Home
Gadgets

கம்மி விலையில் பெஸ்ட் AC.. ரூ.20,000 இருந்தா போதும்.. உங்க வீட்டிற்கு உடனே AC வாங்கலாம்.. எந்த டாப் 5 மாடல்?

கோடைகால சூடு அதிகரிக்க துவங்கியதில் இருந்து, ஏசி (AC) சாதனங்கள் மீது டிமாண்ட் தினம்-தினம் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஏசி வாங்க ஆசைப்பட்ட ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும், அதன் விலை இப்போது இடியை இறக்கும்படி அதிகரித்துக்கொண்டே போகிறது.

இன்றைய நிலையில், 5 ஸ்டார் ரேட்டிங் (5 Star rating AC) உடன் இன்வெர்ட்டர் மற்றும் இதர அம்சங்களுடன் ஒரு ஸ்ப்ளிட் ஏசி (Split AC) வாங்க வேண்டும் என்றால், குறைந்தது ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை செலவாகிறது. இந்த பெருந்தொகையை எல்லோராலும் வழங்க முடியாது என்பதே உண்மை. வீட்டிற்கு ஒரு ஏசியை வாங்கி மாட்டிவிடலாம் என்று மனம்நினைத்தாலும், இவற்றின் விலை பெரும்பாலானோரை வாங்க தடுக்கிறது.

கம்மி விலையில் பெஸ்ட் AC.. ரூ.20,000 இருந்தா போதும்.. டாப் 5 மாடல்

ரூ. 20,000 விலைக்குள் ஏசி வாங்க முடியுமா? வாங்கலாம்.. இதோ டாப் 5 மாடல்:

இருப்பினும், வெய்யிலின் கொடுமையில் இருந்த தப்பிக்க என்ன தான் வழி என்று யோசிக்கும் உங்களுக்கானது தான் இந்த பதிவு. உங்கள் தேவை இப்போதைக்கு சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் இருந்தும், அனல் பறக்கும் காற்றில் இருந்தும் தப்பிக்க உதவும் ஒரு குறைந்த விலை ஏசி சாதனம் தான். இதை அடைய ஒரு வழி இருக்கிறது. 5 ஸ்டார் ரேட்டிங் ஏசிகளுக்கு பதிலாக, 4 மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை வாங்கலாம்.

4 ஸ்டார் ரேட்டிங் மற்றும் 3 ஸ்டார் ரேட்டிங் ஏசியை (3 star rating AC) வாங்கலாமா? என்று உங்களில் சிலருக்கு சந்தேகமிருக்கும். 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் ஏசிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். இவற்றில் ஒரே ஒரு பின்னடைவு, 5 ஸ்டார் ஏசிகளுடன் ஒப்பிடுகையில், இது சிறிதளவு கூடுதல் மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது. ஆனால், இது கையை கடிக்காத குறைந்த விலை பட்ஜெட்டில் வாங்க கிடைக்கிறது.

உங்கள் தேவை அறிந்து, ரூ. 20,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஏசி (Best AC Under Rs 20,000) சாதனங்களை இங்கு பட்டியலிட்டுளோம். புதிதாக ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில் இப்போது நீங்கள், உங்களுக்கு சொந்தமாக ஒரு ஏசியை வாங்கலாம். சரி, இப்போது ரூ. 20,000 விலைக்குள் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஏசி மாடல் எது என்பதை தெளிவாக பார்க்கலாம்.

கம்மி விலையில் பெஸ்ட் AC.. ரூ.20,000 இருந்தா போதும்.. டாப் 5 மாடல்

1. MarQ by Flipkart 1 Ton 3 Star Split AC (FKAC103SFAA):
- 3 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி மாடல்
- இன்வெர்ட்டர் அம்சம் இல்லை
- பிளிப்கார்ட் விலை ரூ.18,888

2. Panasonic 1 Ton 3 Star Split AC (CS-YN12WKYM):
- ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி மாடல்
- இன்வெர்ட்டர் அம்சம் இல்லை
- பிளிப்கார்ட் விலை ரூ.19,245

3. Hyundai 1 Ton 3 Star Split AC - White (HS4F33.GCR-CM):
- 3 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி மாடல்
- இன்வெர்ட்டர் அம்சம் இல்லை
- பிளிப்கார்ட் விலை ரூ.19,499

4. Lloyd 1 Ton 3 Star Inverter Split AC (LS12I31BA):
- 3 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி மாடல்
- இன்வெர்ட்டர் அம்சம் இருகிறது
- பிளிப்கார்ட் விலை ரூ. 18,973

5. Lloyd 1 Ton 2 Star Split AC (LS13B20PC):
- 2 ஸ்டார் ஸ்ப்ளிட் ஏசி
- இன்வெர்ட்டர் அம்சம் இல்லை
- விலை ரூ. 16,652

இந்த ஏசி மாடல்கள் எல்லாம் ரூ.20,000 விலைக்குள் வருகிறது. இன்னுமும் மக்கள் 2 ஸ்டார் மற்றும் 3 ஸ்டார் ஏசியை தொடர்ந்து எந்த இடையூறும் இல்லாமல் பயன்படுத்தி தான் வருகிறார்கள். இதில் இருக்கும் ஒரே ஒரு பின்னடைவு, இது 5 ஸ்டார் ஏசி மாடல்களை விட சற்று அதிகமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்கிறது அவ்வளவு தான். ஆனால், சாமர்த்தியமாகவும் அளவாகவும் பயன்படுத்தினால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Top 5 Air Conditioner Under Rs 20000 To Buy Now In India Via Flipkart and Amazon 3 Star Split AC
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X