மி 4A ஸ்மார்ட் டிவியை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்? இதோ காரணங்கள்.!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு 32 இன்ச் தொலைக்காட்சி வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளருக்கு சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் ஒருசில மாடல்கள் மட்டுமே இருந்தது.

|

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் ஒரு 32 இன்ச் தொலைக்காட்சி வாங்க வேண்டும் என்றால் வாடிக்கையாளருக்கு சாம்சங், எல்ஜி, சோனி மற்றும் ஒருசில மாடல்கள் மட்டுமே இருந்தது. ஆனால் இன்று இந்த நிறுவனங்களுக்கு போட்டி போடும் வகையில் சியோமி மி எல்.இ.டி ஸ்மார்ட் தொலைக்காட்சி 32 இன்ச் திரையில் வெளிவந்துள்ளது. இந்த தொலைக்காட்சிக்கும் ஏற்கனவே மார்க்கெட்டில் உள்ள ஐந்து முன்னணி 32 இன்ச் மாடல் தொலைக்காட்சிகளையும் தற்போது ஒப்பிட்டு பார்ப்போம். முதலில் சியோமி மி எல்.இ.டி. டிவி குறித்து பார்ப்போம்

மி 4A ஸ்மார்ட் டிவியை ஏன் நீங்கள் வாங்க வேண்டும்? இதோ காரணங்கள்.!

மி எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4A (32 இன்ச்- ரூ.13,999) 80செமீ மாடலில் 1366x768 எச்டி ரெசலூசன் உள்ளது. மேலும் இந்த மாடலில் 20W ஸ்பிக்கரும், 60Hz அவுட்புட்டும் கிடைக்கின்றது. மேலும் இந்த டிவியில் 3xHDMI, 2xயூஎஸ்பி மற்றும் ஒரு எதெர்நெட் போர்ட் ஆகியவையும் உண்டு. இந்த ஸ்மார்ட் டிவியில் ஸ்மார்ட் ரிமோட் மற்றும் வைஃபையும் உள்ளது. குவாட்கோர் பிராஸசர் மற்றும் 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ் பவர் கொண்ட இந்த டிவியின் விலை ரூ.13999 மட்டுமே. மேலும் இந்த டிவியில் பேட்ச்வால் ஓஎஸ் இருப்பதால் ஆண்ட்ராய்டு சப்போர்ட் செய்யும் என்பதும் இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் வீடியோவை நேரடியாக பார்க்கலாம்.

சாம்சங் 32J 4003: ரூ.18,999

சாம்சங் 32J 4003: ரூ.18,999

இது ஒரு 1366x768 ரெசலூசன் உள்ள HD டிவி. மேலும் இந்த டிவியில் 2xHDMI மற்றும் 1xயூஎஸ்பி போர்ட் உள்ளது. மேலும் இந்த டிவியில் ஒரு 10W ஸ்பீக்கர் உள்ளது. இதுவொரு ஸ்மார்ட் டிவி இல்லை என்பதால் இதில் வைஃபை வசதி இல்லை.

சாம்சங் 32FH4003: ரூ.20,000

சாம்சங் 32FH4003: ரூ.20,000

சாம்சங் 32J 4003 மாடலுக்கும் இந்த மாடலுக்கும் உள்ள வித்தியாசம் இந்த டிவியில் 100Hz உள்ளதுதான். இதனால் மங்கலான படங்கள் தெரிய வாய்ப்பில்லை. மேலும் இதுவொரு HD அம்சம் உள்ள டிவியாகவும் இதன் ரெசலூசன் 1366x768 என்பதாகவும் உள்ளது. மேலும் இந்த மாடலிலும் 10W ஸ்பீக்கர் உள்ளது. மேலும் இந்த டிவியில் 1xHDMI மற்றும் 1xயூஎஸ்பி போர்ட் உள்ளது. மேலும் இந்த டிவியும் ஸ்மார்ட் டிவி இல்லை என்பதால் வைபை வசதி இல்லை.

சாம்சங் சீரிஸ் 4 32M4000: ரூ.21499

சாம்சங் சீரிஸ் 4 32M4000: ரூ.21499

இந்த மாடலும் ஒரு எல்.இ.டி டிவி என்பதும் இதன் அம்சம் 1366x768 HD மற்றும் ரெசலூசன் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த டிவியில் 2xHDMI and 1xயூஎஸ்பி போர்ட் வசதி உண்டு. இந்த மாடல் டிவியில் இரண்டு ஸ்பீக்கர்க்ள் உண்டு. இதன் அவுட்புட் 10W என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த டிவியில் 50Hz பேனல் உள்ள இந்த மாடலும் முந்தைய இரண்டு மாடல்கள் போல் ஸ்மார்ட் டிவி இலை என்பதால் இந்த மாடலிலும் வைபை வசதி இல்லை.

சாம்சங் UA32M4010DRLXL: ரூ. 23,900

சாம்சங் UA32M4010DRLXL: ரூ. 23,900

இந்த டிவியின் மாடலும் 1366x768 பேனல் மற்றும் இதில் 50Hz ரெஃப்ரஷ் ரேட் உள்ளது. மேலும் இந்த டிவியில் 2xHDMI மற்றும் 1xயூஎஸ்பி போர்ட் உள்ளது. மேலும் சாம்சங் முந்தைய மாடல் போல் இதுவும் ஸ்மார்ட் டிவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இதுவொரு சாம்சங் நிறுவனத்தின் கூட்ம்ப டிவியாகவும் மற்ற டிவியில் இல்லாத 2.0 இண்டர்ஃபேஸ் இதில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் வைபை அம்சம் இதில் இல்லை, இந்த டிவியில் 10W ஸ்பீக்கர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 Samsung 32M5100: ரூ.24,999

Samsung 32M5100: ரூ.24,999

இந்த டிவியின் ரெசலூசன் 1920x1080 என்ற நிலையில் இந்த டிவியில் மற்ற டிவிக்களை விட தெளிவான படம் உள்ளதாக அமைந்துள்ளது. இந்த டிவியில் 10W ஸ்பீக்கர் மற்றும் 50 Hz ரெஃப்ரெஷ் ரேட் பேனல் உள்ளது. மேலும் இந்த டிவியில் 2xHDMI and 1xயூஎஸ்பி போர்ட் உள்ளது. மற்ற மாடல்களை போல இந்த மாடலும் ஸ்மார்ட் டிவி இல்லை என்பதால் இதிலும் வைபை வசதி இல்லை. மேலும் இந்த மாடலில் உங்கள் போனின் மிர்ரை கொண்டு வரும் வசதி உள்ளது. இந்த மாடலில் ஐஒஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் ஓஎஸ் சப்போர்ட் செய்யும் என்பது கூடுதல் வசதி.

How to check PF Balance in online (TAMIL)
 சியோமி:

சியோமி:

எனவே நீங்கள் சியோமி-ன் புதிய மாடலை வேண்டாம் என்று சொல்வதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. இந்த வாய்ப்பை நீங்கள் இழந்தால் உங்களுக்கு இதைவிட வேறு நல்ல வாய்ப்பு கிடைக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் உண்மை.

Best Mobiles in India

English summary
Top 5 32 inch Samsung TVs vs Mi TV 4A 32inch ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X