், காமின், தேர்ந்தெடுக்கக் கூடிய ஃபேன் வேகங்கள், எல்சிடி வயர்லெஸ் ரிமோட் கன்ட்ரோலர், 50 டிபி ஒலி அளவு, கூடுதல் வெப்ப பரிமாற்றம், குறைந்த புல்-டவுன் டைம், குறைந்த டிரேட்டிங் மற்றும் அமைதியான குளிரூட்டல் ஆகிய மேம்பட்ட அம்சங்கள் காணப்படுகின்றன. இது தவிர, ஒரு ஆண்டு தயாரிப்பு உத்தரவாதம் மற்றும் நான்கு ஆண்டுகள் கம்பிஸ்ஸர் உத்தரவாதம் ஆகியவை அளிக்கப்படுகின்றன. இவை எல்லாம் சேர்த்து ரூ.25,999 விலை நிர்ணயத்தில் கிடைப்பதால், இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Best Mobiles in India

English summary
Top 5 Air conditioners in India, 2018 ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X